» Food is Good medicine .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 6 Feb 2009

Food is Good medicine

coffee.jpgவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி

உணவே மருந்து

காலையில் பட்டினிக் கிடப்பது நல்லதா?

இரவில் உணவின் அளவு குறைவாக இருப்பது நல்லது. அதே நேரத்தில் காலை உணவை தவிர்க்காமல் இருப்பது அதைவிட நல்லது. காலையில் அளவோடு சாப்பிடுகிறவர்கள், காலை உணவைத் தவிர்ப்பவர்களை விட அழகான வடிவோடும் ஆரோக்கியமாகவும் உள்ளனர். எடின்பரோவில் உள்ள மார்கரெட் கல்லூரியின் ஆய்வாளர்கள் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர். காலை உணவில் கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் குறைவாக உள்ள உணவையே பெரும்பாலும் சாப்பிடுகின்றனர். இந்த உணவில் நார்ச் சத்தும் (ரொட்டியும் பழச்சாறு வகைகளும்) சத்துக்களும் (வைட்டமின்களும் தாது உப்புக்களும்) இருப்பதால் இவர்கள் உடலில் எடை கூடாமல் இயற்கையாக இருக்கிறது.இதனால் ஒல்லியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்து விளையாட்டுக்களிலும் எளிதில் சாம்பியனாகிவிடுகிறார்கள். காலை உணவைத் தவிர்க்கிறவர்கள் மதிய உணவை நன்கு சாப்பிடுவதால் கொழுப்பும், கொலஸ்டிராலும் உடலில் சேர்ந்து, உடல் சற்று பருத்துவிடுகிறது. இதனால் இவர்கள் பங்கு பெறும் விளையாட்டுப் போட்டிகளில் வேகம் குறைந்து போய்விடுகின்றனர் என்கிறது இந்த ஆய்வு. நீங்கள் எந்த வயதுக்காரராக இருந்தாலும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

மூட்டு வலிக்கு காபி!

மூட்டு வீக்க வாத நோயாளிகள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மீன், தினமும் மூன்று வேளை பால் சேர்த்த சுக்குக் காபி ஆகியவற்றைத் தவறாமல் சேர்த்து வர வேண்டும். வாழ்க்கையில் திடீர் என்று மூட்டு வீக்கம் சார்ந்த வாதநோய் வருகிறது. மீன், முட்டை தவிர மற்ற அசைவ உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்தால் இவை வராமல் தடுத்துவிட முடியும். ஆனால் மட்டன் உணவால் இந்த நோய் எப்படி வருகிறது என்று இதுவரை சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. குருத்தெலும்புக்குத் தேவையான முக்கியமான மூட்டுக்களில் உள்ள மென்மையான இணைப்புகள் உறுதியாக இருக்கும். இந்த கொலாஜன் உடலில் உருவாக போதுமான அளவு வைட்டமின் ‘சி’ தேவை. கீரை, தக்காளி, சாத்துக்குடி, முளைவிட்ட கடலை முதலியன நன்கு சேர்த்துக் கொண்டால் போதும். வலி குறைந்து வேகமாக நலம் பெற பி5 வைட்டமின் அதிகமுள்ள காளான், ஓட்மில், சோயாமாவு முதலியனவும் நன்கு சேர்த்துக் கொள்ளவும். வாதம், மூட்டு வீக்கம் முதலியன வராமல் இருக்க முன்கூட்டியே தடுப்பு மருந்துகளாகவும் உள்ள சுக்குக் காபி, கீரை, மீன், சோயாமாவு போன்றவற்றை அடிக்கடி உணவில் சோப்பது நல்லது.

பெண்கள் தங்கள் சோம்பலை வெல்ல!

உடம்பில் இரும்புச் சத்து குறைந்தால் சோம்பல் தலை தூக்கும். குறிப்பாக, பெண்கள் மாதவிலக்கின் போது அதிகமாக இரும்புச் சத்தை இழக்கின்றனர். தேநீர், காபி, முட்டையுடன் மஞ்சள் கரு, சோயா முதலியன உடலில் இரும்புச் சத்து சேர்வதைத் தடுத்து, இந்த உணவுகளே அவற்றை உறிஞ்சிக் கொண்டுவிடுகின்றன.

இந்த நிலையில் பெண்கள், காலையில் நன்கு உணவு சாப்பிடுவதே நல்லது. தண்டுக்கீரை, தோலுடன் உருளைக்கிழங்கு அவியல், பறங்கிக்காய் முதலியன நன்கு இரும்புச் சத்து உள்ள உணவுகள். இவை உடலில் நன்கு சேரும். காலையில் பலகாரத்துடன் கிசுமுசுப் பழம், ஒரு கப் ஆரஞ்சு சாறு, இரண்டு வாழைப்பழம் தவறாமல் சாப்பிடவும். இதனால் வளர்சிதை மாற்றம் சிறப்பாக நடந்து சோர்வு தலை தூக்காமல் இருக்கும். அசைவம் எனில் மீனும் முட்டையும் பகல் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Related Posts Title


One Response to “Food is Good medicine”

  1. valaipookkal

    Hi

    உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. மிகவும் நன்றாக உள்ளது. உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

Leave a Reply