தைவான் சென்று வந்தேன்!
லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
தைவான் தேசியப் பல்கலைக்கழக மாணவர்களுடன் நான் அடித்த அரட்டையைச் சில தைவானிய மாணவ மாணவிகள் எட்டிப் பார்த்துவிட்டுப் போன போது, அவர்கள் நினைத்திருப்பார்கள் இவர்கள் நெடுநாள் பழகியவர்கள் போல என்று!
சில மணித்துளிகளுக்கு முன்புதான் அறிமுகமானோம் என்று நாங்கள் விளக்கியிருந்தால் எப்படி இந்த நெருக்கம் சாத்தியம் என்று வியந்திருப்பார்கள்.
தமிழக அரசியல், இந்திய அரசியல், திரையுலகம், இந்தியர் மனப்பான்மைகள், இன்றையக் கல்வி முறை, தைவானியப் பண்பாடு, தைவானிய நடைமுறைகள் ஆகியவை நாங்கள் விரிவாக விவாதித்த விஷயங்கள்.
”இந்திய உணவிற்கு ஏற்பாடு செய்யட்டுமா?” என்றார்கள்.
”இல்லையில்லை அதை எப்போதும் சாப்பிடுகிறேன். தைவானிய உணவு வகைகள் சாப்பிட விரும்புகிறேன்” என்றேன்.
”ஐயோ! உங்களுக்கு ஏன் சார் இந்தத் தலைவிதி?” என்றார் ஒரு மாணவர்.
உடனே சுரேஷ்குமார் தம் நண்பர்களுடன் ஏதோ கிசுகிசுத்தார். ”உங்களை ஒரு பாகிஸ்தானிய உணவகத்திற்கு அழைத்துப் போவதாக இருக்கிறோம்” என்றார்.
”பாகிஸ்தானிய உணவகமா? சீனாவில் ஏற்கெனவே சாப்பிட்டிருக்கிறேன்.”
”இந்திய உணவகத்தில் சாப்பிடுவது போலவே இருக்கும். இங்கே மிகப் புகழ்பெற்ற உணவகம். உரிமையாளர் எங்கள் நண்பர். நல்லாக் கவனிப்பார்.”
”சரி, போவோம்.”
தைவானியப் பல்கலைக்கழக மாணவர்களுடன் விவாதிக்கப்பட்ட பல விஷயங்கள் காரசாரமானவை. அப்படியே வெளியிட முடியாத அளவிற்குக் கடுமையானவை.
”நாம பேசினதையெல்லாம் வெளியிடுவீங்களா?”
”லேனா சார் நல்லா இருக்கிறது பிடிக்கலையா உனக்கு? டின்னு கட்டிடுவாங்க அவரை.”
”அப்படியா சார்?” கேட்டவர் புவனா.
”நம்மவர்கள் உணர்ச்சிபூர்வமானவர்கள்மா, விமரிசனங்களைத் தாங்குற மனப்பக்குவம் குறைவு. நாம் பேசினது நாம் ஜீரணிக்கத்தான். ஆனால் எப்பவாவது அது வெளிப்படவேண்டிய வடிவில் வெளியிடப்படும்.”
”இப்படியெல்லாம் ஒரு துணிச்சலான பத்திரிகையாளர் சொல்லலாமா?”
”புவனா! நாம் பேசினதுல பல ஆட்சேபகரமான விஷயங்கள் இருக்கலாம். நமக்கு அவை சாதாரணமாகத் தெரியலாம். ஒரு விஷயம் பேப்பர்ல அரங்கேறுகிறபோது அது வேறு விதமாகப் பார்க்கப்படும் தெரியும்ல?.”
எனக்காக ஒரு மாணவர் வாங்கிய வக்காலத்து இது ஆதரவாக இருந்தது.
”இங்கே வகுப்பு நடக்கிற விதம் பத்திச் சொல்லுங்கள்!” என்றதுமே மாணவர்கள் படுசுவாரசியமான முகபாவத்தை வெளிப்படுத்தினார்கள்.
”சிகரெட் பிடிக்கப் பல்கலைக்கழக வளாகம் முழுக்க அனுமதி இல்லை.”
”பரவாயில்லையே!”
”பேராசிரியர்கள் அலட்டிக்கவே மாட்டாங்க. நல்லாப் பழகுவாங்க. வெரி ஃபிரண்ட்லி. ஆசிரியர் - மாணவர்ங்கிற இடைவெளியே அதிகம் இருக்காது.”
”அட! பரவாயில்லையே!”
”ஆனால் மாணவர்கள் பெரும்பாலும் சுயமாகச் சம்பாதித்துப் படிப்பதால் படிப்பில் நல்ல அக்கறை காட்டுவாங்க. ஆசிரியர்கள் கேஷுவலாகப் பழகுறாங்க என்பதற்காக ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கமாட்டாங்க.”
”பல மாணவர்கள் பகுதி நேரப் படிப்பாளிகள். நல்ல அலுவலகத்தில் நல்ல பொறுப்பில் இருக்கிறவங்க கூட இங்கே வந்து படிக்கிறாங்க. அதனால் பொறுப்பா நடந்துக்குவாங்க. ரொம்ப கட் அடிக்கமாட்டாங்க.”
”ஓ!”
”இங்கெல்லாம் சுயமான ஆர்வத்தை வளர்த்துக்கிட்டுப் படிக்கணும். கேள்வி கேட்க ஆளில்லை பாருங்க.”
”ஆமாமா!”
”வகுப்பு பிடிக்கலைன்னா எப்ப வேணும்னாலும் எழுந்து போயிடலாம். பேராசிரியரிடம் அனுமதியெல்லாம் கேட்க வேண்டாம்.”
”அப்படியா?”
”ஆமா. இயற்கை உந்துதல்னா பள்ளிக்கூடம் மாதிரி விரலை உயர்த்த வேண்டாம். எழுந்து போயிட்கிட்டே இருக்கலாம்.”
”செல்லு பத்தி சொல்லு!” ஒரு மாணவர்.
”ஏன் நீ சொல்லமாட்டியாக்கும்?” பதிலுக்கு ஒரு மாணவர்.
”செல்போன் வச்சுக்க வகுப்புலகூட அனுமதி உண்டு. அழைப்பு வந்தா எழுந்து போயிடலாம்.”
”அட! அவ்வளவு சுதந்தரமா?”
”ஆமா. ஆனா வைப்ரேஷன்லதான் வச்சுக்குவோம். நம்பர் பார்த்து, எடுக்கிறதா இல்லையான்னு முடிவு செய்யலாம்.”
”இவன் எப்பப் பார்த்தாலும் போன்ல பேசிக்கிட்டு வராண்டாவுலதான் இருப்பான்” என்று சிறிய இடைவெளியில் ஒரு செய்தியைத் திணிக்க, மறுபடி சிரிப்பலை.
”நீங்க என்ன படிக்கிறீங்க சுரேஷ்?”
”போஸ்ட் டாக்டர் பெலோஷிப்”
”அப்படீன்னா?”
”ஒரு டாக்டரேட் பட்டம் வாங்கிட்டு, மேலும் ஒரு டாக்டரேட் செஞ்சுக்கிட்டிருக்கிறேன்.”
”பட்டம் வாங்கினப்புறம் எப்படிப் போட்டுக்குவே சுரேஷ்?”
”டாக்டரோ டாக்டர்” என்று ஒருவர் கமெண்ட் அடிக்க, நல்ல நகைச்சுவை உணர்வு இவர்களுக்கு என்று தோன்றியது.
”எப்படி இங்கே வந்து சேர்ந்தீங்க சுரேஷ்?”
”எம்.எஸ்ஸி முடிச்சிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழே உள்ள அலுவலகத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். படிச்ச படிப்பு போதாதுன்னு தோணுச்சு. மேல்படிப்புப் படிக்க பிரான்சுக்கு போனேன்.”
”வேலை?”
”இராஜினாமா பண்ணிட்டுத்தான்!”
”கல்வியில் அவ்வளவு ஆர்வமா? அரசு வேலையை இராஜினாமா பண்ற அளவுக்காக படிப்புமேல மோகம்?”
”என் எல்லை ஒரு அரசு வேலையோட நின்னுடக்கூடாதுன்னு தோணுச்சு.”
”ரொம்பத்தான் துணிச்சலான முடிவு.”
”ஆமா. ஆனா இந்நேரம் வரைக்கும் வருத்தப்பட்டதில்லை.”
”மேல சொல்லுங்க.”
”போர்ச்சுகல்லுல அருமையான கோர்ஸ் ஒண்ணு கிடைச்சுது.”
”ஏம்பா படிக்க வேற நாடே கிடைக்கலையா உனக்கு?” என்று கேட்டு அந்தக் கணங்களை வெகு இலகுவாக்கினார் ஒரு மாணவர்.
”இருப்பா குறுக்கே குறுக்கே பேசிக்கிட்டு” என ஒரு மாணவர் அவரைக் கையமர்த்த சுரேஷ் தொடர்ந்தார்.
”ஆனா போர்ச்சுகல் விசா ரொம்பக் கஷ்டம், இழுத்தடிச்சாங்க. அதுக்குள்ள போர்ச்சுக்கல் பல்கலைக்கழகம் இனிமே நீங்க சேரமுடியாது. எல்லாம் முடிஞ்சு போச்சுன்னுட்டாங்க.”
”அந்த நேரம் தைவான் பல்கலைக்கழகம் டெல்லியில் இன்டர்வியூ வச்சுது. கலந்துக்கிட்டேன். நல்லாப் பண்ணினேன். தேர்வானேன். ஸ்காலர்ஷிப் நிறையக் குடுத்தாங்க.”
”தெரிங்சுக்கிட்டீங்களா சுரேஷ் எதுக்கு இங்க படிக்க வந்தார்னு?” என்று ஒருவர் கிண்டலடிக்க,
”அட சும்மா இருப்பா” என ஒருவர் அவரை அடக்க, சுரேஷ் தொடர்ந்தார். நிறையச் சொன்னார். அரசு வேலையை உதறிவிட்டு, கல்வித் தாகத்தால் இரண்டாவது டாக்டரேட் பட்டம் செய்ய வந்த சுரேஷ், எனக்கு, மாணவர்கள் மத்தியில் ஒரு கதாநாயகன்போல் தெரிந்தார்.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































