» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 3 Apr 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
()

BUTEA FRONDOSA, ROXB., PAPILIONACEAE

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பாடல் :
நிலநீரோ டாகாசம் அனல்காலாகி
நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்
செய்யார் போற்றோவார்
சலநீத ரல்லாதார் தக்கோர் வாழுந்த
தலைச்சங்கை
நலநீர கோயிலே கோயிலாக
நயந்தீரே.

இலட்சக்கணக்கில் தாவரங்கள் செடி, கொடி, மரங்கள் இருந்தாலும் முருக்கன் மரத்தை மட்டுமே சந்திர பகவானுக்கு சாமி மரமாக ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கு புராணங்கள் விளக்கம் அளிக்கின்றன.

பிரம்மனுக்கும், பார்வதிக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்ட போது, பிரம்மன் தன்னை முருக்கன் மரமாக மாற்றிக் கொண்டதாக உத்திரகனடா, பத்ம புராணா என்னும் நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதன் இலையின் நடுவில் விஷ்ணு, இடது பக்கத்தில் பிரம்மா, வலது பக்கத்தில் சிவன் அமர்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.

தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் நாகபட்டினத்தில் உள்ள விஷ்ணு கோவில்களான தமராய கேசவன் கோவில், செளந்திரராஜர் கோவில், வான்புருஷோத்தமன் கோவில், திருவாரூர் ஸ்ரீநாராயணன் கோவில், நன்மதிய பெருமாள் கோவில், மாதவபெருமாள் கோவில், திருச்சியில் அப்பாகுதந்தம் கோவில், இதேபோல் தஞ்சை அக்னீஸ்வரர் சிவன் கோவில், திருவாரூர் சங்கரனேஸ்வரர் சிவன் கோவில்களிலும் இம்மரத்திற்கு பூஜை செய்யப்படுகிறது.

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே உள்ள விநாயகபுரம், ஓட்டநேரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீநவக்கிரககோட்டை ஆலயத்தில் சந்திர பகவான் கிரகத்துடன் முருக்கன் மரத்தையும் சேர்த்து பூஜை செய்யப்படுகின்றது.

புத்த மதத்தினர் இம்மரத்தின் பூக்களால் நூலைச் சாயம் தீட்டி புனித பூ நூலாகக் கட்டிக் கொள்வார்கள். இதனால் அவர்களின் ஆசைகளையெல்லாம் எரித்து விட்டதாகக் கருதுகின்றனர்.

பிராமணர்கள் ஆண் குழந்தைக்கு பூநூல் அணியும் விழா நடத்துவார்கள். அப்போது முருக்கன் மரப்பொருட்களை விசேஷமாக பயன்படுத்துவார்கள்.

வடநாட்டில் கிருஷ்ணா அஷ்டமி விசேஷங்களில், ஹோலி பண்டிகைகளில், அக்னி பூஜைகளில் முருக்கன் மரத்தைப் பெருமளவில் பயன்படுத்துவார்கள்.

முருக்கன் மரத்தை வட நாட்டில் ‘பலாஸ்’ என்றழைப்பார்கள். நம் நாட்டில் ஆங்கிலேயர்கள் படையெடுத்தபோது வடநாட்டில் ‘பலாஸ்’ என்னும் ஊரில் முருக்கன் மரங்கள் நிறைந்த காடுகளில் ராபர்ட் கிளைவுக்கும், வங்காளத்தின் நவாபுக்கும் போர் நடந்தது. அந்த இடத்தில் செந்நிறப்பூக்கள் நிறைந்த முருக்கன் மரங்கள் இருந்ததால் இந்த மரத்திற்கும் பலாஸ் என்ற பெயர் வந்தது.

முருக்கன் மரத்திற்கு புரசு, காட்டு முருக்கு, வெள்ளைப் புரசு, பொரசு என்று தமிழிலும், பலாஸ் டேசு, பலாஸ்கே பூல், குலே டேசு (பூக்கள்), பலாஸ் பாப்டா (விதைகள்) என்று உருது மொழியிலும், FLAME OF THE FOREST, என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.

முருக்கன் மரம் 9 முதல் 12 மீட்டர் வரை உயரமாக வளரும். இம்மரத்தின் தண்டு, கிளைகள் முறுக்கேறிய நிலையில் கோணலாக வளரும். இலைகள் 7 முதல் 12 செ.மீ. வரை நீளமாகவும், நடுவில் உள்ள இலை 12 முதல் 20 செ.மீ. அகலமும், இரட்டை இலையைப் போல் எதிரெதிராகவும் இருக்கும். இலைகள் 7 முதல்12 செ.மீ வரை அகலமாகவும் இருக்கும். ஜனவரியில் இலைகளெல்லாம் உதிர்ந்து தீப்பிழம்பு போல், செந்நிறத்தில் 4 முதல் 5 செ.மீ. வரை நீளமான பூக்கள் காணப்படும். இது பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரமான இடங்களில் விளைகிறது. இம்மரத்தின் பிசின், பட்டை, பூக்கள், விதை, பிண்ணாக்கு, வேர், இலைகள் அனைத்தும் மனிதனுக்குப் பயன்தரும் வகையில் அமைந்திருக்கின்றது.

முருக்கன் விதைகளின் மருத்துவ குணங்கள்:
பலாஸ் பாப்படா (டாஹ்க்பாப்படா) டாஹ்க் மரத்தின் விதைகளாகும். இது காசளவிற்குப் பெரியதாகவும், வட்டமாகவும், மெல்லியதாகவும் இருக்கும். இதன் மேல்தோல், மஞ்சள் மற்றும் பழுப்பு, வெண்மை கலந்த மஞ்சள் நிறமாகும்.

யுனானி மருத்துவம்:
இயல்பு : உஷ்ணம் - வறட்சி

முக்கிய குணங்கள்:
வாய்வுத் தொல்லையை நீக்கும். வயிற்றுக் கிருமிகளைச் சாகடிக்கும். ஜுரங்களைக் கட்டுப்படுத்தும். புண்களைச் சுத்தம் செய்யும், பாம்புக்கடி விஷத்தை முறிக்கும்.

பயன்படுத்தும் முறை:
வயிற்றுக் கிருமிகளைச் சாகடித்து வெளியேற்றுவதற்காக இதை எரித்தோ அல்லது பவுடராக்கி தனித்தோ அல்லது பிற மருந்துகளுடன் சேர்த்தோ குடிக்கச் செய்வார்கள். ரபா ஜுரத்தைப் போக்க ‘கர்ஞ்சுவா’ பருப்புடன் மாத்திரை தயாரித்து சாப்பிடச் செய்வார்கள். படர் தாமரை நோய்க்கு மேல்பூச்சு மருந்தாகப் பயன்படுகிறது. புண்களில் உள்ள அசுத்தங்களைப் நீக்கி அவற்றைக் குணமாக்குகிறது. கண்நோய்க்கும் இதை மருந்தாகப் பயன்படுத்துவார்கள். இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை ஆண் உறுப்பைத் திடமாக்க பூசு மருந்தாகப் பயன்படுத்துவார்கள். காக்காய் வலிப்பு நோய்க்கு இதைச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்துவார்கள்.

அளவு : 250 மில்லி கிராம் முதல் 1 கிராம்வரை பயன்படுத்தவும்.

சித்தா, ஆயுர்வேத மருத்துவத்திலும் விதைகள் மருந்தாகப் பயன்படுகிறது. விதைகள், வயிற்று நாக்குபூச்சி தொல்லைகளை நீக்குகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. அழுகிய புண்கள் மீதும், சொறி, சிரங்கின் மீதும் விதைகளை அரைத்து,அதன் பவுடரை எலுமிச்சம் சாற்றில் பசையாக்கிப் பூசலாம். சிலருக்கு பரம்பரையாக தலைமுடி உதிர்ந்து வழுக்கையாகிவிடும். முருக்கன் விதையால் தயாரிக்கப்படும் எண்ணெய் வழுக்கையைத் தடுக்கிறது. இதைப் பூசலாம்.

விஞ்ஞான ஆய்வு:
விதையில் புரதம் மற்றும் கொழுபைச் சுரக்கும் என்சைம்கள் உள்ளன. இதில் இருக்கும் ஆறு என்சைம்களில் மானோஸ் பெர்மின் என்னும் ஆர்கிளைப் உள்ளது. இது புழுக்களைக் கொல்லும் குணம் கொண்டது.

முருக்கன் பிசினின் மருத்துவ குணங்கள்:
மரத்தைப் காயப்படுத்தினால் சிவப்பு நிறப் பால் வடியும். இது உலர்ந்தால் கருப்பாக மாறிவிடும். இதனை பெங்கால்கீனோ, ப்யூட்டாகம், கோந்து, பலாஸ் என்று அழைப்பார்கள். தொண்டைப் புண், பேதி, பித்த வாந்தி ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இதைப் பயன்படுத்துவார்கள்.

யுனானி மருத்துவர்கள் இதை மாமருந்தாகப் பயன்படுத்துகின்றார்கள். விஞ்ஞானிகள் இதை ஆய்வு செய்து பார்த்ததில் இதில் ரிபோபிளேவின் (ஒரு கிராம் எடையில் 138.8 மைக்ரோ கிராம்) மற்றும் தையாமின் (ஒரு கிராம் எடையில் 4.3 மைக்ரோ கிராம்) என்ற இரு வைட்டமின்கள் உள்ளன எனத் தெரிய வந்துள்ளது. இப் பிசினில், லியுகோஸையனிடின், புரோஸையனிடின், வழவழப்பு பொருள் ஆகியவை உள்ளன. இதிலிருந்து பைரோ காடகின் (PYROCATECHIN) என்பதை வடித்தெடுக்கலாம்.

முருக்கன் பட்டையின் மருத்துவ குணங்கள்:
பட்டையை இரவில் ஊற வைத்து காலையில் குடிப்பார்கள். மண்டைச் சளி, சைனோசைடிஸ், இருமல், ஆஸ்துமா நீங்கிட இதைப் பயன்படுத்துவார்கள். விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, பார்த்ததில் இதில் நீரில் கரையும் பகுதி 13.80%, டானின் 5.82%, டானின் அல்லாத பகுதி 7.82% மற்றும் இதரப்பொருட்கள் உள்ளன என கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் வாழை இலைக்கு பதிலாக உணவைப் பரிமாற முருக்கன் இலைகளையும் பயன்படுத்துவார்கள். பழங்காலத்தில் இந்த இலைகளைத் தைத்து பாத்திரமாகவும் பயன்படுத்துவார்க்ள. இன்றும்கூட ஓட்டல்களிலும், விசேஷங்களிலும் சாப்பிடுவதற்கு தட்டுகளுக்குப் பதிலாக முருக்கன் இலைத் தட்டுகளை பயன்படுத்துவதைக் காணலாம்.

இலைகளின் மருத்துவ குணங்கள்
1. இலைகள் சொரசொரப்பாகவும், முரட்டுத்தனமாகவும் இருக்கும்.
2. ஆடு, பசுமாடுகள் விரும்புவதில்லை. ஆனால், எருமை மாடுகள் சாப்பிடும்.
3. கேரளா மலைவாசிகள் கிளையின் நுனிகளை கருத்தரிக்காமல் பாதுகாக்க பயன்படுத்துகின்றார்க்ள.
4. இலையைப் பிழிந்து அதன் சாற்றை இருமல், பேதியைக் கட்டுப்படுத்தத் தருவார்கள்.
5. காமத்தை அதிகரிக்க, நீரிழிவு மற்றும் மூலநோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
6. மேகம், வெட்டைச்சூடு, கர்ப்பப்பை புண், பெண்களின் மர்ம உறுப்புகளைச் சுத்தம் செய்ய, இந்த இலைகளின் சாற்றைப் பயன்படுத்துவார்கள்.
7. தொண்டைப்புண், வயிற்று நாக்கு பூச்சிகளுக்கும் இதைத் தருவார்கள்.
8. கட்டிகளைக் கரைக்க இலைகளை அரைத்துப் பூசுவார்கள்.

இலைகளை உலர வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது, இதில் கீழ்க்காணும் புரதச் சத்து உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தப் புரதம் - 14.79
நார்ப்பொருள் - 21.74
கொழுப்பு - 2.50
மாவுப்பொருள் - 53.99
உலோக உப்புக்கள் - 6.68
கால்சியம் - 2.54
பாஸ்பரஸ் - 0.24
ஜீரணிக்கக்கூடிய பகுதி - 52.20

இயல்பு:குளிர்ச்சி - வறட்சி

முக்கியக் குணங்கள்:மலச்சிக்கலை உண்டாக்கும், இந்திரியத்தை அதிகரிக்கச் செய்கிறது. வயிற்றுக் கிருமிகளைச் சாகடிக்கிறது.

பயன்படுத்தும் முறை: முள் முருங்கையின் இலைகள் மற்றும் பட்டைகள் மலச்சிக்கலை உண்டாக்குகின்ற காரணத்தால் பேதி, வெள்ளைப்படுதல், இந்திரியம் வெளிப்படுதல், நீர்த்துப்போன இந்திரியம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தவார்கள். குறுகிய கருப்பையை விரிவடையச் செய்யப் பயன்படுகிறது. இதன் மேல் தோலை கஷாயமாக்கிச் சர்க்கரையுடன் கலந்து அல்வா தயாரித்து சாப்பிட்டால் வெள்ளைப்பாடு, நீர்த்துப்போன இந்திரியம், இந்திரியம் வெளிப்படுதல் போன்ற குறைபாடுகள் நீங்கும்.

முக்கியப் பயன்கள்: ஆண்மைக்குச் சக்தியை அளிக்கும். தடைப்பட்ட சிறுநீரையும், மாதவிலக்கையும் பிரியச்செய்யும்.
தீய விளைவுகள் : குடல்களுக்குப் பயனற்றது.

தீய விளைவுகளைச் சரி செய்யும் முறை: இத்துடன் ரோஜா (குலாப்), பாபுனா, பர்கேஷப்தாலு கலந்து பயன்படுத்த வேண்டும்.

அளவு : துளிர் 3 கிராம் முதல் 5 கிராம் வரை, தோல் 5 கிராம் முதல் 15 கிராம் வரை பயன்படுத்தலாம்.

முருக்கன் பூக்களின் மருத்துவ குணங்கள்:இயல்பு : குளிர்ச்சி - வறட்சி (இலேசான உஷ்ணமிருக்கும்)

முக்கியக் குணங்கள்: வீக்கத்தைக் குறைக்கும். உஷ்ணத்தை அகற்றும், மலச்சிக்கலை நீக்குகிறது. சிறுநீர் மற்றும் மாதவிலக்கைப் பிரியச் செய்கிறது.

பயன்படுத்தும் முறை: சிறுநீர் பிரிய, கர்ப்பப்பை கோளாறு நீங்க மற்றும் விரை வீக்கத்தைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. வெட்டை நோய் மற்றும் வயிற்றப்போக்கு நோய்க்கு இதை ஊற வைத்தோ அல்லது பவுடராகவோ பயன்படுத்துவார்கள்.

அளவு:7 கிராம் முதல் 12 கிராம் வரை பயன்படுத்தலாம். இத்துடன் உப்பு கலந்து பயன்படுத்த வேண்டும்.

விஞ்ஞான ஆய்வு: பூக்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் தேன் திரவம் அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயற்கையான சாயத்தை எடுக்கின்றார்கள். பூக்களில் பல கிளைகோஸைடுகள் உள்ளன. இவற்றில் ப்யூடின், ப்யூடியின், ப்யூட்ரின், ஐஸோப்யூட்ரின், பலாஸிடரின், கோரியயோப்ஸின், ஐஸோ கோரியோப்ஸின், பலாஸிடரின், கோரியோப்ஸின், ஐஸோ கோரியோப்ஸின், ஸல்ப்யூரியின், மானோஸ் பொமோன்ஸடு, ஐஸோமானோஸ் பெர்மோஸைடு உள்ளன. இவற்றில் மிக அதிகமாக இருப்பது ப்யூட்டரின் என்பதாகும்.

கோவில்களில் வளர்க்கப்படும் கல்யாண முருங்கை மரத்தின் மருத்தவ குணங்கள்:
இன்னொரு வகையைக் கல்யாண் முருங்கை என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் INDIAN CORAL TREE என்றும் தாவரவியலில் எரித்திரினா இண்டிகா (ERYTHRINA INDICA LANK) என்றும் அழைப்பார்கள். இவை காட்டு வேலி ஓரங்களில் வேலி அமைக்கப் பயன்படுத்துவார்கள். காப்பித் தோட்டங்களில் நிழலுக்காகவும், மிளகுச்செடிகளை ஏற்றி வளரச் செய்வதற்கும் நடுவார்கள். இதன் இலைகள் கீழே உதிர்ந்து பூமியின் ஈரத்தன்மையைக் காக்கிறது.

கல்யாண் முருங்கை மூன்று வகைப்படும். அவற்றில் ஒன்று முள் முருக்கன், இதில் முட்கள் நிறைந்து இருக்கும். இரண்டாவது வகை முள் இல்லாதது. இம்மரங்கள் காப்பித் தோட்டங்களிலும், மிளகுக் கொடித் தோட்டங்களிலும் இதனை வளர்ப்பார்கள். இவ்வகை மரத்தினை தாதம் என்றும் (ERYTHRINA LITHOSPERMA) அழைப்பார்கள். மூன்றாவது வகை சாதாரணமாகவே இரக்கும். இம்மரத்தின் வகையினை எரித்திரினா சுபரோசா என்பார்கள். இதை மிளகுக்கொடியை ஏற்றுவதற்கு நடுவார்கள்.

கல்யாண் முருங்கை மரம் 14 மீட்டர் வரை உயரமாக வளரும். 3 முதல் 4 மீட்டர் வரை நிழல் தரும். இலைகளும் அந்த அளவிற்கு விரிந்து இருக்கும். இச்செடி நேராக வளரும். அவற்றில் இருந்து கிளைகள் உருவாகும். கிளைகளின் நுனியில் மூன்று இலைகள் இருக்கும். இதனை மும்மூர்த்திகள் என்று இந்து சமுதாய மக்கள் அழைக்கின்றனர். இடதுபுறம் இருக்கும் இலையைச் சிவன் என்றும், வலதுபுறம் இருக்கும் இலையைப் பிரம்மா என்றும், நடுவில் இருக்கும் இலையை விஷ்ணு என்றும் குறிப்பிடுவார்கள். சில கோவில்களில் முருக்கன் மரம் கிடைக்காத நிலையில் கல்யாண முருங்கை மரப்பூக்களையும், இலைகளையும் கடவுளுக்குப் படைத்து வழிபடுவார்கள்.

சித்தமருத்துவத்தில் முருக்கன் மரத்தின் அனைத்துப் பொருட்களும் மாமருந்தாகப் பயன்படுத்துவார்கள்.

முருக்கன் மரம் மெல்லிய செடியாக இருக்கும்போது ஆலமர இலைகளைப் போல் கெட்டியாகவும், அகலமாகவும் இருக்கும். இலையின் மீது மஞ்சள் நிறக் கோடுகள் இருக்கும். தலையில் காவி மற்றும் சிவப்பு நிறம் கொண்ட அழகான பூக்கள் இருக்கும். அவை பார்ப்பதற்கு கண்ணுக்கு குளுமையைத் தரும் வகை
ில் இருக்கும். ஜனவரி மாதத்தில் மூன்று அங்குலம் முதல் ஆறு அங்குலம் வரை பச்சை நிறக்காய்கள் இருக்கும். அது காய்ந்தபின் கருப்பாகக் காணப்படும். முருங்கை வடிவில் இருக்கும் இந்தக்காய் சிறிய வடிவில் இருக்கும். இதன் மேல்தோல் மெல்லியதாக இருக்கும். காய்க்குள் செந்நிற விதைகள் இருக்கும். அவை உருண்டை வடிவமாக காணப்படும். அந்த விதைகளைக் குழந்தைகள் எடுத்து விளையாடுவார்கள். மேலும்.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Most Commented Posts


Leave a Reply