» Sadist’s people .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 26 Dec 2008

Sadist’s people

lena-kalkandu.jpgகிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

நம்மைச் சார்ந்து வாழ்பவர்கள் என்றால் சிலருக்கு ரொம்பவும் இளக்காரம். பொருளாதார இயலாமையால் கஷ்டப்படுகிறவர்களைக் கண்டால் காசு கொழுத்த சிலருக்கு இளக்காரம். தம்மிடம் சம்பளத்திற்காக வேலை புரிபவர்கள்; அலுவலக அடிப்படையில் தங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் என்றால் இவர்களுக்கு இளக்காரம்.

இதனால் சொல்லால் செயலால் இவர்களைச் சீண்டிப் பார்த்து அவர்கள் படும் வேதனையில், அவலத்தில் மகிழ்ச்சி காண்பவர்கள் உண்டு.

இவர்கள் சாடிஸ்டுகள் எனப்படும் பெரிய அளவில் துன்புறுத்தி மகிழ்பவர்கள் பிரிவில் சேர்க்குமளவு மோசமானவர்கள் அல்லர். இவர்களுக்குச் சில படிகள் கீழே நிற்பவர்கள். சரிவர வாடகை கொடுக்காதவர்கள், மற்றவர்கள் முன்னிலையில் வேகமாகப் பேசும் வீட்டு உரிமையாளர்கள் உண்டு. நண்பர்கள் பலரும் புறப்பட முயற்சி செய்யும் ஒரு செலவினப் பயணத்தில் ”உன்னால் முடியாது. நீ ஒதுங்கிக்கோ” என்று ஒரு நண்பரை மட்டும் சுட்டிக்காட்டும் ஒரு பணக்கார நண்பர் இருக்கவே செய்வார்.

ஒரு கிரிக்கெட் அணியில் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஓருவர் தம் கடைசி ஐந்து ஆட்டங்களில் 37 ரன்தான் அடித்திருக்கிறார் என்பதைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டிக் கேலி செய்பவர்கள் உண்டு.

ஒரு குடும்பத் தலைவர், தம் தலைமை பதவி காரணமாக, குறைபாடுகள் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டம் தட்டிப் பேசும் தகுதி இருப்பதாக எண்ணிக்கொள்கிறார்.

தாங்கள் இப்படியெல்லாம் பேசியதற்கும் நடந்துகொண்டதற்கும் நியாயம் கற்பிக்கவும் செய்வார்கள். இவர்களுக்குச் சில வார்த்தைகள். கண்டிக்கவும், தண்டிக்கவும், சுட்டிக்காட்டவும் உரிமை உள்ளவர்களுக்கு இன்னொரு பொறுப்பும் இருக்கிறது. உங்கள் வார்த்தைகளுக்கு கனமும் மதிப்பும் இருப்பதால் தனியே அழைத்து சுட்டிக்காட்டி ‘ஏன் இப்படி? உன்னால் முடியுமே’ என்று ஊக்கப்படுத்தும் பொறுப்புதான் அது.

உடனே நல்ல மாற்றம் நிகழ ஆரம்பித்து, அதற்கு நீங்கள்தாம் காரணம் என்று அவர்கள் உங்கள் புகழ் பாட ஆரம்பிக்க, இந்த மகிழ்ச்சிக்கு இணை அந்தக் கிள்ளலில் இருக்கிறது என்றா நினைக்கிறீர்கள்?

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Related Posts Title


Leave a Reply