Friday, 27 Mar 2009
புளிக்காய்ச்சல் - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள் :
புளி - 1/2 கிலோ
மிளகாய் வற்றல் - 30
கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 6 தேக்கரண்டி
கடுகு -1 தேக்கரண்டி
கட்டிப் பெருங்காயம் - ஒரு சின்னக்கட்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
எள் - 1 தேக்கரண்டி
மல்லிவிதை - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1-1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
வெல்லம் - ஒரு சின்னக்கட்டி
செய்முறை :
புளியை நிறையத் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது தேவையானால் 1 கப் வேர்க்கடலை போட்டு வேக வைக்கலாம். 20 மிளகாய் வற்றல், பெருங்காயத்தை 1/2 தேக்கரண்டி எண்ணெய்விட்டு வறுக்கவும். வெந்தயத்தையும், மல்லி விதையையும் எண்ணெய் விடாமல் வறுக்கவும். பிறகு வறுத்தவற்றை ஆறவைத்து மிக்சியில் நைசாகப் பொடி செய்யுவம். புளி கொதித்து கெட்டியானதும் இந்த பொடியைத் தூவிக் கிளறி மீதி உள்ள எண்ணெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மீதம் உள்ள மிளகாய் வற்றலையும் தாளிக்கவும். (மிளகாய் வற்றலை இரண்டாகக் கிள்ளித் தாளிக்கவும்) கறிவேப்பிலை போடவும். கடைசியில் தாளித்தால்தான் பருப்புக்கள் ஊறாமல் இருக்கும். புளியோதரை பிசையும்போது, 1/2 தேக்கரண்டி எள் 1/2 தேக்கரண்டி மிளகுப் பொடியை நெய்யில் வறுத்துக் கலக்க வேண்டும். வேர்க்கடலையை புளியில் வேக வைக்காமல் எண்ணெய்யில் பொரித்தும் போடலாம்.
Chettinadu Samayal
2009/03/20 கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































