» In good health .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 23 Jan 2009

In good health

 sleeping.jpgவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி

சுகமோ சுகம்

நன்கு தூங்க இரவில் குறைவான உணவு நல்லதா?
தினசரி இரவில் 8 மணி நேரத்திற்கும் மேல் தூங்குபவர்களுக்கு இருதய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாம். 7,000 பேர்களை 10 ஆண்டுகளுக்கு மேல் ஆராய்ந்ததில் இந்த உண்மை தெரிய வந்தது. பகல் நேரத்தில் சோம்பலால் வரும் தூக்கம் இந்த எட்டுமணி நேரக்கணக்கில் சேராது. 4 வயதுக்கு மேற்பட்டவர்களின் இரவு நேரத் தூக்கம் 8 மணி நேரத்திற்குள் இருக்கட்டும்.

கொழுப்பைத் தவிர்க்கலாமா?

நாம் பிறக்கும் போது நமது மூளை 60% கொழுப்பாக இருக்கும். அதுவும் ஒமேகா - 3 என்ற கொழுப்பு அமிலத்தால் ஆனதாக இருக்கும். இது இருந்தால்தான் நமது மூளை ஞாபக சக்தியுடன் திகழும். மன அழுத்தம் ஏற்படாது. குறிப்பாக, எல்லா நிகழ்ச்சிகளும் மறந்து போகும் வியாதியான அல்ஜிமெர்ஸ் என்பது வராது. உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு இது. ஆனால், மீன், முட்டை முதலியவற்றிலிருந்து கிடைக்கும் நல்ல கொழுப்பு மூளைக்கும், இதயத்திற்கும் நன்மையையே செய்கின்றன. சைவ உணவுக்காரர்கள் முருங்கைக் கீரை, பச்சைப்பட்டாணி, வல்லாரைக்கீரை, வள்ளிக்கிழங்கு முதலியவற்றின் மூலம் இதே அளவு ஞாபக சக்தியையும் மூளைத் திறனையும் பெறலாம். மன அழுத்தத்தை காரட் ஒன்றே குணப்படுத்திவிடும். தேவையான மன உறுதியையும், சிந்திக்கும் திறனையும் பாதாம் பருப்பு தந்துவிடும்.

சர்க்கரையைக் குறைக்கும் சாறு!

காரட் சாறுடன் பசலைக்கீரைச் சாறும் சேர்ந்து அருந்தி வந்தால் நீரிழிவு நோயாளிகள் சிரமமின்றி வாழலாம். காரட்டில் தோல் மற்றும் கண்களுக்கும் நலம் செய்யும் வைட்டமின் ‘ஏ’ இருக்கிறது. மேலும் காரட்டில் உள்ள கால்சியம் இரத்தத்தைச் சுத்தப்படுத்திவிட வல்லது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ‘பி’ குரூப் வைட்டமின்களும் காரட்டில் அதிகமாக இருக்கிறது. இது நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பசலைக்கீரையில் அதிக அளவில் உள்ள மக்னீசியமும் வைட்டமின் ‘சி’யும் இரத்தக் குழாய்களைக் நன்கு பராமரிப்பதால் இவற்றைச் சாப்பிடுபவர்களுக்கு இதயத் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த இரண்டு சாறு வகைகளையும் மிக்ஸியில் தயாரித்த உடனேயே அருந்த வேண்டும். ஆரோக்கியத்திற்கு இந்தச் சாறு ஓர் அற்புதமான மருந்தாகும்.

அதிக நேரம் டி.வி. பார்க்கலாம்!

30, 40 வயதுக்காரர்கள் ஒரு நாளில் பாதி நேரத்தை டி.வி. முன் உட்கார்ந்து கழிப்பதாக வருந்த வேண்டாம். லண்டனில் உள்ள ராயல் இலவச மருத்துவமனைப் பள்ளி ஒன்று மத்திய வயதுக்காரர்களை ஆராய்ந்தது. ஆராயப்பட்ட 5,000 பேர்களும் மிகவும் எளிமையான உடற்பயிற்சியை குறைந்த நேரமே செய்ததால் இதயம் சம்பந்தமான அபாயங்கள் நீங்கி தங்கள் வாழ்நாளை இப்போதும் நீடித்துக் கொண்டுள்ளார்கள். உங்கள் வீட்டில் உள்ள சுவர்க்கெடிகாரத்தைப் பார்த்தபடியே மூன்று நிமிடங்கள் மெல்லோட்டம் (Jogging) செய்யுங்கள். பிறகு 20 நிமிடங்கள் நடைப்பயிற்சியோ உடற்பயிற்சியோ செய்யுங்கள். டி.வி.யின் முன்பாக உட்காரும் முன்பு உங்களின் எல்லா வேலைகளையும் பாக்கி வைக்காமல் படுசுறுசுறுப்பாகப் பார்த்து முடித்து விடுங்கள்.

ஒற்றைத் தலைவலியை தடுக்க முடியும்!

வாயுத் தொந்தரவு, செரிமானமின்மை முதலியவை இருந்தால் சாப்பாட்டிற்குப் பிறகு பால் சேர்க்காத சுக்குக் காப்பியை அருந்தவும். உங்கள் சமையலில் இஞ்சியைத் தினமும் சேர்த்து வந்தால் வீட்டில் எவருக்கும் ஒற்றைத் தலைவலியே வராது. இஞ்சி சேர்ந்த ரசம், குழம்பு இரத்த ஓட்டத்தை தடை செய்யாமல் பார்த்துக் கொள்வதால், மூளைக்கு நன்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடுகிறது. ஒற்றைத் தலைவலி இருந்தாலும் உடனே போய்விடும். புது மணமக்கள் முதல் குழந்தை பிறக்கும் வரை தினமும் ஒரு வேளையாவது சுக்கு காபி குடித்து வந்தால் தலைத் தீபாவளியைக் குழந்தையுடன் கொண்டாடலாம்.

சோயா சாப்பிடுங்கள்!

சோயா மொச்சையில் இருந்து கிடைக்கும் புரதம், இதய நோய்களை அணுகுண்டுபோல் தகர்த்துக் குணமாக்குகிறது. கெடுதல் தராத கொலாஸ்டிரலையும் இது அதிகப்படுத்தி தருவதால் வாழ்நாளும் நீடிக்கிறது. எல்சித்தன், கால்சியம், இரும்பு போன்ற முக்கியமான சத்துப் பொருட்களும் சோயாவில் உள்ளன. சிலருக்கு சோயா பிடிக்காது. எனவே, சப்பாத்தி செய்யும்போது கோதுமை மாவுடன் சோயா மாவையும் 25% அளவு என்ற கணக்குப்படி சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி சுடவும். இது திட்டமிட்ட பரிபூரணமான உணவாக உண்மையில் திகழ்கிறது.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Related Posts Title


Leave a Reply