தைவான் சென்று வந்தேன்
என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
லாலாசான் மலையில் மேற்கொண்ட மலையேற்றப் பயணத்தின்போது அதன் உச்சியில் தமிழர் சுரேஷ்குமார் கண்ட அதிசயம் என்ன தெரியுமா? ஓர் அழகான வெந்நீர் ஊற்று!
“ஆச்சர்யமா இருக்கு சுரேஷ் குமார். சிறிய உயரம் கொண்ட மலைகளில் பெரும்பாலும் வெந்நீர் ஊற்றுகள் அமைவது இல்லை. மேலும் வெந்நீர் ஊற்று என்பது ஓரளவு எரிமலையில் பாதிக்குணம் கொண்டவை. தைவானில் நானறிந்தவரை எரிமலைகள் இல்லை. நீர் இதமாக இருந்ததா? உருளைக்கிழங்கும் முட்டையும் அவிக்குமளவு இருந்ததா?” இதைக் கேட்டதும் சுரேஷ்குமார் நன்கு சிரித்தார்.
“இல்லை லேனா சார். மலையுச்சியில் நிலவிய குளிருக்கு மிக இதமான வெப்பமாக, குளிக்கும்படி இருந்தது.”
“பொளக்பொளக் என்று தண்ணீர் குதித்து எழுந்து நீராவி வெளிப்படுமா அல்லது எப்படி இருக்கும்?”
“சிறு ஆவி மேலே இருக்கும். தண்ணீர் எங்கிருந்து ஊற்றெடுக்கிறது என்றே தெரியாதபடி வந்துகொண்டே இருக்கும். உள்ளே இறங்கினால் எழவே மனம் வராது.”
லுசர்ன் நகரில் (ஸ்விட்சர்லாந்தில்) செயற்கைச் சுடுநீர் நீச்சல் குளத்தில் குளித்த அனுபவம் நினைவிற்கு வந்தது.
“உண்மைதான் எனக்கும் கிட்டத்தட்ட இந்த அனுபவம் உண்டு. வெளியேற மனசு வராதுதான்!” எங்கே என்றும் சொன்னேன்.
“இந்த ஹாட் ஸ்பிரிங்கின் பேர் என்ன?”
“சிங்சிங்”
“நல்ல பெயர். ஜிங்கு ஜிங்குனு குதிச்சீங்களாக்கும்?”
“ஆமா. 15 பேர்கள் எல்லோரும் குடும்பஸ்தர்கள். தைவானியர்கள். நான் மட்டும்தான் வெளி ஆள்.”
“நல்லாப் பழகுவார்களா தைவானியர்கள். இல்லை, வேறுபடுத்திப் பார்ப்பார்களா?”
“ஐயையோ! அப்படியெல்லாம் இல்லை நல்லா, தண்ணீராப் பழகுவாங்க.”
“மலையேற்றத்தை டிரக்கிங் என்கிறார்கள் சிலர். ஹைக்கிங் என்கிறார்கள் சிலர். இரண்டிற்கும் என்ன வேறுபாடு சுரேஷ்?”
“தெரியலை. தைவானில் மலையேற்றத்தை டிரக்கிங் என்றுதான் சொல்கிறார்கள்.”
“எத்தனை நாள் பயணம்?”
“5 நாள்.”
“மலையேற்றம் அலுப்பாக இல்லை?”
“இல்லை. 5 நாள் போனதே தெரியலை.”
“போயிட்டு வந்ததும் என்ன உணர்வு தோன்றியது?”
“வாழ்க்கையில் எவ்வளவோ இனிமைகள் இருக்கின்றன. நாம் சம்பிரதாய வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்கோம். தைவானியர்கள் வாழ்க்கையை விதவிதமா அனுபவிக்கிறாங்க. கொஞ்சம் ஆபத்தான உல்லாசத்தையும் விரும்பி ஏற்கிறாங்க. உடல் வலிக்காம செளகரியத்தை அனுபவிக்க நினைக்கிற எத்துணையோ உலக மக்களைப் பார்க்கும்போது தைவானியர்கள் எப்படியெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கிறார்கள் தெரியுமா?”
“உங்களை நிறையவே சிந்திக்க வைத்த பயணம் இது என்று சொல்லுங்க.”
“நிச்சயமா!”
“தைவானில் இந்த ஒரு ஹாட் ஸ்பிரிங்தான் உள்ளதா?”
“ஹாட் ஸ்பிரிங் இரசிகராக இருந்தால் இந்த நாடு ஒரு சொர்க்கம் லேனா சார். பெய்த்தோ, யாங்மிங்ஷான், டியான், வுலாய், ஷிபென், ச்சோஷி அப்படின்னு இன்னும் நிறைய இருக்கு. இந்த நாட்டுக்குப் பல வெளிநாட்டுக்காரங்க வர்றதுக்கு இந்த நீராவிக் குளியலும் ஒரு காரணம்.”
“சந்தோஷம் சுரேஷ். நிறையத் தெரிஞ்சு வச்சுக்கிட்டு அசத்துறீங்க. நாளைக்கு எங்க போறோம்?”
“லாங்ஷானுக்கு”
“லாங்ஷான்?” புருவத்தை உயர்த்தி வினாக்குறியாக்கினேன்.
“தைவானிலேயே பெரிய கோயில். நீங்க அவசியம் பார்க்கணும்.”
“நம்மை அனுமதிப்பார்களா?”
“இங்கே அந்தக் கட்டுப்பாடெல்லாம் கிடையாது. யார் வேணும்னாலும் வரலாம்.”
“சுவாரசியமா இருக்குமா?”
“நீங்க மதம் சம்பந்தமான ஓர் இடத்தையாவது தைவானில் பார்க்க வேண்டும்.”
“நேரம்?”
“காலை 6.00 மணிக்குத் திறப்பாங்க. இரவு 10.20 வரை எப்ப வேணும்னாலும் போகலாம். சீன விழாக்களின்போது சில நாள் காலை 5.00க்கே திறந்துடுவாங்க.”
“இந்தக் கோயிலில் வேறு என்ன விசேஷம்?”
“தைவானில் உள்ள கோயில்களிலேயே மிகப் பெரியது இதுதான்.”
“பார்த்துவிடுவோம்.”
மறுநாள் சுரேஷ்குமார் என்னை என் ஓட்டலில் வந்து அழைத்துக் கொண்டார். எங்கு போனாலும் இரயில் மற்றும் டாக்சிதான். எனக்குச் சிரமம் தரக்கூடாது; செலவு வைக்கக் கூடாது என்பதில் குறிப்பாக இருந்தார். இத்தனைக்கும் சுரேஷ்குமார் சம்பளக்காரர் இல்லை. மாணவர்தான். நான் செலவழிப்பதுதான் நியாயம். சில இடங்களில் சுரேஷ்குமாரை மீறி என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
சொன்னால் சொன்ன நேரத்திற்கு வருபவர் சுரேஷ்குமார். சரியாக ஓட்டலுக்கு வந்து அழைத்துக் கொண்டார். “கையில் வாகனமில்லாமல் எப்படி உங்களால் குறித்த நேரத்தில் வரமுடிகிறது?”
“உங்களுக்குப் பயந்துதான்.”
“என்னது! எனக்குப் பயந்தா? எனக்கு ஏன் பயப்படணும் நீங்க?”
“நேரத்தைக் கடைப்பிடிக்கிறதுல நீங்க குறிப்பா இருப்பீங்கிறது ஊரறிஞ்ச விஷயம். உங்களை அழைக்க லேட்டா வருவேனா?”
“ஓ! அதுவா? நல்ல பழக்கம் சுரேஷ். அதனால் என் வட்டத்துல இதை வற்புறுத்துகிறேன்.இதனால கெட்ட பேர் எடுத்துக்கவும் செய்யறேன்?
“இதுல கெட்ட பேர் எடுக்க என்னங்க சார் இருக்கு?”
“இந்தப் படுபாவிப் பய நேரத்துக்கு வந்து தொலைச்சு (!) நம் உயிரை எடுப்பான்னு என் நண்பர்களே வெளிப்படையாகவும் சிலர் உள்ளுக்குள்ளும் என்னைத் திட்டுகிறார்கள். எனக்கே தெரியும். இருந்தாலும் நல்ல பழக்கம் நம்ம மூலமா வரட்டும்னு நான் சற்றுக் கடுமை காட்டுறது உண்டு.”
“தப்பில்லைங்க சார்.”
லாங்ஷான் கோயில் நெருங்க நெருங்க நான் எதிர்பார்த்த பிரமாண்டமெல்லாம் காணோம்.
“சுரேஷ் தைவானிலேயே பெரிய கோயில் இதுன்னு சொன்னீங்க. அப்படி ஒண்ணும் பெரிசா இல்லையே!”
“நமக்குப் பிரமாண்டங்களையே பார்த்துப் பழகிப்போச்சு. அதனால இது உங்களுக்குப் பெரிசாத் தெரியலைன்னு நினைக்கிறேன். ஒருவேளை மற்ற தைவானியக் கோயில்களைப் பார்த்தால் இது எவ்வளவு பெரிசுன்னு தெரியும்.”
அதுவும் சரிதான். ஓர் அமைதியான அதிகப் போக்குவரத்தற்ற எதிர்பார்த்த அளவிற்குக் கூட்டமற்ற அழகான கலைநயம் கொண்ட கோயில் லாங்ஷான்.
அட! வாசலில் நம் ஊர்க்கோயில் வாசல்களில் உள்ளது போலவே தரையிலும் வண்டியிலுமாக பூக்கடைகள். பூக்களின் இரகங்கள்தாம் ஒன்றுகூடப் பிடிபடவில்லை. இதுவரை பார்த்தறியாத பூக்கள்.
ஓர் ஒலியும் இல்லாமல் மிக அமைதியாக மக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.
1738இல் கட்டப்பட்ட கோயிலாம் இது. சற்றுக்கூட பழமையின் சாயல் இல்லாமல் ஏதோ போன மாதம் கட்டப்பட்டதைப் போன்ற புதுப்பொலிவு அருமையாகப் பராமரிக்கிறார்கள்.
இரக்கக் கடவுளான குவான்யின் இங்கு ஒரு மரத்தில் ஒளியுடன் காணப்பட்டானாம். இதைப் பார்த்தவர்கள் இந்தக் கோயிலை உருவாக்கினார்களாம்.
உள்ளே நுழைந்ததும் சலசல என்று நீர்ச்சத்தம். ஏதடா இங்கு அருவி? என்று பார்த்தால் நுழைந்த இடத்தில் வலப்பக்கத்தில் ஒரு செயற்கை அருவி.
அதன் நீர்ப்பாகத்தில் கொழுத்த அளவில் வண்ண வண்ணமாய் மீன்கள்.
தூண்கள் தங்க நிறத்திலும் (ஒரு வேளை தங்கம்தானோ?) சிவப்பு நிறத்திலும் கவர்ச்சியாகத் தென்படுகின்றன.
மாட்சு என்கிற பெண் கடவுளின் உருவம் மையமாகத் தென்படுகிறது. இக்கடவுளுக்கு ஓர் அரிய சக்தி உண்டாம்.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































