தைவான் சென்று வந்தேன்
நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
தைவானில் யோகக் கலையைத் தமிழ்நாட்டுக்காரர்கள் எவரும் பயிற்றுவிக்கவில்லையா? என்கிற என் கேள்விக்கு சுரேஷ்குமார் தயாராக ஒரு பதிலைச் சொன்னார்.
சேவாப்பூர் மாணிக்கம் என்கிற தமிழர் ராமகிருஷ்ணா மிஷன் நிறுவனத்தின் மூலமாக தமிழகத்தில் யோகக் கலையை 30 ஆண்டுக் காலமாகப் போதித்து வருகிறார். இவர் வழியே இங்கு பல சந்தர்ப்பங்களில் யோகக் கலை இங்கும் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள எத்துணையோ யோகக் கலைஞர்கள் இந்த நாட்டை முறையான வழிமுறைகள் மூலம் அணுகி, பரப்புவதற்கு முயற்சி எடுத்துக் கொள்ளலாம். உடல்நலம் சார்ந்த விஷயம் என்றால், இங்கு தைவானில் அப்படி ஓர் வரவேற்பு இருக்கும். நாமெல்லாம் (?) ரஜினி, கமலின் புதுப்படம் என்றால் ரிசர்வ் செய்து பார்ப்போமே, அப்படிப்பட்ட ஆர்வத்துடன் யோகாவை விரும்பி வரவேற்கிறார்கள்.
உடல் சற்றுப் பெருக்க ஆரம்பித்தால் உடனே அக்கறைப்பட்டு களத்தில் இறங்கி, ஜாகிங், ஸ்விம்மிங், டான்ஸ், சைக்கிளிங் என்று இறங்கிவிடுவார்கள். யோகாவுக்கு மட்டும் சரியான வடிகால் இங்கு ஏற்படுத்தப்பட்டால், நிச்சயம் இக்கலை இங்கு இன்னும் முன்வரிசைக்கு வந்துவிடும்.
”உண்மைதான் என்று படுகிறது. நம் கலைகளைத் தூக்கி உயர்த்திப் பிடிப்பதில் நம்மவர்கள் இன்னுங்கூட கவனம் செலுத்த வேண்டும்.”
”தங்கள் உடல்நலத்தின்மீது அபார ஆர்வம் காட்டுபவர்கள் தைவானியர்கள். தைபே 101 என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.”
”ஆமாம் 101 மாடிகளைக் கொண்ட கட்டடம் அது. நல்லவேளை இதைப் பற்றி ஞாபகப்படுத்தினீர்கள். தைபேயில் காணவேண்டியவை என்று நான் பட்டியல் போட்டு வைத்த இடங்களுள் அதுவும் ஒன்று.”
”அவசியம் போவோம் லேனா சார். இந்த தைப்பே 101 கட்டடத்தின் ஆண்டு விழாவின் போது ஒரு போட்டி வைத்தார்கள்.”
”என்ன போட்டி?”
”101 மாடிகளையும் படிவழியே ஓடி ஏறும் போட்டி!”
”மூன்று மாடிகளை ஓடி ஏறினாலே முழங்கால்கள் நம்மைக் கெஞ்சுமே!”
”தைவானியர்கள் இந்த மாதிரிப் போட்டிகளில் எல்லாமே வயது வித்தியாசம் பாராமல் கலந்துகொள்வார்கள்.”
”அப்படியா?”
”ஆமாம். இந்தப் போட்டியில் 80 வயதுப் பெரியவர் ஒருத்தர் கலந்துக்கிட்டாரு!”
”என்ன சொல்றீங்க சுரேஷ்? 80 வயதில் 101 மாடி ஓடி ஏறுவதா?”
”ஏறிப் பரிசும் வாங்கினாரே!”
”ஓ!”
”இங்கேயெல்லாம் யாரும் வயசாச்சுன்னு ஒதுங்கிறதே இல்லை. 90 வயது வரை சுறுசுறுப்பா ஓட்டமும் பாட்டமுமா இருப்பாங்க. பார்க்குறதுக்கும் வயது தெரியாம இருப்பாங்க. 90 வயதுக்காரரை உங்களுக்குக் காட்டுகிறேன். 70 வயதுதான் மதிப்பீங்க.”
”பரவாயில்லையே! உடல்நலத்தில் அக்கறை செலுத்தும் எந்த ஒரு சமூகத்தையும் எனக்கு மிகப் பிடிக்கும். இந்த வகையில் தைவானியர்களை எனக்கு மிகப் பிடிக்கிறது.”
”நம்ம மக்களுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்லுங்க சார். உண்மையில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம்ம மக்களை நினைச்சா ஏக்கமா இருக்கு. தைவானியர்களின் யோகாசனம் ஆர்வம் பற்றி இன்னமும் சொல்லணும். பல பேர் இந்தியாவுல வந்து யோகா கத்துக்கிட்டு, இதையே முழுநேர வருமானத் தொழிலா மாத்திக்கிட்டாங்க.”
”ஆர்வத்தைப் பழக்கமாக்கி, பழக்கத்தை வருமானமாக்கி, பலே ஆளுங்கதான் இந்தத் தைவானியர்கள்.”
”வருமானம்னாலும எவ்வளவுங்குறீங்க! ஒரு டாக்டரும் ஓர் இன்ஜினியரும் சம்பாதிக்கிற சம்பாத்தியத்துக்கு இணையாக இங்கே உள்ள யோகா மாஸ்டர்கள் சம்பாதிக்கிறாங்க.”
”ஐயோ! இதையெல்லாம் சொல்லி என்னோட ஏக்கத்தை ரொம்பவே கிளறீங்களே!”
”உண்மையைச் சொன்னேன் லேனா சார்.”
”இதப் பார்த்துட்டு இப்ப தைவானியர்கள் நிறையப் பேர் இந்தியாவுலே வந்து இறங்கிட்டாங்க.”
”அப்படியா?”
”ஆமாம் 3-4 வருஷம் வரை தங்கி யோகாவைப் பேருக்குக் கத்துக்காம ஆழமாக் கத்துக்கிட்டு நாடு திரும்பி பிராக்டீசை ஆரம்பிச்சிடுறாங்க.”
”கேட்கவே ஆச்சரியமா இருக்கு சுரேஷ். நம்ம கலை வெளிநாட்டவர்களுக்கு நல்ல வருமானம் தந்துக்கிட்டிருக்குங்கிறீங்க!”
”ஆமாமா. சந்தேகமே வேண்டாம்.”
”இங்கு வந்தபிறகு உங்களது உடல்நலம் பற்றிய பார்வை மாறியிருக்கிறதா சுரேஷ்? எனக்கே நாடு திரும்பியதும் உடல்நலத்திற்காக தைவானியர்களைப் போல் இன்னும்கூட நேரம் ஒதுங்கி அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்கிற எண்ணம் உண்டாகியிருக்கிறது.”
”நிச்சயமாக மாறியிருக்கிறது. நான் சற்று மாறியிருக்கிறேன் என்பதற்கு ஒர் உதாரணம் சொல்கிறேன்.”
”சொல்லுங்க.”
”நானும் சில தைவானிய நண்பர்களும் சேர்ந்து மலையேற்றம் போய்விட்டு வந்தோம்.”
”சற்று தள்ளித் தெரிகிறதே ஒரு குட்டை மலை அதிலா?”
”இல்லையில்லை. லாலாசான் என்று ஒரு மலை இருக்கிறது.” ‘லாலாசான்’ என்று ஒருமுறை நானே சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.
”எவ்வளவு உயரம்?”
”2000 அடிகள்?”
”அவ்வளவுதானா உயரம்?”
”இங்கே இருக்கிற மலைகளெல்லாம் அதிக உயரம் இருக்காது.”
”ஓ! சரி, சொல்லுங்கள். எவ்வளவு பேர் போனீர்கள்?”
”15 பேர்”
”உங்கள் வயதுக்காரர்களா?”
”அதுதான் இல்லை. குடும்பம் குடும்பமாக எல்லா வயதினரும்.”
”அட! பிள்ளைகள் பெண்கள்?”
”ஆமா.”
”இங்க இவுங்ககூட மலையேறுவாங்களா?”
”தாராளமா!”
”ஆச்சரியமா இருக்கு!”
”ஆபத்தான பயணமா இருந்துச்சா? வனவிலங்குகள்? பாம்புகள்?”
”அதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க சார். இவையெல்லாம் இருக்கா இல்லையான்னு உறுதியா சொல்ல முடியாததுக்குக் காரணம், நாங்க இந்த மாதிரி ஆபத்தான விலங்குகள் ஒண்ணுகூடப் பார்க்கலை.”
”எத்தனை நாள் மலை ஏற்றம், இறக்கம்!”
”மொத்தம் ஐந்து நாள்?”
”குளிர்?”
”கடுமையாகத்தான் இருந்துச்சு. ஆனா தக்கப் பாதுகாப்புடன் போனோம். அவ்வளவாகத் தெரியலை.”
”தங்குறது?”
”அங்கங்க டென்ட் அமைச்சுக்குவோம்.”
”பாதை தவறிப் போயிட வாய்ப்பு இருக்கா?”
”இங்கேயெல்லாம் அருமையான தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கு. யாரும் வழி தவறிப் போக வாய்ப்பு இல்லை. அங்கங்கே தகவல் பலகைகள் இருக்கும். வழி தவறிப் போயிட்டாக்கூட உதவ, வழி காட்ட நிறைய அமைப்புகள் இருக்காங்க. லாலாசான் மலையோட மூலை முடுக்கெல்லாம் தெரிஞ்சவங்களோட பேசிப் பேசி சரியான பாதைக்குத் திரும்பிடுவாங்க.”
”ரொம்ப வியப்பா இருக்கு சுரேஷ். இந்த நாட்டுக்காரங்க இரசனையும் செயல்பாடும்.”
”மேல போய் ஏதும் அதிசயம் கண்டீர்களா?”
”மலை உச்சியில் ஓர் அதிசயம் காத்திருந்துச்சுப் பாருங்க. அசந்துட்டேன்.”
”அப்படியா? என்ன அப்படி அதிசயம்?”
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































