Friday, 26 Dec 2008
போதுமா இந்தப் பொங்கல் இனாம்?
நம் பண்பாட்டில் இலவசங்களை விமரிசிப்பதை எவரும் விரும்புவதில்லை. தானம் கொடுக்கிற மாட்டைப் பார்ப்பதாவது என்பார்கள்.
கொடுக்குறவனுக்குக் குறுக்கே நிற்பது மகாப் பாவம் என்பார்கள்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே இதை எழுத முன்வருகிறேன்.
தி.மு.க. கூட்டத்தில் தமிழக மக்கள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நாளைச் சிறப்பாகக் கொண்டாட ரேஷன் பெறுவோர்க்கு சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கத் தேவையான அனைத்துப் பொருள்களையும் இலவசமாக வழங்குவதென முடிவாகியுள்ளது. ஏழை எளிய மக்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது ஒரு வரவேற்கத்தக்க முடிவாகவே தெரியும்.
இந்த இலவசத்தினை சற்று ‘ஸ்கேன்’ செய்து பார்த்தால் வேறு சில விஷயங்கள் புலப்படுவதைப் போல் தோன்றுகின்றன.
ஓட்டு வங்கியைக் கருத்தில் கொண்டே இந்த அரசு ஒவ்வோர் அசைவையும் மேற்கொள்ளுகிறது. நடுத்தர, ஏழை, எளிய மக்களை எப்படியெல்லாம் கவரலாம் என்கிற அளவுக்கதிகமான சிந்தனையிலேயே தி.மு.க. வட்டாரம் நாளும் பொழுதையும் நகர்த்துகிறது.
ஓர் ஆட்சி மக்களைக் கூடுதல் இலவசங்களினால் எப்போது மகிழ்ச்சிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்றால், தம் பக்கத்துக் குறைகளால் ஏற்பட்ட இரணங்களை ஒத்தடம் கொடுக்க முனையும்போதுதான்
புயல் நிவாரணத் தொகை விஷயத்தில் அ.தி.மு.க. அள்ளிவிட்டதை அப்படியே பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தம் தி.மு.க.விற்கு பாவம்!
இதுவும் போதாது என்று அரசு இயந்திரத்திற்குக் கடுமையான வேலை வைக்கும் இந்தப் பொங்கல் இனாம் வேறு ஏற்கனவே அளிக்கப்பட்ட மளிகைச் சலுகைகள் எடுபடாத நிலையில் இந்தப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுமக்களின் அல்லது ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைய. ஒரு பாழும் கிணறாம். அதில் ஒரு முதலையாம். மேலே ஒரு புலியாம். நடுவில் ஒரு மரக் கிளையாம். அதில் ஒரு மனிதனாம். உயிர்ப் போராட்டமாம். அப்போது அந்த மரக் கிளையின் தேன் கூட்டிலிருந்து ஒரு சொட்டுத் தேன் அவன் வாயில் விழுந்ததாம். ஆகா எவ்வளவு இனியது இந்த இனிப்பு என மகிழ்ந்தானாம் உயிர்ப் போராட்டத்தையும் மறந்து.
அந்தக் கதைதான் இந்தப் பொங்கல் இனாம் கதையும்.
திருமங்கலம் இடைத்தேர்தலைச் சந்திக்க தி.மு.க. பயப்படுகிறது என்று போட்டுடைக்கிறார் ஜெயலலிதா.
தி.மு.க.வின் இந்தப் பொங்கல் இனாம் நடவடிக்கை மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டிய மிகப் பெரிய நிர்ப்பந்தத்தில் அது இருப்பதையே வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…
2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!
2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!
2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!
2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!
2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!
2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!
2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..
2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்
2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?
2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்
2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?
2008/09/05 இருபக்க இடைவெளிகள்!
2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!
2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்
2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!
2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?
































