தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?
தமிழகத்தில் பல பேருந்துகள் உடைக்கப்பட்டும், கொளுத்தப்பட்டும் வருவது வேதனைக்குரியது. இவற்றிற்குக் காரணமானவர்களின் தலைவரே இதை நிச்சயம் எதிர்பார்த்திருக்கவோ, விரும்பவோ மாட்டார்.
பொதுமக்கள் அதுவும் ஏழை எளியவர்கள் பயன்படுத்தும் வாகனமான பேருந்தைக் கொளுத்துவது நம்மவர்கள் தலையில் நம்மவர்களே மண்ணை வாரிப்போட்டுக் கொள்வதற்குச் சமம்.
இத்தகைய கலவரங்களில் பாதிக்கப்பட இருப்பவர்களின் சாபத்திற்கும் வசவுக்கும் ஆளாவதில் என்ன இலாபம் இருக்க முடியும்?
இலங்கைப் பிரச்னை என்பது இரு தலைமுறைகளுக்கும் மேலாக நடந்து வருகிற ஒன்று.
நம்மவர்கள் அதில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் இங்குள்ளவர்களின் இரத்தங்கள் துடிப்பதும் கொதிப்பதும் புரிகிறது. ஆனால் இது எல்லை கடந்த பிரச்னை என்பதால் நளினமாகக் கையாள வேண்டும். ஏற்கெனவே இதைக் கையாண்ட விதத்தில் நடந்த தவறினால்தான் ராஜீவ் என்கிற அருமைத் தலைவரை நாம் இழந்தோம்.
மூக்கை அதிகம் நுழைத்தால், உலக நாடுகளின் கண்டனத்திற்கும் ஆளாவோம். இது முள்ளின்மீது விழுந்த சேலை. உள்ளூர் அரசியல் தலைவர்களுக்கு இது தெரியாதா? தெரியும்! அரசியல் இலாபக் கணக்குகளோடு எது ஒன்றையும் காய் நகர்த்தும் வேலை இங்கு நிறையவே நடக்கிறது.
ஒரு தலைவர் 10 நாள் போராட்டம் அறிவித்து தமிழகத்தையே ஸ்தம்பிக்கச் செய்வோம் என்கிறார். ஒரு தலைவர் இவர் என்ன செய்தாலும் அவரைப் பின்தொடர்வேன் என்கிறார். ஒரு தலைவர் மாணவர்களை இதில் சம்பந்தப்படுத்துகிறார். ஒரு கம்யூனிஸ்ட் தலைவரும் இலங்கைப் பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்தத் தேதி குறிக்கிறார்.
தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையை இவர்களது நடவடிக்கை பாதிக்குமே தவிர, எவ்விதப் பலனும் ஏற்படப் போவதில்லை. வேறு வழியில் சொன்னால் எந்தத் தீர்வையும் காணமுடியாத ஒரு விஷயத்திற்காக நமக்கு நாமே சேதங்களை ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.
இந்த விஷயத்தில் அரசுக்கு ஏற்பட்டுவரும் இழப்புகளை ஈடுசெய்யும்போவது யார் என்று எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா கேட்டுள்ள கேள்வி சிந்திக்கத்தக்கது.
இப்போராட்டங்களைத் தீவிரப்படுத்தி தமிழகத்திலும் ஏன் மத்தியிலும்கூட ஸ்திரமற்ற தன்மையை உருவாக்குவதுதான் இவர்களது திட்டமா?
நிலைமை இப்படியே தொடர்ந்தால் தி.மு.க.வும் மத்தியக் கூட்டணி அரசும் பதவியிழக்கும் நிலைமைகூட உருவாகலாம். யார் கண்டார்கள்?
இரு அரசுகளையும் ஆட்டம் காண வைத்தால் இவர்கள் விரும்புகிற எல்லை கடந்த ஆதிக்கம் எப்படிச் சாத்தியமாக முடியும்?
ஜனநாயக நாட்டில் அறவழிப் போராட்டங்களுக்கு எத்துணையோ வசதிகள் இருக்க, சில தமிழகத் தலைவர்கள் தோந்தெடுத்துள்ள வழி மிகவும் சீர்கேடான வழி என்றே தோன்றுகிறது.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?
2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?
2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்
2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?
2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…
2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!
2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!
2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!
2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!
2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!
2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!
2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..
2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்
2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?
2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்
2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?
2008/09/05 இருபக்க இடைவெளிகள்!
2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!
2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்
2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!
2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?
Related Posts Title
































February 9th, 2009 at 1:40 am
waste your summary, are AIADMK member? againest tamil on your words.