» Essential… .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 13 Feb 2009

Essential…

bowel-cancer.jpgஅவசியம்… அவசியம்…

பெண்களுக்கு எளிதாகப் பெருங்குடல் புற்றுநோய், மற்றவகைப் புற்று நோய்களும் வருகின்றன. இதைத் தடுக்க மல்ட்டி வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவது நல்லது.

குறிப்பாக மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளில் ஃபோலிக் அமிலம் என்று பி குரூப் வைட்டமின் 400 மைக்ரோ கிராம் அளவு கலந்திருக்கும்.

ஹார்வர்டு பல்கலைக்கழகம் 88,756 பெண்களை பதினைந்து ஆண்டுகள் ஆராய்ந்தது. இவர்கள் தினமும் ஒரு மல்ட்டி வைட்டமின் சாப்பிட்டு வந்தவர்கள். இவர்களைப் பரிசோதித்ததில் பெருங்குடல் புற்றுநோய் அபாயம் இவர்களுக்கு 75% குறைந்திருந்தது. காரணம், இந்த வைட்டமின் குணப்படுத்தும் இயல்புகளைக் கொண்டது. இதனால்தான் டாக்டர்கள் கர்ப்பிணிகள் பிறவிக் குறைபாடு இல்லாத குழந்தையைப் பெறத் தினமும் 400 மைக்ரோ கிராம் அளவுள்ள ஃபோலிக் அமில மாத்திரையைச் சாப்பிடச் சொல்லி வருகின்றனர்.

வாரத்திற்கு இரண்டொரு நாள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயம் 20% குறையும். தொடர்ந்து 5 ஆண்டுகள் சாப்பிட்ட பிறகே இந்த நன்மை கிடைக்கும். எனவே, டாக்டர் ஆலோசனைப்படி தினமும் சாப்பிடுவதே நிரந்தர பலனைத் தரும்.

எனவே, தினமும் எல்லா வைட்டமின்களும் கலந்துள்ள மல்ட்டி வைட்டமின் மாத்திரை ஒன்று சாப்பிடலாம்.

இல்லையெனில், தனியாக 400 மைக்ரோ கிராம் அளவுள்ள ஒரு ஃபோலிக் அமிலம் மாத்திரை (வைட்டமின் பி9) சாப்பிடலாம். பொதுவாக 100 மைக்ரோ கிராம் அளவுள்ள மாத்திரைகளே சிபாரிசு செய்யப்படுகின்றன.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாடு நிறுவனம் ரொட்டி வகைகள், மாவு வகைகள், தானிய உணவுகள் முதலியவற்றில் இந்த ஃபோலேட் வைட்டமின்களை (பி9)யும் சேர்த்து உணவுக்கு சத்தும் உரமும் அளித்து விற்பனைக்கு அனுப்ப இப்போது கேட்டுக் கொண்டுள்ளது.

பழங்கள், காய்கறிகள், கீரை, பயறு வகைகள் உணவில் நன்கு சேர்த்தால் இந்த வைட்டமின் தங்கு தடையின்றி உடலுக்கு கிடைக்கும்.

பெண்களைவிட ஆண்களுக்கு மனக்கவலை அதிகம். தரமான வாழ்க்கை வாழவும், குடும்பத்தோடு ஜாலியாக இருக்கவும், நன்கு சிந்திக்கவும் இதயத்துக்கு இரத்தம் சீராகச் செல்லவும் இந்த பி9 வைட்டமின்னே உதவுகிறது. மூட்டுவலி, நெஞ்சுவலி, கால், கை வலியின் போது இந்த மாத்திரையை வலி நிவாரணியாக பயன்படுத்துவது நல்ல பலனைத்தரும். மூளை வளர்ச்சி இல்லாத மற்றும் மந்தமான குழந்தைகள் நல்ல மனநிலையை அடைய இந்த வைட்டமின் மாத்திரைகள் உதவும். கொண்டைக்கடலை, உளுந்தம் பருப்பு, காராமணி, மொச்சை, முட்டை, கீரை வகைகள் முதலியவற்றில் இந்த வைட்டமின் தாராளமாக உள்ளது. மாத்திரை வேண்டாம் என நினைப்பவர்களுக்கு இது நல்லதொரு மாற்று.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Related Posts Title


One Response to “Essential…”

  1. valaipookkal

    Hi

    உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

    உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.

    வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

Leave a Reply