தைவான் சென்று வந்தேன்
சத்தமான நான்கு முத்தங்கள்!
ஷான்யான் குடும்பம் என்னை மேலும் சில இடங்களுக்கு அழைக்க, நானோ அவர்களிடமிருந்து தப்பிக்கும் மனநிலையில் இருந்தேன்.
“உங்களுக்கு எதில்தான் ஆர்வம்? அங்கு போவோம்” என்று ஒரு பெரிய போடாய்ப் போட்டார் ஷான்யானின் மனைவி.
பேசா மடந்தை என்று நாம் எண்ணிக்கொண்டிருந்த இந்த அம்மணி இந்த நேரத்தில்தானா இப்படி ஒரு மடக்கலான துருப்புச்சீட்டைக் கீழே இறக்க வேண்டும்?
ஒன்று மட்டும் புரிந்தது? இந்தக் குடும்பத்தில் எவருக்குமே என்னைக் கழற்றிவிடும் எண்ணம் இல்லை என்பதே அது.
குடும்பத்தில் நால்வர் என்றால் நான்கும் நான்கு திசைகளுக்கு இழுத்தால் அதில் வியப்பில்லை. நான்கும் ஒரே சாரட் வண்டியில் பூட்டப்பட்ட குதிரைகளாகி நம்மை இழுக்கிறேன்துங்களே! இவர்களின் அன்புப் பிடி (உடும்புப் பிடி)யிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா? சுரேஷ்குமார் கேட்கமாட்டாரா? என்னங்க இப்படி ஒரு தைவானியக் குடும்பத்தோடு இந்த ஒட்டு ஒட்டிக்கொண்டு என்னைக் கழற்றி விட்டுவிட்டீர்களே என்று?
கேட்கமாட்டார். அவருக்கும் ஏதோ ஆய்வு நேரம்; தேர்வு நேரம். அதனால்தான் அவராகவும் பேசக் காணோம். அவரைத் தொந்தரவு செய்யாமல் இந்த ஷான்யான் குடும்பத்தோடு ஒட்டிக்கொண்டு சில பொழுதுகளை ஓட்டுவோம் என்ற முடிவுக்கு வந்தேன்.
“சரி போவோம், நீங்கள் சொல்லுங்கள் எங்கு போவோம்?” என்று நான் வழிக்கு வந்ததைப் பார்த்து இளசுகள் மூனும், டினுவும் “ஊய்” என்று கத்திவிட்டார்கள்.
ஏன் இப்படிக் கத்துதுகள் என்று சுற்றிலும் இருந்தவர்கள் வியப்புடன் பார்க்க, என் முகத்தில் தெரிந்த சிறு அசட்டுக் களையை மட்டும் குறித்துக்கொண்டிருக்க வேண்டும்.
எங்கு போகிறோம் என்று திக்குத்திசை தெரியாமல் வேனில் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்த வேளையில், வேனில் இருநத அமைதியைக் குலைக்கும் வகையில் நான் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு வினவினேன்.
“ஷான்! உங்களை ஒரு விஷயம் கேட்க நினைக்கிறேன். ஆனால் சற்றே தயக்கமாக இருக்கிறது!”
“நாம் எவ்வளவு நெருக்கமாகி (?) விட்டோம்! ஏன் தயங்குகிறீர்கள்?”
“இல்…லை, கேள்வி உங்கள் குடும்பத்தைப் பற்றியது.. என்பதால்.”
இப்படி நான் தயக்கமாய் இழுத்ததும் அவரும் சற்று யோசிப்பார் என்று பார்த்தால் அப்படி இல்லை. என் கணிப்புத் தவறு.
“தாராளமாகக் கேளுங்கள்.”
“வேன் ஓட்டுநர் இருக்கிறாரே!” என்று சாடையால் காண்பித்தேன்.
“ஓ.கே. ஓ.கே! கோ அஹெட்” என்றார்.
சே! என்ன இப்படி. சற்றும் தயக்கம் காட்டமாடேங்குகிறாரே!
“மேலை நாட்டுக் குடும்பங்களைப் போலவே தைவானிலும் வளர்ந்த பிள்ளைகள், பெற்றோரைச் சாராமல் பெற்றோருடன் வாழாமல் விலகி வாழ்ந்து, அவர்களுக்கான வாழ்க்கைத் தேவைகளை அவர்களே கவனித்துக் கொள்ளும் விதமாக வேலைக்குச் சோந்துவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று சொல்லி நிறுத்தினேன்.
இந்நேரம் அவருக்கு நான் என்ன கேட்க வருகிறேன் என்பது புரிந்திருக்குமாதலால், இதுவரை சொன்னதைப் பற்றி அவர் முகத்தில் என்ன பிரதிபலிப்புத் தெரிகிறது என்று உன்னிப்பாகப் பார்த்தேன். முகம் மாறினால் கேள்வியைப் பாராட்டாக மாற்றிவிடுவது; முகம் மாறாமல் இருந்தால் பாராட்டைக் கேள்வியாக ஆக்கிவிடுவது என்று முடிவு செய்தேன். ஷான்யானின் முகம் எவ்விதப் பிரதிபலிப்பும் இல்லாதிருந்தது.
திடீரென்று சற்றே தயக்கம் ஏற்பட்டுவிட, விஷயத்தைக் கேள்வியாகக் கேட்பதைவிட, பாதுகாப்பான முறையில் பாராட்டிவிடுவது என முடிவு செய்தேன்!
“சொல்லுங்க லேனா! ஏன் தயங்கி நின்னுட்டீங்க?” என்று ஷான்யான் சொன்ன வேளையில் மூன்று பெண்களும் என்னையே ஆர்வமுடன் பார்த்தார்கள். அவர்கள் முகத்தில் ஆர்வம் காணப்பட்டதே தவிர, அதிருப்தியோ கோபமோ காணோம். ஒருவேளை நான் கேட்க வந்த கேள்வியை இன்னமும் ஊகிக்க முடியவில்லையோ?
“உங்கள் மகள்கள் மூனும் டினுவும் இவ்வளவு வளர்ந்த பிறகும் உங்களுடன் வாழ்வது எனக்கு உங்கள் குடும்பம் மிகப் பாசமான எங்களது இந்தியக் குடும்ப முறையை நினைவு படுத்துகிறது” என்று சொல்லி முடித்தேன்.
உடனே நால்வர் முகத்திலும் மகிழ்ச்சி அலைகள். அப்பாடா தப்பித்தேன்.
எப்படி நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம் என்று நீ கேட்கப் போயிற்று என்று கோபப்பட்டு, வழியிலேயே இறக்கிவிட்டால் தைப்பே நகரில் பேப்பே! என்று விழிக்க வேண்டியதுதான்! நல்லவேளை வேனுக்குள் மகிழ்ச்சி அலைகள் பரவியிருந்தன.
“நன்றாகச் சொன்னீர்கள். மூனும் டினுவும் பாசமானவர்கள். அவளுக்கு 21. இவளுக்கு 18. இந்நேரம் தனியாகத்தான் வாழந்திருக்கவேண்டும். தைவானில் எங்கள் குடும்பம் உண்மையில் வித்தியாசமானது. எங்கள் மகள்கள் எங்களை விட்டு ஏனோ பிரிந்து வாழ நினைக்கவில்லை. பாசமான மகள்கள். இல்லையாம்மா?” என்று ஷான்யான் கேட்க, ஓர் எதிர்பாராத காட்சி அங்கே அரங்கேறியது.
இரண்டு பெண்களும் தங்கள் அப்பாக்களின் இரு கன்னங்களிலும் சொல்லி வைத்த மாதிரி ஒட்டி வைத்துக்கொண்டு இரண்டிரண்டு முத்தங்களைப் பெரிதாகச் சத்தம் வரும்படி கொடுத்தார்கள்.
தாய்க்காரி பூரிப்புடன் மூவரையும் பார்க்க, தந்தை ஷான் என்னிடம், “பார்த்தீர்களா என் மகள்களின் பாசத்தை?” என்றார்.
என்ன கலாசாரம்டா சாமி இது என்று நான் உள்ளுக்கள் நெளிந்தாலும் ‘ஆமாமா ஹிஹிஹி….’ என்றேன் சமாளித்துக்கொண்டு.
“இங்கே பாருங்கள்” என்றார் ஷான் ஓர் ஆறு மாடிக் கட்டடத்தைக் காட்டி.
“என்னது அது?”
“முழுக்க முழுக்க ஸடாம்ப்ஸ் சேகரிப்பாளர்களுக்கான கட்டடம் இது.”
“புரியவில்லை.”
“இந்த ஆறு மாடிக் கட்டடம் முழுக்க வெறும் ஸ்டாம்ப்ஸ் மட்டும்தான் இருக்கும். 120 நாடுகளைச் சேர்ந்த ஸ்டாம்ப்ஸ்களைச் சேகரித்து மிக அழகுற, பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். போவோமா?”
“வேண்டாம். எனக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லை.”
“தைவான் தபால்துறை நடத்துகிறது இதை. தைவானிய தபால்துறையில் சிறப்பான செயல்பாடுகளையும் உள்ளே காணலாம் வாருங்கள்.”
“ஐயோ! ‘போர்’! ஆர்வமில்லை எனக்கு, விட்டுவிடுங்கள்” என்று சற்றே உரிமையோடு சொன்னேன்.
“உங்களுக்கு ஆர்வமில்லாத எது ஒன்றையும் வற்புறுத்தமாட்டோம். சரிதானே?”
“நன்றி”
“அடுத்து ஒரு விவகாரமான தெரு வழியாகப் போகிறோம்.”
“என்னது?”
“வெறும் இரவு கிளப்புகள்; சூதாட்ட நிறுவனங்கள்; அரைகுறை சமாசாரங்கள்…” கடைசிச் சொல்லை முடித்த கையோடு என்னைப் பார்த்துக் கண்ணடித்தார்.
‘அடப்பாவி மனஷா! மனைவி, வயதுக்கு வந்த பருவப் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இதைப்பத்தி என்னய்யா பேச்சு உனக்கு?’ என்று கேட்கத் தோன்றியது. கேட்கவில்லை. சிரித்து மழுப்பினேன்.
பெண்களோ எங்கள் இருவரையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
“வேறு ஏதாவது சுவாரசியமான இடமாகச் சொல்லுங்கள்.”
“சொல்கிறேன். ஆனால் அந்த இடத்தை நீங்கள் எட்டிக்கூடப் பார்க்கமாட்டீர்கள்?”
“அப்படி என்ன இருக்கிறது அங்கே?”
“சாவுத் தெரு!”
“என்னது சாவுத் தெருவா?”
ஆமாம். இறுதி யாத்திரை, நல்ல அடக்கம் இவை சம்பந்தமாக மட்டும். இங்கு ஒரு தெரு இருக்கிறது? என்னது!
“(என்னய்யா சொல்கிறீர்?) இறுதிச் சடங்குகள் சம்பந்தமாகவே ஒரு தெரு இருக்கிறதா?”
“ஆமாம். நீங்க வரமாட்டீங்கதானே அந்த தெருவுக்கு.”
“அதுதான் இல்லை. நிச்சயம் அந்தத் தெருவை நான் பார்ககணும். அதுவும் காலாற நடந்து பார்க்கணும். விடுங்க வேனை அந்தத் தெருவை நோக்கி!” உடனே தலையில் கையை வைத்துக் கொண்டார் ஷான்யான்.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































