Friday, 2 Jan 2009

Active Work Necessity

lena.jpgதொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

தலைதூக்கத்தான் செய்யும். ஆனாலும் என் நட்பு வட்டத்திலும் வாசக வட்டத்திலும் இருவர் இதற்கு விதிவிலக்காக இருக்கிறார்கள். இவர்களை எண்ணி நான் வியக்கத் தவறுவது இல்லை.

எனக்கும் எப்போதாவது தொழிற்சலிப்பு ஏற்படுவது உண்டு. அப்போதெல்லாம் இந்த இருவரையும் முன்னுதாரண மனிதர்களாக எடுத்துக்கொண்டு சோம்பலையும் தூக்கத்தையும் விரட்டித் தள்ளி எழுந்திருப்பேன்.

உங்கள் வட்டத்திலும் இப்படி எவரும் இல்லாமலா போவார்கள். எண்ண வலையை வீசித் தேடிப்பிடியுங்கள். இவர்களை அடிக்கடி நினைவிற்குக் கொண்டு வாருங்கள்.

இவர்கள் போக, சில கோணங்களையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. தொழிலில் சலிப்பு வந்தால் அது மெல்ல வெறுப்பு என்கிற அடுத்த கட்டத்திற்கு நம்மைக் கொண்டு சென்றுவிடும்.

தொழிற்சலிப்பு நம் தொழிலின் ஆர்வத்தைக் குறைக்க ஆரம்பித்தால், அது நம் கிணற்று நீர் வரும் ஊற்றுக்கண்கள் ஒவ்வொன்றாக அடைத்து விடுவதற்குச் சமம்.

ஒரே மாதிரி செய்வதையே செய்து கொண்டிருப்பதால்தான் சலிப்பு வருகிறது. பாணியை அணுகுமுறையைச் சற்றே மாற்றுங்கள். புதிதாக ஏதும் செய்ய முடியுமா பாருங்கள். புதிதாக என்ன செய்யலாம். என்ன செய்யலாம் என்று தினமும் சிந்தித்தாலே நூறு யோசனைகள் தோன்றும். அவற்றைச் செயல்படுத்திப் பாருங்கள்.

மாறாக சலிப்பே தொடர்ந்தால் தொழிலில் மெல்ல அலட்சியம் காண்பிக்க நேரும். அலட்சியமோ தவறுகளுக்கும் குளறுபடிகளுக்கும் பாதை போடும்.

இவையே திட்டுகளாகவும் விமர்சனங்களாகவும் மாறும். இவை வருமானம் எனும் அடிமடியில் கை வைக்க ஆரம்பித்துவிடும்.

நமக்கு வாழ்வின் தேவைகளில் பெரும்பான்மையைத் தருவது நம் தொழிலே. சமூகத்தில் அந்தஸ்து பெருமை, மதிப்பு, புகழ், அங்கீகாரம், பாராட்டு என அனைத்தும் தரும் அட்சயபாத்திரம் தொழிலே! இதன் மீதா சலிப்பு? ஐயோ! கூடவே கூடாது!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Related Posts Title


Leave a Reply