» Vennila Kabadi Kuzhu - Movie Review .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 6 Feb 2009

Vennila Kabadi Kuzhu - Movie Review

வெண்ணிலா கபடி குழு: திரை விமரிசனம்

vennila-kabadi-kuzhu.jpg

நடிப்பு: விஷ்ணு கிஷோர், சரண்யா மோகன், ‘பொல்லாதவன்’ கிஷோர்
இயக்கம்: சுசீந்திரன்
இசை:செல்வகணேஷ்
ஒளிப்பதிவு:லஷ்மணன்

படி விளையாட்டை தனது உயிருக்கு உயிராக நேசிக்கும் கதாநாயகன் அதற்காகவே உயிரைவிடும் கதை.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த விஷ்ணுவுக்கு கபடி என்றால் உயிர். வேலை நேரம் போக கபடியும், காதலுமாகத் திரிகிறார்.

முடிவில், அவருடை கபடி வெறியும், காதல் துடிப்பும் என்னவாயிற்று என்பதை மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

அறிமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார் நாயகன் விஷ்ணு கிஷோர். இளம்நாயகர்கள் வரிசையில் நிச்சயம் இடம்பிடிப்பார்.

கதாநாயகியாக பிரமோஷன் வாங்கியிருக்கும் நாயகி சரண்யா மோகனின் அழகும் சிரிப்பும் நம்மை வசீகரிக்கின்றன.

கபடி பயிற்சியாளராக வரும் ‘பொல்லாதவன்’ கிஷோர் நடிப்பும் ஓகே.

செல்வகணேஷ் இசையமைப்பில் ‘லேசா பறக்குது மனது…’ பாடல் மட்டும் நம் மனதில் ஒட்டுகிறது.

லஷ்மணன் ஒளிப்பதிவு கபடியை நன்றாக படம் பிடித்திருக்கிறது.

சுசீந்திரனே ஒரு பேட்டியில் கூறியிருந்தபடி, லகான் திரைப்படம் அவரை நிறையவே பாதித்திருக்கிறது. சென்னை 28, சக்தே இந்தியா, சுப்ரமணியபுரம் போன்ற திரைப்படங்களும் அவரை பாதித்தது மட்டுமல்லாது, ‘வெண்ணிலா கபடி குழு’ விலும் எதிரொலித்துள்ளது. ஆனாலும் யதார்த்தமாக கதை சொல்லி, ரசிகர்களை ரசிக்க வைத்து விடுகிறார் சுசீந்திரன்.

Related Posts Title


Leave a Reply