» Tamanna moves to No1 place? .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Sunday, 22 Mar 2009

Tamanna moves to No1 place?

நம்பர் ஒன்?: தமன்னா பேட்டி

tamanna.jpg

முதல் இடத்தை நோக்கி தடதடவென ஓடி வந்துக்கொண்டிருக்கிறார் தமன்னா. ஆனால் அம்மாயியோ, ‘நம்பர் ஒன், நம்பர் டூ என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை’ என அடக்கம் காட்டுகிறார்.

‘கேடி’யில் லேடி கேடியாக நெகடிவ் கதாபாத்திரத்தில் அறிமுகமான தமன்னா, கொஞ்ச நாளைக்கு காணாமல் போயிருந்தார். கல்லூரி வந்து அவருடைய இமேஜை உயர்த்தியது. அதேநேரம் அவர் தெலுங்கில் நடித்த ‘ஹாப்பி டேஸ்’ பிச்சுக்கிட்டு ஓட, தெலுங்கும் தமிழும் தமன்னா வுக்கு என்று ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுத்தன.

தனுஷ்வுடன் நடித்த படிக்காதவன் படமும் சுமாராக ஓடி தமன்னாவை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தவளாக ஆக்கிவிட்டது.

இப்போது லிங்குசாமியின் இயக்கத்தில், கார்த்தி ஜோடியாக பையா- விலும், ஜப் வி மெட் இந்தி படத்தின் தமிழ் ஆக்கமான ‘காதலைக் கண்டேன்’ படத்தி பரத் ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கும் தமன்னா, இப்போது பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் படம் ஏப்ரல் 3 இல் வெளியாகும் அயன் (சூர்யாவின் ஜோடி).

அயன் மட்டும் அலட்டிக்கொள்ளாமல் ஹிட் அடித்தால் போதும் முதல் இடத்துக்கான போட்டிச் செய்தியில் தமன்னா முதலிடத்தைப் பிடித்துவிடுவார்.

தமன்னாவிடம், ‘முதல் இடம் ஓ.கே. வா?’ என்றால், ”இதே கேள்வியைத்தாம்ப்பா போற இடத்தில் எல்லாம் கேட்கிறாங்க. நான் பிசிதான். அடுத்த ஏப்ரல் வரைக்கும் கால்ஷீட் கிடையாது. அதற்கப்புறம்தான் புதுப்படம் ஒத்துக்கணும்.மற்றபடி, நம்பர் ஒன், நம்பர் டூ என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை (அதெப்படிதான் எல்லா நடிகைகளும் இதேப்போல சொல்றாங்களோ?). அதிர்ஷ்டம் பிளஸ் தலை எழுத்து இருந்தா முன்னணி இடத்தைப் பிடிக்கலாம். இப்போது எதையெல்லாம் ஏத்துக்கிட்டு இருக்கேனோ அதையெல்லாம் திறமையாகவும், சிறப்பாகவும் செய்து முடிப்பதையே முக்கியமாக நினைக்கிறேன்” என்கிறார் அடக்கமாக.

நிஜமாவா?

Related Posts Title


One Response to “Tamanna moves to No1 place?”

  1. SAHFAR THAMMANNA

    I LAIK ON ACTRESS THAMANNA

Leave a Reply