Lorry strike continues; Fuel demand arises
லாரிகள், அதிகாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி:
தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு
சென்னை: டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வேலைநிறுத்தம் போன்றவற்றின் எதிரொலியாக சென்னை உள்பட தமிழநாடெங்கும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு சலுகைகள் கேட்டு நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எண்ணெய் விநியோகிக்கும் டேங்கர் லாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னை உள்பட தமிழ்நாடு முழுக்க பெட்ரோல், டீசல் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
டேங்கர் லாரிகள் ஓடினால் ஒரு பலனும் இல்லை. ஏனெனில், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கையெழுத்திட்டப் பின்னர்தான் டேங்கர் லாரிகள் எண்ணெய் நிறுவனங்களை விட்டு வெளியே வரமுடியும்.
தமிழ்நாடு முழுவதும் 3ஆயிரத்து 300க்கம் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகளும், சென்னை நகரில் 300க்கும் மேற்பட்ட பங்க்குகளும் உள்ளன. லாரிகள் வேலைநிறுத்தம் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பங்க்குகளுக்கு பெட்ரோல், டீசல் ஆகியவை சப்ளை ஆகவில்லை.
சென்னை நகருக்கும் மட்டும் தினசரி ஆயிரம் டேங்கர் லாரிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் சப்ளை ஆகும். இந்த லாரிகள் அனைத்தும் தொடர்ந்து ஓடினால்தான் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க முடியும். இந்த லாரிகள் ஓடாததால் தற்போது பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தட்டுப்பாடு காரணமாக நேற்று மதியத்திற்குமேல் சென்னையில் உள்ள 150க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் இழுத்து மூடப்பட்டன. இதே நிலை இனியும் தொடருமானால், பெட்ரோல் பங்க்குகள் அனைத்தும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?
Related Posts Title
Tags: Chennai, Diesal, Fuel demand, Lorry strike, petrol, அதிகாரிகள் வேலைநிறுத்தம், டீசல் தட்டுப்பாடு, பெட்ரோல், லாரி வேலைநிறுத்தம்