Monday, 5 Jan 2009
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக விடியோ ஆதாரம்: ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்கு

டெல்லி: திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்குப் பணம்கொடுப்பது போன்ற விடியோ காட்சி சில சேனல்களில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய மத்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர்மீது லஞ்ச குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனத் தெரிகிறது.
இதுபோன்று வாக்காளர்களுக்குப் பணம்கொடுத்ததாக, அ.தி.மு.க. கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கே. தண்டபாணி மீதும் கிரிமினல் வழக்கு பாய்கிறது.
இது தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கு பணம், இலவச வேஷ்டி, சேலை, தங்கமோதிரம் ,கறிவிருந்து உள்ளிட்ட தேர்தல் விதிமுறை மீறல்கள் அதிகளவில் நடந்துவருகவதாக புகார்கள் வந்தபடியே உள்ளன.
தி.மு.க., அ.தி.மு.க., கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு தலா ரூ.500 தருவது போன்ற, ஒரு நிமிடம் ஓடக்ககூடிய விடியோ காட்சி சேனல்களில் நேற்று ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் முதல் பதிவில், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ.ராசா ரூ.500 நோட்டுகளை தன்னுடைய பையில் இருந்து எடுத்து மு.க.ஸ்டாலினிடம் கொடுப்பது போலவும், அதை மு.க.ஸ்டாலின் வாக்காளர்களிடம் தருவது போலவும் உள்ளது.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தி.மு.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை கே.தண்டபாணி மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, அ.தி.மு.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

































January 6th, 2009 at 3:55 pm
Stalin got red-handed. Very shocking to see. He damaged his name and image among mass. Very unfortunate it happend right when during Chief Minister dreams. It proves the power of Media.
June 1st, 2009 at 2:30 am
YOUR NEWS AND PICTURES ARE VERY CLEAR AND SOUND, KEEP IT UP.
READERS CAN UNDERSTAND VERY CLEAR FONT AND EASY TO READ.
feel free to contact me
IBATHIME MARECAN
SAUDI ARABIA
+966558014592
marecan@ymail.com
June 1st, 2009 at 2:32 am
regarding article, i dont belive for this picture and staement. because every one know that DMK is going win with full majority. so we consider this foto graphs is bogus. (unbeliveable)