 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
 |
 |
டி.விக்டர், வேலூர்.
|
 |
|
சினிமா, அரசியல் வேறுபாடு?
|
 |
|
இப்போதெல்லாம் சினிமாவில் அரசியல் பண்ணுகிறார்கள். அரசியலில் நடிக்கிறார்கள். சினிமாவில் அதிகாரம், அரசியலில் அரிதாரம்! இதுதான் வேறுபாடு. இதைத் தவிர ஒரு வேறுபாடும் இல்லை.
|
|
 |
 |
 |
 |
நா.வீரப்பன், அம்பத்தூர்.
|
 |
|
தா.பாண்டியனின் காரைத் தாக்கலாமா?
|
 |
|
தவறுதான். தா.பாண்டியன் ஒரு தரமான மனிதர். ஓர் உண்மையான கம்யூனிசவாதி. ஆனால் காவல்துறை தர முன்வந்த பாதுகாப்பை வேண்டாம் என மறுத்துவிட்டு இன்று வருந்திப் பயனில்லை!
|
|
 |
 |
 |
 |
ஆர்.பாப்பம்மாள், மதுரை.
|
 |
|
திரையுலகில் உங்களுக்கு உடன்பாடு இல்லாத விஷயம் எது?
|
 |
|
பலப்பல. ஒன்றை மட்டும் இப்போது தருகிறேன். தமிழகத்திற்கு ஒவ்வாத வெள்ளைத் தோல் நாயகிகளைக் சொல்லலாம். உடல்மொழியும் வாயசைப்பும் படுசெயற்கைகள். கேட்டால் நடிகைப் பஞ்சம் என்கிறார்கள். அழுத்தமான நடிப்பைக் கொடுக்க முடியாத இவர்களால் ஒருபோதும் ஒரு படத்திற்கு வலுச் சேர்க்கிறவர்களாக இருக்க முடியாது.
|
|
 |
 |
 |
 |
வி.குணசீலன், பட்டுக்கோட்டை.
|
 |
|
படிப்பு ஞானம், கேள்வி ஞானம் இரண்டில் எது சிறந்த ஞானம்.
|
 |
|
படிப்பு ஞானம் என்பது கட்டண சேனல். கேள்வி ஞானம் என்பது இலவச சேனல். இந்த விஷயத்தில் இன்று இந்த இலவச சேனல்களே அதிகம் கிடைக்கின்றன.
|
|
 |
 |
 |
 |
சி.டி.நாராயணன், திருவனந்தபுரம்.
|
 |
|
நாகேஷுடன் உங்களுக்கு ஏதும் பரிச்சயம் உண்டா?
|
 |
|
கமலுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது சத்யபாமா பல்கலைக்கழகம். அந்த விழாவில் நாகேஷ் அமர முயன்றபோது எவரும் எழுந்திருக்கவில்லை. (இன்றைக்கு இவர் இறந்தபிறகு ஆய்ஊய் என்கிறார்கள். ஒரு கலைஞனை வாழும் காலத்தில் மதிக்காமல் இன்றைக்கு அவர் படத்திற்குக் கெளரவம் செய்வதா பெரிது?) நான் அமர ஏற்பாடு செய்தேன். நீண்ட நேர விழா. நடுவில் நெளிந்தார். ‘என்ன சார்? என்றேன். ‘நான் நீரிழிவு நோயாளி. சிறுநீர் கழிக்கணும். எழுந்து போனால் இடம் போயிரும். பாத்ரூம் எங்கே இருக்குன்னு தெரியலை’ என்றார். ‘வாங்க சார்’ என்று தேடி விசாரித்து அழைத்துப்போய், கழிவறைக்கு வெளியே காத்திருந்தேன். மறுபடி வந்தால் எங்கள் இருக்கைகளில் யாரோ. மறுபடியும் இடப் பிரச்னை. ‘சொன்னேன் பார்த்தீர்களா?’ என்றார். மறுபடி அமர ஆவண செய்தேன். விழா இடையே எழுந்து புறப்பட நேர்ந்தபோது, என்னிடம் மட்டும் சொல்லிக்கொண்டு புறப்பட்டார். ‘நீங்க செஞ்சது உங்களுக்கு சிறிய உதவியாப் படலாம். எனக்கு அப்படியில்லே! மிகப் பெரிசு. போய்ட்டு வர்றேன்’ என்றார்.அந்த தொனி நடிகர் எதிர்நீச்சல் மாதுவை அப்படியே ஞாபகப்படுத்தியது.
|
|
 |
 |
 |
 |
எஸ்.பன்னீர், சென்னை-14.
|
 |
|
இனி அரசியல் கட்சிகள் டி.வி. தொடங்க அனுமதி கிடையாது என மத்திய அரசு அறிவித்திருக்கிறதே?
|
 |
|
இருக்கிற தலைவலிக்கே இப்போது தலைமுழுக்க அக்குபங்சர் ஊசிகள்! மேலும் இதைப் பொத்தலாக்க வேண்டுமா என்பது மத்திய அரசின் யோசனை. வரவர மத்திய அரசுக்கும் சிந்தனாசக்தி வளர்கிறது. யாரோ இதை வளர்க்கிறார்கள். அவர்களை நாம் பாராட்டவேண்டும். ஆனால் ஒன்று அரசியல் கட்சிகள் இனித் தனிமனிதர்களின் போர்வையில் அலைவரிசை தொடங்கப்படுவது நிச்சயம். விதிகளின், நிபந்தனைகளின், சட்டதிட்டங்களின் ஓட்டைகளைப் பயன்படுத்த நம்மவர்களுக்கா சொல்லித் தரவேண்டும்.
|
|
 |
 |
 |
|
 |
 |
 |
 |
பி.யோகநாதன், பெரம்பூர்.
|
 |
|
அரசு அலுவலகங்களில் தொடர்ந்து கட்டுக்கட்டாகப் பணம் சிக்கி வருவது பற்றி?
|
 |
|
நீதிதேவன்கள் இருக்க வேண்டிய இடத்தில் நிதி தேவர்கள் இருக்கிறார்கள். அம்மாவுக்குத் தெரிந்தும் ஏன் சும்மா இருக்கிறார்? இதுதானா இன்றைய (கருணா)நிதி ஆட்சியின் மாட்சி என்று ஏன் கேட்க ஆரம்பிக்காமல் இருக்கிறார்.
|
|
 |
 |
 |
 |
பி.ரேஷ்மா, சென்னை-60.
|
 |
|
பள்ளிக் குழந்தைகளின் சண்டைகளை ரசிப்பதுண்டா?
|
 |
|
அந்தச் சண்டைகள் எதற்கு? பனித்துளி மாதிரி உப்பு சப்பில்லாமல் அல்லவா இருக்கும். நமது தேர்தல் ஆணையர்களின் சண்டை போல இருந்தால் வேலைகளைக்கூட ஒதுக்கி வைத்துவட்டு வளமாக ரசிக்கலாம். என்ன சொல்றீங்க?
|
|
 |
 |
 |
 |
எஸ்.கண்ணன், பொன்னேரி.
|
 |
|
இலங்கை விஷயத்தில் இந்தியாவில் என்னதான் நடக்கிறது?
|
 |
|
மாநிலத்திலும், மத்தியிலும் நிறைய சபாக்கள் தோன்றி, அதனதன் சக்திக்கு முச்சந்தியிலும், நாற்சந்தியிலும் நாடகங்களை நடத்திக்கொண்டிருக்கிறது. அதாவது உங்களுக்குத் தெரிந்தது சென்னை சங்கமம் மட்டும்தானே? இப்போது இந்திய சங்கமமே நடக்கிறது.
|
|
 |
 |
 |
 |
ஆர்.கிருபாகரன், உடுமலைப்பேட்டை.
|
 |
|
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் என்ன அரசியல்?
|
 |
|
சோயிப் மாலிக் என்கிற இளைஞரை கேப்டனாக்கியதில் ஏகப்பட்ட பிரச்னை. ஜாவேத்மியன்தாத் வேறு தம் அதிகாரத்தில் எவரும் தலையிடக்கூடாது என்று தனிக் கச்சேரி செய்கிறார். ஒரு நல்ல கிரிக்கெட் நாடு வீண் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கிறது.
|
|
 |
 |
 |
 |
தேவிஇந்திரா, சாத்தான்குளம்.
|
 |
|
செல்போனால் ஆபத்து என்பது வீணாகக் கட்டிவிடப்பட்ட கதைதானே?
|
 |
|
இல்லை. சீனாவில் மட்டும் செல்போன் வெடித்து ஒன்பது சம்பவங்களில் ஒன்பது பேர் இறந்திருக்கிறார்கள். செல்போன் பயன்பாட்டை பில்லுக்காக மட்டுமல்ல, உடல்நலத்திற்காகவும் கூடக் குறைத்தே பயன்படுத்தவேண்டும்!
|
|
 |
 |
 |
 |
ஆ.குமரேசன், பரங்கிமலை.
|
 |
|
இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாருக்கு சென்னைக் கடற்கரையில் சிலை வைக்கவேண்டுமென ஒரு அமைப்பு கோரியுள்ளதே?
|
 |
|
இதற்கெல்லாம் தனித்தகுதிகள் வேண்டும். இல்லாவிட்டால் கடற்கரை வரிசையில் சிலை வைத்துக் கட்டுப்படியாகாது.
|
|
 |
 |
 |
|
 |
 |
 |
 |
ஏ.அருணாசலம், செங்கல்பட்டு.
|
 |
|
ஆட்சியைக் கவிழ்க்க ராமதாஸ் சதி செய்கிறார் என்கிறாரே கலைஞர்?
|
 |
|
நேற்றையத் தலைவலியைப் போக்கிய அதே தைலம்தான் இன்றைக்குத் தலைவலி தருகிறது என்றால் இதைக் கேட்கும் நமக்கே தலைவலிக்கிற மாதிரி இருக்கு. தைலாபுரத்துக்காரரைச் சமாளிப்பது சாமானியமில்லைதான்!
|
|
 |
 |
 |
 |
எஸ்.சங்கரபாண்டியன், எட்டயபுரம்.
|
 |
|
8 தங்கப்பதக்கங்களை வென்ற நீச்சல் விரர் பெல்ப்ஸிற்கு வந்த சோதனையைப் பார்த்தீர்களா?
|
 |
|
போதை மருந்துப் பழக்கத்தை வாழ்க்கையில் எதுவும் தவறல்ல என்று எண்ணும் நாடே கண்டிக்கிறது. தண்டிக்கிறதே, இது பாராட்டப்படவேண்டிய விஷயம். திறமையைவிட ஒழுக்கம் முக்கியம் என்று அமெரிக்காவே வலியுறுத்துகிறது. உலக மக்களே! அறிக! தெளிக!
|
|
 |
 |
 |
 |
டி.சுந்தாமூர்த்தி, சாத்தூர்.
|
 |
|
இலங்கைத் தமிழர்களின் இன்னல்களுக்கு என்ன காரணம்?
|
 |
|
சாதி சமய உணர்வுகளினால் துண்டாடப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் இயல்புதான் காரணம். இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. இதைச் சொன்னால் தமிழகத் தமிழர்களுக்கு அந்த உண்மைகளை ஜீரணிக்க முடியாமல் அஜீரணக் கோளாறே வந்துவிடும்!
|
|
 |
 |
 |
 |
எஸ்.ஜெகதீசன், திண்டிவனம்.
|
 |
|
பிரதமரை விமரிசிக்க யாருக்கும் தகுதியில்லை என்று தங்கபாலு கூறியுள்ளாரே?
|
 |
|
இதற்குப் பாத்தியதைப்பட்டவர்கள் நாங்கள் (பத்திரிகையாளர்கள்) இருக்கிறோம் தங்கபாலு சார்!
|
|
 |
 |
 |
 |
மு.பாஸ்கரன், மதுரை-2.
|
 |
|
ஒபாமாவிடம் பிடித்த விஷயம்?
|
 |
|
இருபதாண்டு சிகரெட் பழக்கத்தைப் பதவி ஏற்ற அன்று முதல் தூக்கி எறிந்தாரே அதைச் சொல்வதா? தீவிரவாதிகளின் தலைமையகம் உங்கள் நாடுதான். நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அமெரிக்கா களத்தில் இறங்கும் என்று போக்கிரி நாடான பாகிஸ்தானை நேரிடையாக எச்சரித்தாரே, அதைச் சொல்வதா? எதைச் சொல்ல? எதை விட?
|
|
 |
 |
பி.ஸ்ரீநிவாஸன், ஈரோடு.
|
 |
|
தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாகிவிட்டதே?
|
 |
|
ஆமாம்! கிறிஸ்துவர்கள் மாதிரி மக்களுக்கான ‘எழுப்புதல் கூட்டங்கள்’ நடத்த இவர்களும் தயாராகிறார்கள். இரண்டு மாதங்களாவது எழுப்பினால்தான், ஆறு மாதக் கும்பகர்ணன்களுக்குத் தூக்கம் கலையும்.
|
|
 |
|
|