மன்றத்தில் மோதிய சட்டமும் காவலும்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், வக்கீல்கள், போலீசார் மட்டுமின்றி, உயர்நீதிமன்ற நீதிபதியும் காயமடைந்தார். போலீஸ் நிலையம் தீக்கிரையானது.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, கோர்ட் ஹாலுக்குள் இரண்டு நாட்களுக்கு முன் தாக்கப்பட்டார். அவர் மீது முட்டைகள் வீசப்பட்டன. சம்பவத்தை பதிவு செய்த நீதிபதிகள், தகுந்த விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.இதையடுத்து, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, வக்கீல் கினிலியூ மானுவேல் கைது செய்யப்பட்டார். மேலும் சில வக்கீல்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில், சுப்ரமணியசாமிக்கு எதிராக, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் வக்கீல் ரஜினிகாந்த் பெயரில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என வக்கீல்கள் வலியுறுத்தினர். பின், போலீஸ் நிலையத்தை விட்டு அவர்கள் வெளியே வந்தனர்.சாமி தாக்கப்பட்ட வழக்கில் அவர்களை கைது செய்வதாக போலீசார் தெரிவித்து, வேனில் ஏறுமாறு கூறினர். போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் வாக்குவாதம் நடந்தது. வக்கீல்கள் அதிக எண்ணிக்கையில் கூடினர். போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் மோதல் துவங்கியது.போலீசார் மீது கல் வீசப்பட்டது. வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இரு தரப்பிலும் பலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. போலீசாரும் கற்களை எடுத்து வக்கீல்கள் மீது வீசினர். இருதரப்பிலும் கற்கள் பறந்தன. சிவில் கோர்ட், செஷன்ஸ் கோர்ட் வளாகத்துக்குள் லத்தியுடன் அதிரடிப்படை போலீசார் புகுந்தனர். அங்கிருந்த வக்கீல்களும், ஊழியர்களும் தாக்கப்பட்டனர்.நாலா திசையிலிருந்தும் கற்கள் பறந்தன.
போலீசார், வக்கீல்கள் மோதலில் வழக்கு விசாரணைக்கு வந்திருந்த அப்பாவி பொதுமக்கள், சம்பவத்தை பதிவு செய்ய வந்த பத்திரிகையாளர்கள் என எவரும் தப்பவில்லை.
நீதிமன்ற கண்ணாடி கதவுகள் சேதப்படுத்தப்பட்டன. சிவில், செஷன்ஸ் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கோர்ட் வளாகத்தை விட்டு போலீசாரை வெளியேற்ற வேண்டும் என வக்கீல்கள் கோஷமிட்டனர்.பதிவாளர் விஜயன் அங்கு வந்து, வக்கீல்களை சமாதானப்படுத்தினார். போலீசாருடன் பேசுவதற்காக அவர் சென்றார். அவருடன் வக்கீல்களும் சென்றதால், போலீசார் மீண்டும் அவர்களை நோக்கி பாய்ந்தனர்.
உயர்நீதிமன்ற நீதிபதி சுதாகர், அங்கு வந்து வக்கீல்களை சமாதானப்படுத்தினார். நீதிபதிகள் ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன், மோகன்ராம், ஜோதிமணி, ரகுபதி, சுதாகர் ஆகியோர் சேர்ந்து வந்தனர். போலீசாரிடம் பேசுவதற்கு நீதிபதிகள் முயன்றனர். அதற்குரிய சூழ்நிலை அங்கு இல்லை. போலீசாரை நோக்கி நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் முன் சென்றார். அவர் மீதும் கல் வீசப்பட்டது.தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாயா, நீதிபதிகள் தனபாலன், சசிதரன் உள்ளிட்ட நீதிபதிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களைச் சுற்றி வக்கீல்கள் நின்றுக் கொண்டனர். தாங்கள் தாக்கப்பட்டது குறித்து நீதிபதிகளிடம் முறையிட்டனர்.
அப்போது, அதிரடிப்படை போலீசார் ஓடி வந்தனர்.போலீசார் ஓடி வருவதைப் பார்த்த நீதிபதிகள் அங்கிருந்து அகன்றனர். நீதிபதிகளின் தனி பாதுகாப்பு அதிகாரி, ஊழியர்கள், நீதிபதிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். ஒரு நீதிபதியின் அலுவலக ஊழியரை போலீசார் தாக்கியதில் காயம் ஏற்பட்டது.கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. வாகனங்கள் சிலவற்றுக்கும் தீ வைக்கப்பட்டது. போலீசார், வக்கீல்கள் மோதலினால் ஐகோர்ட் வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது. கண்ணாடிச் சிதறல்கள், அடித்து நொறுக்கப்பட்ட கார், இருசக்கர வாகனங்கள், வளாகத்தில் காணப்பட்ட கற்கள் மற்றும் மோதலின் போது ஓடியவர்கள் விட்டுச் சென்ற செருப்புகள், ஐகோர்ட் வளாகத்தில் இதுவரை காணாத அசம்பாவிதத்தை வெளிப்படுத்தியது.மாலை 4 மணிக்கு துவங்கிய கடும் தாக்குதல், இரவு 7 மணி வரை நீடித்தது. ஐகோர்ட், சிவில் கோர்ட் வளாகத்துக்குள்ளும் அதிரடிப்படை போலீசார் புகுந்து, அங்கிருந்தவர்களை விரட்டினர். மாலை 6 மணியளவில், கோர்ட் ஊழியர்கள் சிலரை, போலீசார் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்று விட்டனர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் போலீசாரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.இதனிடையே சற்று அமைதி திரும்பிய பின், உள்துறைச் செயலர் மாலதி, டி.ஜி.பி., ஜெயின் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் தலைவர்கள் தலைமை நீதிபதியை சந்தித்து நிலைமையை விளக்கினர்.
சென்னை ஐகோர்ட்டில் வக்கீல், போலீஸ் இடையே மோதல் ஏற்பட்ட சில நிமிடங்களில் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தை அடைந்தார். வக்கீல்கள் வீசிய கல், கமிஷனரின் ஹெல்மெட்டில் பட்டு தெரித்தது.தலையில் ஹெல்மெட் அணிந்த சில உயர் போலீஸ் அதிகாரிகள், ஓரமாக நின்றனர். ஆனால், கமிஷனர் ராதாகிருஷ்ணனும், கூடுதல் கமிஷனர் விஸ்வநாதனும் களத்தில் முதல் ஆட்களாக நின்று போலீசாருக்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஐகோர்ட் நீதிபதிகள் நேரில் பார்த்தனர்.நேற்றிரவு அரசு மருத்துவமனைக்கு நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, ஜோதிமணி, ரகுபதி சென்று, காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களைப் பார்த்தனர். பின், ‘டீன்’ அறைக்குச் சென்று ஆலோசனை நடத்தினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி தலைமை நீதிபதியை சந்தித்துப் பேச விருப்பம் தெரிவித்துள்ளார். கருணாநிதி தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில்,
‘ஐகோர்டில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தலைமை நீதிபதி சந்திக்க விரும்பினால், ஆம்புலன்சில் வந்து கூட சந்திக்கத் தயாராக உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதி, சென்னை ஐகோர்ட் தற்காலிக தலைமை நீதிபதி முகோபாதயாவுக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:முன் எப்போதும் இல்லாத வகையில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. நிலைமையைக் கண்காணித்து தங்களுக்கு உதவ தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் மற்றும் டி.ஜி.பி., ஆகியோரை அனுப்பியுள்ளேன்.
வக்கீல்கள் மீது தவறு உள்ளதா, போலீசார் மீது தவறு உள்ளதா என்பதையும், இந்தச் சம்பவத்திற்கான அடிப்படை காரணத்தையும் கண்டறியுமாறு கூறியுள்ளேன்.
இந்த நேரத்தில் உங்களது ஒத்துழைப்பு எனக்கும், அரசுக்கும் மிக முக்கியமானது. வன்முறைச் சம்பவங்களில் நீதி கிடைப்பதை உறுதி செய்யவும், அமைதி திரும்பவும் உங்களது மதிப்புமிக்க ஆலோசனையை எதிர்பார்க்கிறேன். நான் தற்போது மருத்துவமனையில் இருந்தாலும், இப்பிரச்னை தொடர்பாக நீங்கள் என்னை சந்திக்க விரும்பினால், ஆம்புலன்சில் வந்து கூட உங்களைச் சந்திக்க தயாராக உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
Related Posts Title
































February 20th, 2009 at 6:57 am
My sympathies are fully with the Police. If they remain mute spectators (remember the students rampage a few weeks ago?), they get criticised. If they take action based on the situation at the scene of action then too they get censured. What does anyone expect Policemen to do?
Who did the provocation first - inside the court on day 1, that too in the presence of the judges? Egg-throwing etc (not that the act is justified) could have been resorted to outside the court premises? Having done the crime, whoever did it surely has to be punished? How can they prevent the Police from taking action against the offenders? They, being the law-keepers, should be the role-models for the common man. Surely, no justification for acting the way both the parties have acted.
May good sense prevail at least now, and the warring parties resort to non-violent means to resolve the stale-mate.
From:
A non-partisan common man.