Tuesday, 30 Dec 2008

Tamil cinema - 2008

தமிழ் சினிமா -2008  பகுதி 2

மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படங்கள்:

cinema-2008.jpg

தசாவதாரம்
சுப்ரமணியபுரம்
யாரடி நீ மோகினி
காதலில் விழுந்தேன்

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியைக் கண்ட திரைப்படங்கள்:

ரஜினியின் குசேலன்
விக்ரமின் பீமா
விஷாலின் சத்யம்
வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன்
பரத்தின் சேவல்

காலர் ட்யூனாக அதிகம் பதிவு செய்யப்பட்ட பாடல்கள்:

கண்கள் இரண்டால் (சுப்ரமணியபுரம்)
முகுந்தா முகுந்தா (தசாவதாரம்)
தோழியா என் காதலியா (காதலில் விழுந்தேன்)
அன்பே அன்பே (தாம்தூம்)
டாக்ஸி டாக்ஸி (சக்கரகட்டி)

மரணம்:

பிரபல தமிழ் எழுத்தாளரும், சினிமா கதை, வசனகர்த்தாவுமான சுஜாதா மறைந்தார் (பிப்ரவரி 27)

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற நடிகர் ரகுவரன் காலமானார் (மார்ச் 19)

இளைய நாயகன் குணால் தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் (பிப்ரவரி 7).

நாடகமேடையிலும் திரையுலகிலும் ஒருசேர சாதித்த பூர்ணம் விஸ்வநாதன் மறைந்தார் (அக். 1)

தமிழ்த் திரையுலகில் புதுப்புது சாதனைகள் புரிந்து வெற்றிகரமான இயக்குநராகத் திகழ்ந்த சி.வி. ஸ்ரீதர் காலமானார் (அக்.20)

தமிழ் சினிமா உலகம் மறக்க முடியாத ஒரேஒரு வில்லன், சொந்த வாழ்க்கையில் நாயகன் எம்.என். நம்பியார் மரணமடைந்தார் (நவ. 19)

இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா, ரஷ்யாவில் நடந்த தாம்தூம் படப்பிடிப்பின்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இசையமைப்பாளரும் வயலின் மேதையுமான குன்னக்குடி வைத்தியநாதன் மரணம்.

மேலும் தெலுங்கு நடிகர் சோபன்பாபு, பழம்பெரும் நடிகை டி.பி. முத்துலட்சுமி, குணச்சித்திர நடிகை தேனி குஞ்சரம்மாள், ஒளிப்பதிவாளர் சி.ஜே.ரவி, ஏ.வி.எம். செட்டியாரின் மனைவி ராஜேஸ்வரி அம்மாள், தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள், நடிக ர்பிரபுதேவாவின் மகன் விஷால் ஆகியோர் மரணமடைந்தனர்

லடாய்

அமெரிக்கா போலி விசா வழக்கில் நடிகை ஃப்ளோரா கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானார்.

கஜினி படப் புகழ் இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் கொடுத்த புகார் தயவால் நள்ளிரவு (சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்த சென்றபோது) கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீடு சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது. தன்னுடைய வீட்டை தாக்கியது விஜயகாந்த ஏற்பாடு செய்த அவருடைய  ஆட்கள்தான் என்று புகார் கூறினார் வடிவேலு. இந்தக் காமெடி கொஞ்ச நாட்களுக்கு தமிழகத்தை சிரிக்க வைத்தது.

பிரிவு

இயக்குநர் கெளதம் வாசுதேவன், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் ஜோடி பிரிந்தது.

இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஜோடி பிரிந்தது.

நடிகை மீரா வாசுதேவன் தனது கணவர் விஷால் அகர்வாலிடம் இருந்து பிரிந்தார்.

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனது மனைவி சுஜாயாவைப் பிரிந்தார்.

நடிகை ஊர்வசி நடிகர் மனோஜ் கே. ஜெயன் ஜோடி பிரிந்தது.

திரையுலகப் போராட்டங்கள்

இலங்கைத் தமிழர்களுக்காக அக்டோபர் 19ஆம் தேதி, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் சார்பில் ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய பேரணியும்  பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்த்திரையுலம் திரண்டு உண்ணாவிரதம் இருந்தது. நவம்பர் 1ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

நவம்பர் 5ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தனர்.

பொதுக் கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்தனர்.

பெரியார் தி.க. சார்பில் நடைபெற்ற கூட்டமொன்றில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக இயக்குநர் சீமான் மீண்டும் சிறையில் தள்ளப்பட்டார்.அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Posts Title


2 Responses to “Tamil cinema - 2008”

  1. Ram

    Very comprehensive & crisp report on tamil cinema 2008. Keep it up.

  2. tamilyasagan

    rathina surukkamai rasikkumpaddi amanthathu ungal tamil cinema-2008

Leave a Reply