கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!
மத்திய அரசும் தமிழக அரசும் வரவு செலவுத் திட்டங்களை வெகுமுன்னதாகவே வெளியிட்டுள்ளன.
மத்திய அரசிற்குத்தான் தேர்தல் காய்ச்சல் என்றால் தமிழக அரசிற்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை.
புது வரிகள் எதுவும் இல்லை என்றால் மக்களுள் பலர் மகிழக்கூடும். ஆனால் நாட்டு நலனைக் கருத்தில் கொள்பவர்கள் இதனை எண்ணி மகிழ முடியாது.
இராணுவத்திற்கு கடந்த ஆண்டைவிட மூன்றிலொரு பங்கு செலவினத்திற்கென அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை எவரும் சுலபத்தில் விமர்சித்துவிட முடியாது என்றாலும் உள்நாட்டில் இத்தொகையைப் பயன்படுத்த முடியாத இக்கட்டான நிலைமைக்கு நம்மை பாகிஸ்தான் தள்ளிவிட்டு, நம் அதிகபட்ச வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டுள்ளது.
பட்ஜெட்டைப் பாராட்டுபவர்கள் எல்லோரும் காங்கிரஸ்காரர்களாகவும் இவர்களின் கூட்டணிக் கட்சிக்காரர்களாகவும் உள்ளனரே அன்றி மற்றவர்களின் பாராட்டைப் பெற முடியவில்லை.
காங்கிரஸ் கட்சி பாமரர்களைப் பற்றி மேடைப் பேச்சுகளில் அதிகம் கவலைப்பட்ட அளவிற்கு பட்ஜெட்டில் அக்கறை காடடவில்லை.
வேலையிழந்துள்ள 20 இலட்சம் பேர்களுக்கு ஏதேனும் வழிவகை செய்திருக்கலாம்.
உலகப் பொருளாதாரப் பின்னடைவை இந்தியா சமாளித்துக்கொண்டிருக்கிற அளவிற்கு உலக நாடுகள் பலவற்றால் முடியவில்லை. நம் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு அப்படி. இந்தச் சாகதமான சூழலைப் பயன்படுத்தி நிலைமைகளை இன்னும் எப்படிச் சீராக்கலாம் என்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
சாதகமான அரசியல் சூழல் நிலவுவதால் தமிழகச் சாலைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், சுகாதாரம், வறுமை ஒழிப்பு, சுனாமி நிதி ஆகிய பிரிவுகளில் தமிழகம் ஓரளவு பலன்களைப் பெறும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளதை நல்ல அரசியல் இலாபமாக எண்ணி மகிழலாம்.
விவசாயத்துறை கவனிக்கப்பட்ட அளவு தொழில்துறை கவனிக்கப்படவில்லை என்று தோன்றுகிறது. தொழில்துறை வளர்ந்தால்தான் நாம் நிமிர்ந்து நிற்கமுடியும். வேலையில்லாத் திண்டாட்டமும் குறையும். ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தும் இலாவகம் பிரணாப் முகர்ஜிக்குத் தெரியவில்லை போலும்.
தமிழக அரசியலின் வரவு செலவுத் திட்டமும் மயிலிறகால் மக்களை வருடிக் கொடுக்கும் விதமாக இருக்கிறது.
தமிழக அரசின் பற்றாக்குறை 11,823 கோடி. மத்திய அரசின் பற்றாக்குறை 3,32,835 கோடி.
சற்றேனும் இவற்றைச் சரிக்கட்டும் முயற்சி வேண்டாமா? அடுத்த ஆட்சி பார்த்துக் கொள்ளட்டும் என்றோ அடுத்த முறை ஆட்சிக்கு வந்தபிறகு பார்த்துக் கொள்வோம் என்றோ நினைக்கிறார்கள் ஆள்பவர்கள்.
வரவு செலவுத் திட்டங்களில் பற்றாக்குறை தவிர்க்க முடியாததுதான். ஆனால் இதைச் சரிக்கட்டும் முயற்சியே இல்லாதது தேர்தல் இலாபத்திற்கன்றி வேறு எதற்காம்?
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!
2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?
2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?
2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?
2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்
2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?
2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…
2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!
2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!
2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!
2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!
2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!
2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!
2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..
2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்
2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?
2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்
2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?
2008/09/05 இருபக்க இடைவெளிகள்!
2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!
2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்
2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!
2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?
Related Posts Title
































March 1st, 2009 at 12:06 am
how come you are not talking about kalamaami viruthu…. why because you are fan of rajinikanth..