Friday, 20 Mar 2009
கீரைத்தண்டு, மொச்சை, கத்தரிக்காய் புளிக்குழம்பு - அலமேலு ரங்கநாதன்
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் - 100 கிராம்
கீரைத்தண்டு - 2 கட்டு
மொச்சை - 200 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப் பொடி - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - சின்னக்கட்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை :
புளியைக் கரைத்து வடிகட்டி உப்பு, மஞ்சள் தூள்சேர்த்து கொதிக்க வைத்து, கத்தரிக்காய் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் புளியில் வேக வைக்கவும். மிளகாய்ப்பொடி, மல்லிப் பொடி, வெல்லம் கலக்கவும். கீரைத்தண்டில் உள்ள கீரையை எடுத்துவிட்டு தண்டை நறுக்கி தனியாக வேக வைத்து, கொஞ்சம் உப்புப் போட்டு தண்டில் உப்புச் சேர்த்ததும் கத்தரிக்காயுடன் கலக்கவும். பச்சை மொச்சையாக இருந்தால், அதையும் தனியாக வேக வைத்து உப்புபோட்டு கத்தரிக்காய் கீரைத்தண்டுடன் கொதிக்க வைத்து, எண்ணெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் தாளித்து, தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் குழம்பில் போடவும். காய்ந்த மொச்சை என்றால் எண்ணெய் விடாமல் வறுத்து வேக வைக்கவும். அல்லது முதல் நாள் இரவே ஊறவைத்து தோலை பிதுக்கி எடுத்துவிட்டு வேக வைக்கவும்.
Chettinadu Samayal
2009/03/13 மாம்பருப்பு குழம்பு
2009/02/20 எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்பு
2009/02/06 கொத்தமல்லிக் கூட்டு
2009/01/30 கொத்தவரங்காய் கூட்டு
2009/01/23 கோஸ் கூட்டு - இரண்டாவது வகை
2009/01/16 பலாக்கொட்டை கூட்டு
2009/01/09 முட்டைக்கோஸ் கூட்டு
2008/12/12 வெண்டைக்காய் கூட்டு
2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி
2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்
2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை
2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி
2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை
2008/09/19 பூரி உருளைக்கிழங்கு
2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்
2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி
2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்
2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி
2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்
2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்
2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை
2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை
2008/05/09 கறிவேப்பிலைப் பொடி
2008/04/25 மீல் மேக்கர் குழம்பு
2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு
2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு
2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு
2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு
































