Responsibility Layer become idiotic
சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?
இவ்வாரம் லேனாவின் பார்வையில் பகுதியை எழுத அமர்ந்தபோது, எனக்குள் எழுந்த மனப்போராட்டத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ரகுமானின் இரு ஆஸ்கார் விருதுகளைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது பெருமிதத்தில் கண்கலங்கிப் போனேன். இதைப் பற்றி எழுதப்போனபோது இந்தியாவே ரகுமானைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டாடுவதால், நாம் தமிழகத்தில் தீப்பொறி பறக்கும் பிரச்னையான வக்கீல்-காவல்துறை மோதலை எடுத்துக் கொள்வதே முக்கியமானது என்று தோன்றியது.
நீதியரசர் கே.ரவிராஜபாண்டியன் அம்பேத்கர் சட்டக் கல்லூரி விழாவில் பேசும்போது, பார் கவுன்சிலுக்குத் தரமான வழக்கறிஞர்கள் வராவிட்டால், இத்தொழிலின் ஒழுக்கமும், அறநெறிகளும் கனவாகப் போய்விடும் என்று குறிப்பிட்டிருப்பது, நிச்சயமாக நீதிமன்ற வளாகத்தில் நடந்த தலைக்குனிவான சம்பவங்களை மனத்தில் கொண்டுதான் என்று தாராளமாக நம்பலாம்.
நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டவர் யார்? என்கிற கேள்விக்கு விடை காண முடியாதபடி மர்மமாகவே இருக்கிறது.
தடியடி நடத்தியிருந்தாலும் கால்களில் அடிப்பதுதானே முறை? அதென்ன தலைகளையே இலக்காக்கி அடிப்பது?
வழக்குரைஞர்களின், பொது மக்களின் வாகனங்களை அடித்து நொறுக்கியவர்கள் காவல் தறையினரே என்பது வழக்குரைஞர்களின் குற்றச்சாட்டு. காவல்துறையினரா மக்களின் சொத்துகளைச் சேதப்படுத்துவது? என்ன வெறித்தனம் இது?
இனி அந்த 100ஐ ஒட்டிய வழக்குரைஞர்களுக்குச் சில கேள்விகள்:
நீதிமன்ற வளாகத்திலிருந்த காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தியவர்கள் வழக்குரைஞர்களே என்கிற குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன?
எதையும் சட்டரீதியாகச் சந்திக்க வேண்டியவர்கள், எதற்காக சுப்பிரமணிய சுவாமியின்மீது தாக்குதல் நடத்தவேண்டும்?
தாக்கியவர்களைக் கைது செய்யும் காவல்துறையின் முயற்சிக்கு வழக்குரைஞர்கள் தடை போட்டதும் எதிர்த்ததும் ஏன்?
இலங்கைப் பிரச்னையைத் தீர்க்க ஐ.நா. தலையிட்டும் பயனில்லை என்று ஆகிவிட்டது இப்போது. கடந்த ஐம்பத்தைந்து நாள்களில் 11 நாள்களே நீதிமன்றத்தை இயங்க அனுமதித்திருக்கிறீர்கள். என்ன நியாயம் இது? உங்கள் போராட்டம் எத்தகைய தீர்வை இலங்கைப் பிரச்னையில் வழங்கிடும் என எதிர்பார்க்கிறீர்கள்?
மூத்த வழக்கறிஞர்கள் எவரும் உங்களுக்கு ஆதரவாக இயங்கவில்லை. ஒதுங்கியே நிற்கிறார்கள் இது ஏன்?
உங்களை நம்பியுள்ள பொது மக்கள் நீதி கிடைக்காமலும், நீதி தாமதிக்கப்பட்டும் சிரமப்படுகிறார்களே, இவர்களுக்கு உங்கள் பதில் என்ன? தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியென்பது நீங்கள் அறியாத ஒன்றா?
உங்கள் சிலரால் 15,000 சென்னை நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கே பெருமை சேரவில்லை என்பதை உணர்ந்துதான் நடந்துகொள்கிறீர்களா?
இவற்றுக்கெல்லாம் நீங்கள் ஆயிரம் சமாதானம் சொல்லலாம். ஆனால் மக்கள் மத்தியில் உங்களைப் பற்றிய மதிப்பீடுகள் என்ன ஆயின என்று களமிறங்கிக் கணக்கெடுத்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்!
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!
2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!
2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?
2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?
2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?
2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்
2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?
2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…
2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!
2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!
2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!
2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!
2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!
2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!
2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..
2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்
2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?
2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்
2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?
2008/09/05 இருபக்க இடைவெளிகள்!
2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!
2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்
2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!
2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?
Related Posts Title
Tags: Layer, அம்பேத்கர் சட்டக் கல்லூரி, ஆஸ்கார், கே.ரவிராஜபாண்டியன், சட்ட வல்லுநர்கள், சட்டரீதியா, தீப்பொறி, நீதியரசர், வக்கீல்-காவல்துறை