Friday, 9 Jan 2009

Democracies win?

tirumangalam-election.jpgஜனநாயகம் ஜெயிக்குமா?

திருமங்கலம் பகுதியின் காவல் துறைக் கண்காணிப்பாளர் மனோகர் மதுரை மாவட்டத் தி.மு.க. செயலாளர் போலவும் துணைக் கண்காணிப்பாளர் மதுரை மாவட்ட தி.மு.க.வின் துணைச் செயலர் போலவும் செயல்படுகின்றனர் என்று ஜெயலலிதா கூறியுள்ளது ஒரு வகையில் இரசிக்கத் தக்க நகைச்சுவை போலத் தோன்றினாலும் அதனுள் புதைந்து கிடக்கும் அர்த்தம் மிகக் கனமானதாகத் தோன்றுகிறது.

தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சொல்லியிருப்பது நம்மை இன்னும் கூட உலுக்க வல்லது. காஷ்மீர்த் தேர்தல் கூட அமைதியாக நடந்திருக்கையில் திருமங்கலத் தேர்தல் சம்பவங்கள் மிகவும் கவலை அளிக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் அநியாயங்கள் என்று பட்டியலிடத்தக்க அனைத்தையும் பார்த்தவர் நரேஷ் குப்தா. அவரே மலைத்துப் போய் கை பிசைந்து நிற்கிறார் என்றால் தமிழகத்திற்கு அகில இந்திய அளவில் தமிழகக் கட்சிகள் அவமானக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கட்டியிருக்கின்றன என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.

திருமண மண்டபங்களில் ஏராளமான பேர் என்ன நோக்கத்திற்காகவோ தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் குறிப்பிடுகிறது.

சாப்பாடு போடுகிற மாதிரிப் போட்டு ஒவ்வோர் இலைக்கு அடியிலும் 2000 ரூபாய்கள் வைக்கப்படுவதாக வைகோ தகவல் தெரிவிக்கிறார்.

2000 தானா? பூ! ஒரு வாக்காளருக்கு 7000 ரூபாய் வரை தரப்படுகிறது தெரியுமா என்கிறது இன்னொரு வட்டாரம். பச்சக்கானுர்ப் பட்டியில் இந்த அநியாயம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளிலும் கூட்டுறவுச் சங்கங்களிலும்தான் பெரும்பாலும் பெரும் தொகைகள் தரப்படுவதாகச் சொல்லப்படுவது உண்டு.

ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்கே இத்தகைய தொகை என்றால் இந்தத் தேர்தலையும் இந்த வெற்றியையும் தமிழகக் கட்சிகள் எவ்வளவு பெரிய கெளரவப் பிரச்னையாக எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.

இந்தத் தேர்தலின் முடிவுதான் வரப்போகும் பாராளுமன்றத்திலும் அதன் பிறகு வர இருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்பதாக இக்கட்சிகள் வலுவாக நம்புவதால்தான் திருமங்கலத் தேர்தலை ஒர் உச்சகட்டப் போராகக் கருதுகின்றன என்பது தெளிவு.

எனவே இதில் வென்றே ஆக வேண்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்ட தமிழகக் கட்சிகள் எதற்கும் துணிந்து விட்டன என்பது போல் தோன்றுகிறது. கல்வீச்சு, கார் உடைப்பு, அடிதடிகள், கைதுகள் என்று வன்முறைகள் இத் தேர்தலில் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தமிழக அரசியலின் தரந்தாழ்ந்த நிலையைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றன.

காவல்துறை அ.தி.மு.க.வினரை மட்டும் கைது செய்திருப்பதைப் பார்க்கும்போது மத்திய ரிசர்வ் போலீஸ் வசம் திருமங்கலம் ஒப்படைக்கப்படுவது நல்லது என்று படுகிறது.

போகிற போக்கைப் பார்த்தால், எவர் வென்றாலும் அவர் வென்றதாகக் கருதுவதை விட ஜனநாயகம் தோற்றுவிட்டது என்றே இத் தேர்தல் முடிவைக் கணிக்க வேண்டிவரும் போல் தோன்றுகிறது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Related Posts Title


Leave a Reply