Friday, 16 Jan 2009
நீங்களும் அமிதாப்பச்சன்தான்!
திரைப்பட மனிதர்களை முன்னுதாரணமாகச் சொன்னால் ஏனோ சிலருக்குக் கோபம் வருகிறது. எல்லா மனிதர்களும் செய்திகளின் தூதுவர்களே. எவரோ ஒரு முகமறியா மனிதரை முன்னுதாரணம் காட்டுவதை விட ஒரு நாடறிந்த உதாரண மனிதரை எடுத்துக் கொள்வோமே! சில ஆண்டுகளுக்கு முன்பு காதில் விழுந்த செய்தி இது. அமிதாப்பச்சன் பெருங்கடனாளி ஆகிவிட்டார். திவால் ஆகப் போகிறார். மஞ்சள் நோட்டீசு விடப் போகிறார் என்றார்கள்.
அந்நேரம் இவரது சென்னைக் கிளை நிறுவனங்களும் சொல்லிக் கொள்ளும்படி இயங்காமல் திணற ஆரம்பித்து ஒரு பக்கம் வரி பாக்கி நெருக்கல்கள், மறு பக்கம் கடன்காரர்களின் தொல்லைகள். படங்களும் இல்லை. உடல் நலமும் நலிய ஆரம்பித்தது. கோன் பனேகா குரோர்பதியில் தலைகாட்டி, அவரே நிகழ்ச்சியை நடத்தினார். இது நாடெங்கும் பேசப்படவே நல்ல விளம்பர வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இனிப்புகளுக்கும், ஆயின்மென்டுகளுக்கும் அதற்கும் இதற்கும் தலைகாட்ட ஆரம்பித்தார்.
ஒரு சில படவாய்ப்புகளும் கதவைத் தட்டின. வந்த படங்களும் தீயாய்ப் பற்றிக் கொண்டன. மகன் அபிஷேக் தலையெடுத்தார். ஐஸ்வர்யம் சேர்க்க ஐஸ்வர்யா ராயும் சேர்ந்து கொண்டார்.
இன்று அமிதாப்பிற்கு எவ்வளவோ தேறும் என்கிறார்கள். திரை நாயகர்கள் விழுந்த வரலாறுகள் ஆயிரம். எழுந்த வரலாறு ஒன்றுதான். அது அமிதாப்பிற்கே சொந்தமானது.
வாழ்வில் வீழ்ந்த பலர் அவ்வளவுதான் முடிந்தது நம் கதை. தீர்ந்தது நம் வாழ்க்கை என்கிற முடிவிற்கு வந்து, பணம் தேடுவதற்குப் பதிலாகத் தாடி மீசைக்கு மாறி ஓடாய்த் தேய்ந்து அனுதாபத்தைச் சம்பாதிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஆற்றில், எதிர்நீச்சலை நிறுத்தினால் அடித்துச் செல்லப்பட்டு விடுவோம் என்கிற உண்மையை உணராதவர்கள் இவர்கள்.
கதவுகள் மூடப்பட்டால் என்ன? சாளரங்கள் கூடவா இல்லாமல் போய்விடும்?
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!
2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?
2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!
2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

































January 15th, 2012 at 7:39 am
nice sir…