Saturday, 28 Feb 2009
வழக்கறிஞர்களுக்குள் விடுதலைப் புலிகள், நக்சலைட் ஊடுருவல் : சுப்பிரமணியசாமி
சென்னை: வழக்கறிஞர்களுக்குள் நக்சலைட், விடுதலைச் சிறுத்தைகள், விடுதலைப் புலிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 5 சதவீதம் பேர் ஊடுருவி உள்ளனர். அவர்களை வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தை உச்ச நீதிமன்றம் விசாரித்து, காவல்துறையினர் நடத்திய தடியடி பிரயோகத்துக்கும், வழக்கறிஞர்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மட்டும் வருத்தம் தெரிவித்தது.
கடந்த 17ஆம் தேதி நீதிமன்றத்திற்குள் என் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தில், 20 வழக்கறிஞர்களின் அநாகரீக நடவடிக்கை பற்றி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.சந்துரு ஆகியோர் எழுத்துபூர்வமாக பதிவு செய்துள்ளனர் என்பதையும் நினைவுபடுத்துகிறேன். இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உள்ளது. உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும்.
சென்னையில் நடக்கும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா விசாரணையின் போது, வழக்கறிஞர்களின் நடவடிக்கை பற்றி புகார் கொடுப்பதற்கு காவல்துறைக்கும் உரிமை உள்ளது. காவல்துறை அதிகாரி ஒருவரின் உடைகளை களைந்தது, பெண் காவலரிடம் தவறாக நடந்தது பற்றியும் காவல்துறையினர் புகார் தெரிவிக்கலாம்.
உண்மை நிலவரம் என்னவென்றால், வழக்கறிஞர்களுக்குள் நக்சலைட், விடுதலைச் சிறுத்தைகள், விடுதலைப்புலிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 5 சதவீதம் பேர் ஊடுருவி உள்ளனர். இப்படிப்பட்டவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி, அவர்களை வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும். ஜனநாயகத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்பித்து ஓடவிடக் கூடாது’ என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

































February 28th, 2009 at 7:38 am
//வழக்கறிஞர்களுக்குள் நக்சலைட், விடுதலைச் சிறுத்தைகள், விடுதலைப்புலிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 5 சதவீதம் பேர் ஊடுருவி உள்ளனர்.//
what the heck… is he out of his mind… man i tell u… india would never develop if you have retards like him.
February 28th, 2009 at 10:46 am
Mr Samy.. u have no way make polities.. u want blame LTTE,r thirumavalavan..for u again Periyar are anna will not born for u only Goatsay are naxals…