தைவான் சென்று வந்தேன்!
இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
தைவானின் மிகப் பெரிய கோயிலான லான்சாங்கிலிருந்து நடக்கிற தூரத்தில் இருக்கிற பாம்புக் கறி மார்க்கெட்டிற்குள் நானும் சுரேஷ்குமாரும் நுழைந்த போது அந்த மார்க்கெட் வெறிச்சோடிக் கிடந்தது.
“சொன்னேன்ல விடுமுறைன்னு”
“முடிக் கிடக்கிற இடத்தில் கூடப் பத்திரிகையாளர்களுக்கு செய்தி புதைந்து கிடக்கும் சுரேஷ்குமார்.”
“அதென்னவோ உண்மைதான்.”
பாம்பு மார்க்கெட் என்பதால் தரையில் காலைப் பதிக்கும்போதெல்லாம் கவனமாகவே இருந்தேன்.
“என்ன லேனா சார், ரொம்பக் கவனமா நடக்குறீங்க? இங்க உள்ள பாம்புகளுக்கு விஷமே இருக்காது. தைரியமா வாங்க.”
“அதானே!” தேவையற்ற அச்சத்தைச் சரியாக நாடிபிடித்துப் பார்த்த சுரேஷ்குமாரைப் பார்த்து அசடு வழிந்தேன்.
இந்தத் தைவானியர்கள் இன்னதைத்தான் தின்பார்கள் என்பதே இல்லையா? இதுவரை பார்த்திராத உயிரினங்களையெல்லாம் பார்த்தேன்.
“பாம்பே காணோமே?”
“வருது வருது!”
வந்தே விட்டது.
ஐயோ! அந்தக் காட்சியை என்னென்று விவரிப்பேன். ஒரு பெரிய வலைப் பெட்டி அது நிறைய கொசக்கொசவென எக்கச்சக்கமான பாம்புகள் எல்லாம் ஒரே இனத்தவை. இதுவரை பார்த்திராத ஒரு மாதிரியான இளம்பச்சை (பிஸ்தா) நிறத்தில் நெளிந்து நுழைந்து கலாட்டா செய்துகொண்டே இருந்தன.
கேமராவைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். அதைப்பார்த்த சுரேஷ்குமார், “சார் கேமராவை எடுத்துடாதீங்க பிரச்னையாயிடும்.”
“அப்படியா? ஏன்?”
“இந்த நவீன காலத்திலும் பாம்பைத் திங்குறாங்க என்பது வெளியாயிரும்னு யோசிக்கிறாங்க!”
“மார்க்கெட்லதான் யாருமே இல்லையே!”
“யாரும் இல்லாட்டி விதியை மீறுறது சரியா லேனா சார்?”
சொரேர் என்றது எனக்கு. ஒரு மாதிரியாக ஆயிட்டேன்.
“இதை வெளியுலகத்துக்குச் சொல்லணும்கிற ஆவலில் தப்பு செய்ய இருந்தேன்.”
“பரவாயில்லை. உங்க கை இந்த மாதிரி மார்க்கெட்டைப் பார்த்தா பரபரக்கும்னு எனக்குத் தெரியும். அதோ வர்றாங்க பாருங்க ரெண்டு பேர்.”
‘அவுங்களைக் கேளுங்களேன் படம் எடுக்கலாமான்னு”
“உங்க திருப்திக்காகக் கேக்குறேன். பதில் என்ன வரும்னு எனக்குத் தெரியும்.”
தைவானிய மொழியில் ஏதோ சுரோஷ்குமார் கேட்க, முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் பட்டவர்த்தனமாகக் காட்டத் தெரியாத அந்தச் சீனர்கள் இருவரும் சட்டென்று டென்ஷன் ஆனார்கள். ஆனால் இரண்டே வார்த்தைகளில் முடித்துக் கொண்டார்கள்.
‘முடியாதுன்னுட்டாங்க” என்றார் சுரேஷ்குமார்.
“உலகத்தில் புகைப்படம் எடுக்க எவ்வளவோ இடங்களில் தடை இருக்கு. ஆனா ஒரு மார்க்கெட் காட்சியைப் படம் எடுக்கக்கூடத் தடைங்கிறதை இங்குதான் பார்க்கிறேன்.”
சுரேஷ்குமார் இதற்குப் பதிலேதும் சொல்லவில்லை. அந்த இரு தைவானியார்கள் சொன்ன இரு சொல் பதிலின் தாக்கத்தில்தான் இன்னமும் இருக்கிறார் என ஊகித்தேன். அப்படியென்ன கடுமையாகச் சொல்லியிருப்பார்கள்? ‘வெளியில் போங்கடா’ என்றா?
நான் கேட்கவில்லை. சொல்லப்போனால், இதுபற்றிய பேச்சைப் பின்பு நான் எடுக்கவே இல்லை.
மார்க்கெட்டின் கடைசிவரை நடந்தோம். கண்ட கண்ட பூச்சிகள், தேள்கள் பார்க்கவே மிரட்டிய சில இனம் புரியாத உயிரினங்கள் என வரிசைகள் தொடர்ந்தன. சில, விற்பனைக் கடைகள், சில அங்கேயே சமைத்துத் தரவல்ல சிறு உணவகங்கள்.
ஓரு வேலை நாளில் வந்திருந்தால் இந்தத் கோலங்களையெல்லாம் பார்த்திருக்கலாமே! போயும் போயும் ஒரு விடுமுறை நாளைத் தேர்ந்தெடுத்தோமே!
மறுபடி வரலாம் என்றால் இரு யோசனைகள். நெடுந்தொலைவு; பெருங்செலவு! மேலும் இன்னும் காணவேண்டிய இடங்கள் வேறு.
வெளியில் வந்துவிட்ட பின்னரும் வகை வகையான உயிரினங்களின் நெளியல்கள், ஊரல்கள் என்னவோ செய்தன.
பாம்புக்கறி மார்க்கெட்டுக்குத்தான் விடுமுறை. வெளியில் ஏகப்பட்ட கடைகள் திறந்தே இருந்தன.
மறுநாள் தைப்பே 101 என்கிற மகத்தான கட்டடத்திற்குப் போனோம். நுழைவதற்கு 400 தைவானிய டாலர்கள். 600 ரூ. என்று வைத்துக்கொள்ளுங்களேன். ஒரு கட்டடத்தைக் காண 600 ரூபாயா? அதுவும் வந்த இடத்தில் செலவுகளைப் பார்த்துப் பார்த்து, நோட்டுகளைத் தேய்த்துக் தேய்த்துச் செலவிடவேண்டிய இடத்தில் ரூபாய் இப்படிப் பறக்கிறதே என்று தோன்றியது. இந்த உணர்வு டிக்கெட் வாங்கிய இடத்தோடு போய்விட்டது. காரணம், இதன் மகத்தான தொழில்நுட்ப வல்லமையின் குழைப்புதான்.
அடேயப்பா! என்ன மாதிரியான பிரமாண்டம். உலகின் மிக உயரமான கட்டடங்களுள் இதுவும் ஒன்று.
தைப்பே 101 என்பது இதன் 101 தளங்களைக் குறிக்கிறது. இதற்கு மேலே 800 டன் எடையுள்ள இரும்பு சமாசாராங்களை ஏற்றி உட்கார வைத்திருக்கிறார்களே, இதனை என்னென்பது!
“ஏன் இவ்வளவு எடையைத் தூக்கி இதன்மீது வைத்திருக்கிறார்கள்?”
“எல்லாம் காரணமாகத்தான். நிலநடுக்கம் வந்தால் இந்த கட்டடத்தை அழுத்திப் பிடிக்க!”
“எடையை ஏற்றிக்கொண்டே போவது நிலநடுக்கத்தின்போது மோசமான விளைவை ஏற்படுத்தாதா?”
“மிகக் கடுமையான நிலநடுக்கம்கூட இதனைப் பாதிக்காதபடி வடிவமைத்திருக்கிறோம் என்கிறார்கள், இதனைக் கட்டிய தைவானியப் பொறியாளர்கள்!”
“ஆச்சரியம்தான்”
“101 மாடி வரை இதன் எடை 70,000 டன்களாம்.”
“ஓ!”
“எப்போது கட்டினார்கள்?”
“2004இல் கட்டி முடிச்சாங்க. கட்ட ஐந்து வருஷம் ஆச்சு.”
“உயரத்தைப் பார்த்தா குறைச்சலான வருஷமாத்தான் தோணுது. உயரம்?”
“509 மீட்டர்கள்.”
“101 மாடி வரைக்குமா?”
“101ஆவது மாடியின் உயரம் 439 மீட்டர் அதுக்குமேலே 70 மீட்டர் இரும்பு சமாசாரங்கள்.”
“இந்தக் கட்டடத்தில் வேறு என்ன சிறப்பு அம்சங்கள்?”
“முதல் ஆறு மாடிகள் வரைக்கும் வெறும் கடைகள் அதாவது ஷாப்பிங் மால்கள்.”
“கூட்டம் வருமா?”
“பார்க்கத்தானே போறீங்க!”
லிப்டில் ஏறினோம். பெரிய லிப்ட் ஏறினதும் தெரியலை; காலை வைத்ததும் தெரியலை. 101ஆவது மாடி வந்துவிட்டது. அப்படி ஒரு வேகம்!
“ஓர் உயரத்திற்கு பொதுவாக லிப்டில் வேகமாக ஏறினா வயித்தை என்னவோ பண்ணும்ல அப்படி எதுவுமே நடக்கலையே சுரேஷ்!”
“அதுதான் தைவானியர்களின் ஸ்பெஷாலிட்டி.”
“உண்மையில் நம்பவே முடியலை. என்னவோ நம்ம நாட்டு லால் மேஜிக் மாதிரி இருக்கு.”
நாங்கள் போன நேரம் ஒரே மேகமூட்டம்.
“சே! வானம் தெளிவா இருந்தா எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! வெறும் புகைமூட்டத்தைக் காணவா இவ்வளவு உயரம் வந்தோம்!” சலித்துக்கொண்டேன்.
என் சலிப்பை மாற்ற சுரேஷ்குமார் ஒன்றைச் சொன்னார். ”டிசம்பர் 31 இரவுதோறும் இந்தக் கட்டடத்தில் ஓர் அதிசயம் நடக்கும்!”
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































