Friday, 2 Jan 2009

Avoiding peace

seeman.jpgஅமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியலின் தரம் எவ்வளவு தாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்குச் சரியான உதாரணமாக இருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான அரசியல் அலைகள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்குக் தார்மீக ஆதரவு அளிக்க எத்துணையோ வழிகள் இருக்கின்றன.

இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்களைத் தீர்க்க மத்திய அரசு இருக்கிறது. இலங்கைப் பிரதமரும் உயர் அதிகாரிகளும் இந்தியாவுக்கே வந்து இருக்கிற நிலைமைகளை எடுத்துச் சொல்ல, அதையும் மீறிப் போர்நிறுத்தத்தின் அவசியத்தை மத்திய அரசு பல வழிகளாலும் வலியுறுத்தி வருகிறது.

ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு எல்லை காத்து செயல்பட்டு வரும் வேளையில்,

தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகள் இங்கே இருக்கிற அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்பட்டு வருவது வேதனைக்குரியது.

கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றுதான் மாநிலத்தை ஆள்கிறது என்பதையும் உணராமல் சாலை மறியல் செய்கிறது ஒரு கட்சி. கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கூடக் கைதாகும் நிலை உருவாக்கப்படுகிறது.

வேடிக்கையாக இல்லை?

உணர்ச்சிப்பூர்வமான பேச்சுகள் தேவையில்லை. அவை நன்மை செய்யா என்பதை இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி போன்றவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சட்டம் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கையில், சட்டத்திற்குப் புறம்பாக ஒரு கூட்டம் ஒரு கட்சி அலுவலகத்தைத் தாக்க முற்பட்டு அக்கட்சியின் தலைவர்களின் உருவ பொம்மையையும் எரிக்கிறது.

எதிர்ப்பை, அதிருப்தியை வெளிப்படுத்த எத்துணையோ ஜனநாயக வழிகள் இருக்கின்றனவே! இவை இருக்க உணர்ச்சிப்பூர்வமான அணுகுமுறை தேவையா?

தங்கள் கட்சித் தலைவர்களின் உருவ பொம்மைகளை எரித்தவர்களைத் தமிழகத்தில் நடமாட விடமாட்டோம் என்று ஒரு தலைவர் பேசுகிறார். ஒரு தலைவர், தன் அமைப்பினர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கிறார்.

இவற்றை வைத்தே தமிழக அரசியல் களம் எங்கே போய்க கொண்டிருக்கிறது என்பதை அறிவார்ந்த விமர்சகர்கள் நன்கு உணர்ந்து கொள்ள முடியும். அடிப்படைக் கொள்கையில் உடன்படாமல் தேர்தல் இலாபங்களுக்காக மட்டம் கூட்டு வைத்திருக்கும் பின்புலத்தை இச்சம்பவங்கள் பட்டவர்த்தனமாக நமக்குச் சொல்லுகின்றன.

இலங்கை மண்ணில் அவதியுறும் தமிழர்களின் நலனைக் காக்க மத்திய அரசை வலியுறுத்திவிட்டு தமிழக எல்லைக்குள் வாழும் இலங்கை அகதிகளின் நலன்களின் மீது தமிழகக் கட்சிகள் கவனம் செலுத்துமானால் அதைத்தான் உண்மையான அக்கறையாக எடுத்துக் கொள்ள முடியும்.

மாதம் இருநூறு ரூபாய் உதவித் தொகையை வைத்துக் கொண்டு ஒரு அகதிக் குடும்பத் தலைவர் என்ன செய்துவிட முடியும்? இந்தக் கோணத்தில் தமிழகத் தலைவர்களின் இலங்கைத் தமிழர் பாசம் ஐயத்திற்குரியதாகவே இருக்கிறது.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Related Posts Title


One Response to “Avoiding peace”

  1. vijay

    dear lena,,, tamilnadu aamaithiya erukkaratha neengalavea mudivu panneeteengala, pooratamal vaalkkai ellai, eppati natanthe ind govt asaiyala,, ethuvea oru kannadano, malaiyaleio, maratiyano eruntha central govt eppati natanthukka mudiyuma?????

Leave a Reply