தைவான் சென்று வந்தேன்
தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
தைப்பே 101 டவரில் செருப்படிக்கு அடுத்தபடியாக அவமானப் படும்படி ஒரு பெண்ணின் கைப்பையால் அடிவாங்கிய இளைஞன், அவளுக்கு எதிராக ஒரு சிறு எதிர்ப்புக்கூடக் காண்பிக்காமல் அவ்வளவு அடிகளையும் அவளையே பார்த்தபடி வாங்கிக்கொண்டே இருந்தான்.
‘அடப் பாவி! எதிர்ப்புத் தெரிவிடா! அல்லது கெஞ்சுடா! அல்லது மன்னிப்பாவது கேளுடா! ஆண் இனத்திற்கே அவமானடா இது! பொது இடத்தில் இந்த வாங்கு வாங்குகிறாளே, உன் உணர்வைச் சொல்லுடா’ என்று என் மனம் உள்ளுக்குள் குரல் கொடுத்தது.
அவள் தம் கை வலிக்கும்வரை ஓயவே இல்லை. பாவம் அவளது மனவேதனை எவ்வளவு ஆழமானதாக அழுத்தமானதாக இருந்தால் சுற்றுப்புறச்சூழலையும், சுற்றி நின்ற மனிதர்களையும் சற்றும் பொருட்படுத்தாமல் இப்படி நடந்துகொள்ள வேண்டும்.
இதையே அந்த இளைஞன் நிகழ்த்தியிருந்தால் எத்துணைப்பேர் இவளுக்காகப் பரிந்து வந்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்த்தேன்.
ஒருவேளை இது ஒரு தனிப்பட்ட சமாசாரம் என்று ஒதுங்கி நின்று வேடிக்கைதான் பார்த்திருப்பார்களோ!
வலிக்கத்தான் இல்லை. ஆனால் அவமானமாகக் கூடவா இல்லை? ஏன் இந்த இளைஞன் ஒரு சிறு எதிர்ப்பைக் கூடத் தெரிவிக்காமல் இருக்கிறான். கேள்விகளும் பரபரப்புமாய்ப் பின்னி நிற்க, கடைசியில் அந்தப் பெண் அடிப்பதை நிறுத்தி அழ ஆரம்பித்துவிட்டாள்.
இந்த இளைஞனோ அருகில் போய்ச் சமாதானப்படுத்த முயற்சி செய்யவும் இல்லை.
இந்த இளம்பெண் இந்த இளைஞனைப் போட்டு இந்த அடி அடிப்பானேன்?
அவ்வளவு அடிகளையும் வாங்கிக்கொண்டு சும்மா இருப்பானேன்? இவள் அடித்து முடித்து ஓய்ந்து அழ ஆரம்பித்தது ஏன்? அழ ஆரம்பித்த இவளை ஏன் அவன் சமாதானப்படுத்தவில்லை? ஏன் அருகில் சென்று இவளது கண்ணீரைத் துடைக்க முன்வரவில்லை?
வாசகர்களே! உங்களின் நேர்மையை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். இந்த வாக்கியத்தோடு இந்தப் பக்கத்தை மூடி வையுங்கள். என் கேள்விகளுக்கான விடையைக் கண்ணை மூடிக்கொண்டு ஊகியுங்கள். பிறகுதான் என் ஊகத்தை நீங்கள் படிக்க வேண்டும். சரியா?
என்ன ஊகித்துவிட்டீர்களா? என் ஊகத்தைச் சொல்லட்டுமா?
இவளை அவன் சமாதானப்படுத்த முயற்சி செய்யாததிலிருந்து இவளை அவன் அடியோடு கைவிட்டுவிட்டான். இவர்கள் இனிமேலும் காதலர்கள் இல்லை. இவள் சற்று முன்பு வரை இவன்மீது காதல் கொண்டிருந்தாள். அல்லது இவனையே நம்பிக் கொண்டிருந்தாள். இவனோ இவளுக்கு ஏதோ ஒரு வடிவில் துரோகம் செய்து விட்டான். அது சகித்துக்கொள்ள முடியாத துரோகம். இவளது அன்பு மிக அழமானது. இவளால் இந்தத் துன்பத்தை, ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இவன் இவளைச் சமாதானப்படுத்த முன்வராததிலிருந்து தாம் செய்த துரோகத்தோடு இவர்களது காதல் அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.
உங்கள் ஊகம் என்ன? அட! இதேதானோ? நமக்கு இதை உறுதி செய்துகொள்ள வழியில்லை என்றாலும் உடல்மொழிகள்; நடந்த சம்பவங்கள் இப்படித்தான் முடிவுக்கு வரச் செய்தன.
மொழி புரியாத நாட்டில் நாம் வாயிருந்தும் பேசத் தெரியாத ஊனமுற்ற பிரிவினர்தாம்.
சுரோஷ்குமாரை ஓடிப்போய் அழைத்து வந்து என்னதான் நடக்கிறது என்று கேட்டறிந்து விடவேண்டும் என்று பார்த்தால் அந்தப் பெண் விடுவிடுவென்று அருகில் இருந்த லிப்டில் ஏறிக் கொண்டுவிட்டாள். லிப்ட் கதவுகள் மூடுகையில் மறுபடி ஏதோ சபித்தார். மொழி புரியவில்லையே தவிர, தம் வாழ்வே அஸ்தமித்து விட்டதுபோல் அவள் வெளிப்படுத்திய வேதனை என்னை மிகவும் அசைத்துப் பார்த்தது.
செந்தில்குமார் தைப்பே 101 டவர் பற்றி ஓர் அதிசயச் செய்தியைச் சொன்னார்.
வருடந்தோறும் இந்த 101 மாடிகளையும் படியேறிக் கடக்கும் போட்டி நடைபெறுமாம். இதில் வயதானவர்களும் கலந்துகொள்வார்களாம்.
கடந்த ஆண்டுகள் ஏதோ ஒன்றில் ஓர் எண்பது வயதுப் பெரியவர்தான் இந்தப் போட்டியில் ஜெயித்தார் என்று சொன்னால் நீங்கள் எவரேனும் நம்புவீர்களா? சுரேஷ்குமார் சொன்னபோது நான் நம்பினேன். ஒரு வேளை வயது மிகுந்த (!) அனுபவசாலிகளுக்கான போட்டியாக இருக்குமோ? தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது. சாதித்தாலும் சாதிப்பார்கள். 90 வயது வரை தைவானியர்கள் மிக இயல்பாக இருப்பார்களாம். தங்களுக்கு வயதாகிவிட்டது என்று எண்ணவே மாட்டார்களாம்.
உடலைப் பெருக்கவே விடமாட்டார்களாம். உடம்பு சற்றப் பெருத்தாலும் குந்தோட்டம், நடை, நீச்சல், யோகா, நடனம், சைக்கிள் ஓட்டம் என்று தீவிரமாக இறங்கிவிடுவார்களாம்.
சுரேஷ்குமார் தைவானியர்களுக்கு இரசிகர் மன்றமே நடத்துவார் போல! ”உடம்பைப் பார்த்துக் கொள்வதில், அதைப் பராமரிப்பதில் சீனர்களுக்கு இணையாகத் தைவானியர்களைத்தான் நான் சொல்வேன்” என்றார். நாங்கள், தைப்பே 101ஐ விட்டு இறங்கும்போது வெகுநேரம் ஆகிவிட்டது. கட்டடமா இது? இதுவே ஒரு சிற்றூர். அவ்வளவு செய்திகளையும், விஷயங்களையும், அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
பார்க்க வருகிற கூட்டத்தைப் பார்த்தால் இந்த ஐந்து வருடங்களில் தலைக்கு 600 வீதம் பெரும் பகுதிச் செலவை ஈடுகட்டியிருப்பார்கள் என்று தோன்றியது.
சுரேஷ்குமார் பல்கலை விடுதிக்குத் திரும்ப நான் T.Y.M.C.A.வுக்குத் திரும்பினேன். அதாங்க, தைப்பே யெங்மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷன்.
”எங்கு போகணும்?” என்றார் டாக்சிக்காரர் ஆங்கிலத்தில்.
அட, பரவாயில்லையே இவராவது ஆங்கிலத்தில் பேசுகிறாராரே! டி.ஒய்.எம்.எம்.சி.ஏ. என்று சொல்லாமல், ஏதோ ரொம்ப நாளாக தைப்பேயில் வாழும் மனிதனைப் போல கசாங் தெருவுக்கு என்றேன்.
”கசாங் தெருவில் எங்கு போகணும்?” என்று விளக்கமாகக் கேட்டார் அந்த டாக்சிக்காரர்.
‘யோவ்! அதுவே ஒரு 100 மீட்டர் தெரு.இதில் எங்கு என்கிற கேள்வி வேறா?’ என்று எண்ணிக்கொண்டேனே தவிர கேட்கவில்லை.
இதில் சலிப்படைவதற்குப் பதிலாக, துல்லியமாக அறிய விரும்பிய இவரது அக்கறையைப் பாராட்டுவதே சரி என்று இரண்டாவதாக எழுந்த நினைப்பு எனக்கு அறிவுறுத்தியது.
”டி.ஒய்.எம்.சி.ஏ.வுக்கு.”
”சரி சரி”
தைப்பே 101இல் ஏறியதென்னவோ லிப்டில்தான். ஆனால் ஏதோ இமயமலையில் ஏறிவிட்டு வந்தது போல் உடலில் அலுப்பு.
சாப்பிடப் போகக்கூட உடம்பில் தெம்பு இல்லை. கீழே டி.ஒய்.எம்.சி.ஏ.விலேயே உணவகம் உள்ளது என்றாலும் பர்ஸை இளைக்க வைக்கும் இவர்களது விலை நமக்குத் தாங்காது என முடிவு செய்தேன்.
அறைக்குப் போய் பொத்தென்று படுக்கையில் விழுவது; பசித்து நள்ளிரவில் விழிப்பு வந்தால் வெளியில் போய்ச் சாப்பிடுவது, இல்லாவிட்டால் அப்படியே தூங்கிவிடுவது என முடிவு செய்தேன்.
லிப்டில் ஏறியதும் கதவை விரைந்து மூடிக்கொள்ளச் செய்ய இருந்த பட்டனை அழுத்திய போதுதான் ஒரு தைவானியக் குடும்பம் என்னை (சே! லிப்டை!) நோக்கி விரைவதை உணர்ந்தேன்.
உடனே கதவைத் திறக்கும் பட்டனை அழுத்தி அவர்களை உள்ளே வர அனுமதித்தேன்.
இந்தச் செயல் அவர்களுக்கு மிகப் பிடித்துவிட்டது.
”நான் சான்யாஸ். இவள் என் மனைவி. இவர்கள் இருவரும் என் மகள்கள். நீங்கள்?” என்றார், ஏதோ ரொம்பதான் பழகிய சிநேக பாவத்துடன்.
ஒரு தைவானியர் இப்படி என்னை மதித்துப் பேசியது என் தைவானியப் பயணத்திலேயே இதுதான் முதல் முறை.
தமிழ்வாணன் எனறு சொன்னால் உச்சரிக்கச் சிரமப்படுவார்கள் என்பதால் ”ஐ ஆம் லேனா” என்றேன் அவரது கையைக் குலுக்கியபடி. நான் எதிர்பார்க்காத வகையில் அவரது மனைவியும் அவரது மகள்களும் என் கைகளைக் குலுக்க விரும்பி, தங்கள் கைகளைத் தயாராக நீட்டியபோது எனக்கே ஒரு மாதிரியாகத்தான் போய்விட்டது.
இந்தக் குடும்பமும் இந்த அறிமுகமும் நான் கண்கலங்கக் காரணமாக இருக்கப்போகின்றன என்று அந்தக் கணம் நான் நினைக்கவே இல்லை.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































