Friday, 2 Jan 2009
தைவான் சென்று வந்தேன்!
சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
இரண்டாவது பி.எச்.டி. பட்டத்திற்கு அந்நிய நாட்டுப் பல்கலைக் கழகத்தில் படித்து உழைக்கும் கோவை மாணவர் சுரேஷ்குமாரின் கல்வித் தாகம் என்னைக் கொண்டு சென்ற வியப்புலகிலிருந்து மீளவே வெகு நேரம் ஆயிற்று.
உலகில் சிறந்த கல்விமான்கள் சீனர்கள். உலகக் கல்வி நாடுகளிலெல்லாம் சீனர்கள்தாம் பெரும்பாலும் முன்னிலையில் இருக்கிறார்கள். மிகைப்படுத்த முடியாத, பலரால் ஜீரணிக்க முடியாத உண்மை இது.
அடுத்தபடியாக உலகின் சிறந்த கல்விமான்கள் இந்தியர்களே என்றால் நீங்கள் நம்புவீர்களா? உலகப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களுள் இவர்கள் இருவருக்கும் அடுத்தே உள்நாட்டு மாணவர்கள் வரமுடிகிறது என்றால் இது பெருமைப்படத்தக்க விஷயம் அல்லவா?
நாம் என்ன நோகத்திற்காக நாடுவிட்டு நாடு வந்து படிக்கிறோம்? நம் பெற்றோர் எவ்வளவு சிரமப்பட்டு நம்மைப் படிக்க வைக்கிறார்கள் என்பன போன்றவற்றை எண்ணி எண்ணிப் பார்த்து பொறுப்புணர்ச்சியுடன் படிக்கிறார்கள்.
ஆனால் சீனர்களை நம்மவர்கள் ஒரு விஷயத்தில் பின்னுக்குத் தள்ளிவிடும் ஆற்றலாளர்களாக இருக்கிறார்கள். எந்த விஷயத்தில் தெரியுமா? மொழி விஷயத்தில். சீனர்கள் ஆங்கிலத்தில் இன்னும் வலிமை பெறவில்லை. தங்கள் நாயகத்தில் வலுவான ஆங்கிலத்தைக் கற்காததால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் வந்து படிக்க நேரும்போது கடுமையான ஆங்கிலத்தை எதிர்கொள்கிறார்கள். எனவே இவர்கள் திணற நேரிடுகிறது.
நம்மவர்கள் அப்படியில்லை. வலுவான ஆங்கிலப் பின்னணி இருப்பதால் வெளுத்துக் கட்டுகிறார்கள். ஆனால் சீனர்களின் கடுமையான உழைப்பால் (தினமும் 12 முதல் 14 மணி நேரம்) சீக்கிரமே சுதாரித்து முயலை வென்ற ஆமையாய் முந்தி விடுகிறார்கள்.
உலகெங்கும் உள்ள பல்கலைக் கழகங்கள் இப்போது நம் இந்திய நகரங்களில் முகாமிட்டு, தங்கள் பல்கலைக் கழகத்திற்கு இந்திய மாணவர்களை ஈர்க்க முயற்சி செய்வது இதனால்தான்.
மேலும் மேல்படிப்பிற்கு நன்கு செலவு செய்யும் மனநிலை நம் பெற்றோருக்கு இருப்பதாலும் தங்களையோ, தலையையோ அடகு வைத்தாவது நம் பிள்ளையை வெளிநாட்டில் படிக்க வைத்துவிட வேண்டும் என்கிற உயரிய எண்ணம் கொண்டுள்ளதாலும் இவை கைகூடுகின்றன எனலாம்.
நம் மாணவர்களின் வெளிநாட்டு மோகமும், டாலர்கள், யூரோக்கள், பவுண்டுகளின் தாக்கமும் இதற்கு வலுச்சேர்க்கும் காரணங்கள்.
சுரேஷ்குமாரிடம் கேட்டேன், ”அண்டர் கிராஜுவேஷன் எனப்படும் பட்டப்படிப்பிற்கு இங்கு வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
”ஐயோ! வேண்டவே வேண்டாம் சார்!”
”ஏன் இப்படி அலறுகிறீர்கள்? அப்படியென்ன மோசமான சிந்தனையா இது?”
”அடிப்படைப் பட்டப் படிப்பை இந்தியாவில் முடித்துவிட வேண்டும் சார். +2 வகுப்பிலிருந்து இங்கு வந்தால் நம்மவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்கிற தெளிவே இருக்காது. இங்கு உள்ள மாறுபட்ட கலாசாரத்தில் சிக்கிச் சீரழிந்துவிட வாய்ப்பு உண்டு.”
”ஒரு பட்டப் படிப்பு வாழக்கையில் எது நல்லது எது கெட்டது என்பதைச் சொல்லித் தந்துவிடும் என்றா நம்புகிறீர்கள்?”
”ரொம்பத்தான் மடக்குகிறீர்கள்! நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒரு டிகிரி படிக்கும் காலகட்டத்தில் வாழ்வின் நெளிவு சுளிவுகள் புரிய ஆரம்பிக்கும். பொறுப்புணர்ச்சி நிறைய வந்துவிடும். வாழ்வின் நோக்கம் புரியும். வேறு எதையும் விடக் கல்விதான் முக்கியம் என்பது நன்கு தெரிந்திருக்கும். இதன்பிறகு ஏற்படக் கூடிய கலாசார ஈர்ப்புகளுக்கு விட்டில் பூச்சிகளாய் விழமாட்டார்கள்.”
சுரேஷ் குமாரை ஒரு மாணவராக எண்ண முடியவில்லை. இப்போதே ஒரு கல்வியாளர்போல் தெளிவாகப் பேசுவதாக நான் உணர்ந்தேன்.
”நான் வேறு உங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் சொல்லுங்கள்!”
”தூக்கம் கண்ணைச் சொக்குகிறது. நான் என் ஒய்.எம்.சி.ஏ. அறைக்குப் போக வேண்டும்.”
”பாகிஸ்தானிய உணவு பாக்கி இருக்கிறதே?”
”பாகிஸ்தான் உணவக உணவு என்று எண்ணும் போதே எனக்கு இனம் புரியாத தயக்கம் ஏற்படுகிறது.”
”அரசியல்தான் சார் நம்மைப் பிரித்துப் பார்க்கிறது. நாம் போகிற உணவக உரிமையாளர் எப்படி நட்பாகப் பழகுகிறார் என்று பாருங்கள்.”
”உணவகம் வைத்திருப்பவர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் பெருக அப்படித்தானே நடந்து கொள்ள முடியும்?.”
”பாகிஸ்தானியர்கள் ரொம்ப நல்லவர்கள். இங்கு பல பாகிஸ்தானிய மாணவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் நட்புடன்தான் இருக்கிறோம். நன்கு பழகுவார்கள். இருவருக்கும் இடையே எவ்விதக் கசப்புணர்வும் இல்லை.”
”அப்படியா?”
”சொல்லப்போனால் நாங்களெல்லாம் கூடிப் பேசிக் கொள்ளும்போது ஏன்தான் ஆட்சியில் இருப்பவர்கள் நமக்குள்ளே பகைமை உணர்வு ஏற்படும்படி நடந்து கொள்கிறார்களோ என்று வியப்போம்.”
”சரி, உணவகம் போவோம். வேறு வழியின்றி உங்களுடன் வருகிறேன். எனக்கு இப்போது பசியைவிடத் தூக்கமே பெரிதாகத் தெரிகிறது.”
”எங்களுக்கு ஒரு வேளைகூட வாய்ப்புத்தராவிடில் எப்படி?”
டாக்சி பிடித்தோம். நான், சுரேஷ்குமார், இன்னொரு நண்பர் (பெயர் நினைவிற்கு வர மறுக்கிறது) மூவருமாக பல்கலைக் கழக வாசலுக்கு வந்தோம்.
வழியனுப்ப ஒரு பெரிய தமிழ்ப்படையே வந்திருந்தது.
”நீங்க புறப்படுறது எங்களை என்னவோ பண்ணுது” என்றார் ஒரு மாணவர். அரட்டை அடித்த அந்த மாணவக் கூட்டம் அப்படியே அமைதியாகிப் போக, இந்த சென்டிமென்ட் வாக்கியம் அங்கு இருந்த இறுக்கத்தை மேலும் அதிகமாக்க மாணவர்கள் அனைவரும் இனம் புரியாத நெகிழ்ச்சிக்கு ஆளானார்கள். வாசலில் நின்ற பாதுகாப்புக் காவலர்களுக்கு ஒரே வியப்பு.
‘எவண்டா இவன்? இவனுக்கென்னடா இவ்வளவு பெரிய வழியனுப்பல்!’ என்பதுபோல் பார்த்தார்கள்.
மாணவர்கள் அனைவருடனும் ஒவ்வொருவருடனும் கைகுலுக்கி விடைபெற்ற போது புவனாவை மட்டும் கைகுலுக்காமல் தவிர்த்தேன், நம் பண்பாடு கருதி.
அவரோ பின் வரிசையிலிருந்து முன்வந்து, ”என்ன சார் என்னை மட்டும் விட்டுட்டீங்க?” என்றபடி கையை நீட்டினார். பிறகு எனக்கென்ன தயக்கம்?
பாகிஸ்தானிய உணவகம் ஒரு சந்துக்குள் இருந்தது. சொல்லப் போனால் பரிதாபமாக இருந்தது. உள்ளே எவரும் இல்லை. நாங்கள் மூவர் மட்டுமே வாடிக்கையாளர்கள்.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…

































January 8th, 2009 at 9:39 pm
I wanna share something i see in an international uni… I am in year 3 UG… I agree with Mr.Suresh..
You wont see a chinese / african girl smoking on campus… But indian girls (malaysian indian and also indian indian) and pakistani girls smoke lot also regularly go to pubs…….
few act to the extremely…….will sleep with anyone….even if that fellow is african does not matter,,,, iam not racist… but most african guys act weird with girls…
specially south indian girls (From UG) think that no one will respect you if you do not have a boyfriend… North indians treat south indians like a piece of shit…. pakistani-s do the same as well…chinese already have gfs.. so the left over is africans again… n these south indian girls desperately need bfs and they dont even care if that guy is a womanizer they just hook up with them….
i personally know how strict their parents are.. but how do they know what their kid doing…. when they call they say iam studying.. but they dont….
worst part is they have something called orkut.. these girls just add everyone…. even if they see someone in flight in that 3 hours they give their mobile no orkut id msn id this and that..
one or two find a nice bf back home but cheat on him here…
only students from colombo comes abroad… so girls dont dare to do such things as colombo is a small city and everyone knows about everyone…
i used to read lot and my parents taught lot.. so when i came here i am aware of what iam doing.. i keep my limits so its fine.. without parents and reading i would have been one of those girls..
nothing to say about guys.. .as guys are two extremes.. become drunkards and drug addict.. if not just as saint…