» Simple & best way .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 30 Jan 2009

Simple & best way

cigarette-smoking.jpgவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி

நம்ம வழி எளிய வழி

சிகரெட்டை விட எளிய வழி!

டெக்ஸர்ஸ் புற்று நோய் மருத்துவ மையம் சிகரெட் பழக்கத்தைவிட ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்ளது. அது என்ன? நீங்கள் உண்மையிலேயே சிகரெட் பிடிப்பதை நிறுத்த விரும்பினால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை முதலில் மேற்கொள்ளவும். இடையில் அந்த நினைவு வந்தால் உடனே 12 மணிக்கு குடிக்கலாம் என்று சற்று உரத்துச் சொல்லுங்கள். இந்த இடைவெளிப்படி புகைத்தால் நான்கு வாரங்களில் சிகரெட் எண்ணிக்கை குறையும். தினமும் 3, 4 சிகரெட் மட்டுமே பிடிப்பவர்கள் காலையில் அல்லது மாலையில் என்று ஒரே ஒரு சிகரெட் மட்டும் புகைத்து வந்தால் போதும். இவர்களும் விரைவில் புகைப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். நிரூபிக்கப்பட்ட வழிமுறை என்பதால் இந்த வழியில் புகைக்கு விடை கொடுக்கலாம்.

சாப்பாட்டைக் குறைக்க எளிய வழி!

ரெஃப்ரிஜிரேட்டரின் வெளியேயும், உள்ளேயும் நீலநிறம் இருக்க வேண்டும். நீலநிற விளக்கு ரெஃப்ரிஜிரேட்டரின் உள்ளே எரிந்தால் இயற்கையான உணவுப் பொருட்கள் நீல ஒளியில் பார்க்கும் போது பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். சாப்பிடும் தட்டு சிறியதாகவும் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும்போது சிவப்புநிற உடையை சீருடையாக அணிந்துவந்தால் சாப்பிடும் எண்ணம் குறைந்து, உடல் பருமனும் குறைய ஆரம்பிக்கும். சாப்பாட்டுக்கு முன்பு எலுமிச்சை அல்லது தக்காளி சாறு சாப்பிடுவது பசியை மட்டுப்படுத்தும், வண்ணங்கள், எண்ணங்கள் ஏற்படுத்தும் மாற்றங்களால் உணவு சாப்பிடுவது எந்த விதமான விருப்பு வெறுப்பின்றியும் குறையும்.

திறமை பெருக ஓர் எளிய வழி!

பள்ளி, கல்லூரி மாணவர்களில் மிகவும் திறமைசாலியாக உருவாக சூயிங் கம் சாப்பிட்டபடியே ஆசிரியர் நடத்தும் பாடத்தைக் கேட்டால் போதுமாம். ஜெர்மனியில் எர்லான் ஜென் பல்கலைக்கழகத்தின் அறிவுத்திறம் பற்றிய ஆய்வாளர் சைக்ஃப்ரைட் லெஹரல் என்பவர்,  சூயிங்கம் சாப்பிட்டபடியே விரிவுரை கேட்ட மாணவர்கள் மற்ற மாணவர்களைவிட 40% கூடுதலாக தகவல்களைப் பெற்றிருந்தனர் என்கிறார். காரணம், சூயிங் கம் சாப்பிடும்போது மூளை தொடர்ச்சியாக ஆக்ஸிஜனைப் பெற்றுக்கொண்டே இருப்பதுதான் என்கிறார். இப்பழக்கத்தினால் முன்பைவிடத் திறமைசாலியாக ஒருவர் உருவாகிவிடுவாராம். வேலைபார்ப்பவர்களும், தொழில் செய்பவர்களும், கலைஞர்களும் இந்த சூயிங் கம் முறையை வேலை செய்யும்போது பின் பற்றலாம் என்கிறார் இந்த ஜெர்மனியர்.

குளிர்காலத்தில் சரியான உணவைப் பெற ஓர் எளிய வழி!

மிகவும் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால் மண்ணீரலும் வயிறும் சரியாகக் செயல்பட்டாலும் ஏதேனும் பிரச்னையைக் கொண்டு வந்துவிடும். இந்த நிலையில் குளிர்காலத்தில் சோளம், தினைமாவு, எள், இஞ்சி, பனைவெல்லம் முதலியவற்றை நன்கு சேர்த்து வந்தால் மண்ணீரலும் வயிற்று உறுப்புகளும் நன்கு பலப்பட்டுச் செயல்படும். குளிர்காலத்தில் அளவோடு சாப்பிடப்படும் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் முதலியவற்றால் இந்த உறுப்புகள் பழுதுபடாமல் இருக்கும். இது ஆயுர்வேதம் தரும் குறிப்பு.

ஜாக்கிங் மூலம் நல்ல உடல் நலன் பெற ஓர் எளிய வழி!

முதலில் 55 கஜதூரத்தை மட்டும் 4 தடவை மெல்லோட்டம் மூலம் நடங்கள். பிறகு இதே தூரத்தை 4 முறை சாதாரண நடை நடக்கவிடுங்கள். இந்த முறையில் மாற்றம் செய்யாமல் ஆறுவாரம் நடக்கவும். பிறகு 110 கஜ தூரத்தை 45 விநாடிகளில் மெல்லோட்டம் செய்து கடக்கவும். இதை ஒருவாரப் பயிற்சிக்குப் பிறகு 110 கஜ தூரத்தை 30 விநாடிகளில் கடக்கவும். கூடுதலாகவோ குறைவாகவோ செய்ய வேண்டாம். நம் கால்பாதங்களில் முக்கியமான 52 வகையான நரம்புகள் வந்து முடிகின்றன. இவை மெல்லோட்டம் செய்ய நன்கு தயார் ஆகும். இதற்குப் பிறகு ஒரு ஆறுமாதத்திற்கு ஒரு மைல் தூரத்தை ஒன்பது நிமிடங்களில் கடக்கும்படி மெல்லோட்டம் செய்யுங்கள். பிறகு வாழ்நாள் முழுவதும் ஒன்பது நிமிடங்கள் மட்டும் மெல்லோட்டம் செய்து வந்தால் போதும். அக்குபிரஷர் சிகிச்சைபோல 52 வகையான நரம்புகளும் உடலை முழுப் பாதுகாப்பில் வைத்திருக்கும். டெக்கான் ஹெரால்டு தரும் தகவல் இது.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Related Posts Title


One Response to “Simple & best way”

  1. RAM

    Excellent Ideas…Definetely we should follow, as per our requirements…Thanks a lot for all the informations…

Leave a Reply

Avarai »