Friday, 19 Dec 2008
வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி
தாராளமாய்த் தண்ணீர் அருந்துங்கள்
தண்ணீர் குடிக்கலாமா?
காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீரை வெறும் வயிற்றில் அருந்தி எல்லா நோய்களையும் குணமாக்கிக் கொள்ளும் தண்ணீர் வைத்தியம் இன்று பலரால் பின்பற்றப்படுகிறது.
கட்டடப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியப் பெருமக்களும் நன்கு தண்ணீர் அருந்துவதில்லை. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கப் போகவேண்டும் என்பதற்காகவே தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கிறார்க்ள. நீண்ட நேரம் பேருந்தில் பயணிக்கிறவர்களும் இதே போல் தவிர்த்து விடுகிறார்கள். இது நல்ல பழக்கமல்ல. பேருந்துப் பயணிகள் கையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு இறங்குவதற்குச் சற்று முன்பும், பயணத்திற்கு இருமணி நேரம் முன்பும் அருந்த வேண்டும்.
ஜாக்கிங் செல்பவர்களும், உடற்பயிற்சி செய்பவர்களும் உடலில் நீர்ச்சத்தை வியர்வை மூலம் அதிகம் அகற்றுகிறார்கள். அதே நேரத்தில் இந்த இழப்பை ஈடுகட்டப் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதில்லை. இதனால், இவர்களுக்கு மிக எளிதாகச் சிறுநீரகக் கற்கள் உருவாகிவிடும். தண்ணீர் நன்கு அருந்துவதால் பல நோய்கள் குணமாவதுடன் மன இறுக்கம் அகலும்.
ஒரு தடவைக்கு 250 மில்லி வீதம் 8 முறையாவது ஒவ்வொருவரும் நன்கு தண்ணீர் அருந்த வேண்டும்.
அசைவ உணவு, பால், தக்காளி போன்ற ஆக்ஸலேட் உப்பு அதிகம் உள்ள உணவை அதிகம் சாப்பிடுபவர்களும் உணவில் உப்பை நிறையச் சேர்த்துக் கொள்பவர்களும் சிறுநீர்க் கற்களை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள், இந்த உணவு வகையால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளவர்கள், அதிகமாகத் தண்ணீர் அருந்தி விடுங்கள்.
தினமும் கீரை சேர்ப்பவர்களும் நன்கு தண்ணீர் அருந்த வேண்டும். பாலைக் கெட்டியாக அருந்துவது தவிர்க்கப்பட வேண்டும். அசைவ உணவு சராசரியாகத் தினமும் 80 கிராம் வரையே இருக்கலாம்.
50 கிராமிற்கு மேல் வேர்க்கடலை சாப்பிடுவதும் உடலில் நீர்ச்சத்தைக் குறைத்து, சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். வைட்டமின் ‘சி’ மாத்திரை சாப்பிடுகிறவர்கள் மாத்திரையின் அளவைக்கூட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ‘சி’ மாத்திரைக் அதிகம் சாப்பிட்டால் கற்கள் உருவாக வாய்ப்புண்டு.
சிறநீரகக் கற்களை, எலுமிச்சம்பழ சர்பத் நன்கு கரையச் செய்யும், இதில் கிடைக்கும் வைட்டமின் ‘சி’யே ஒருவருக்குப் போதுமானது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதும் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
தினமும் தண்ணீரை நன்கு அருந்தி உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நடு இரவில் நன்கு தண்ணீர் அருந்துங்கள்!
இரவு நேரத்தில் தூக்கம் கலைந்து சிறுநீர் கழித்தால், குடி தண்ணீர் நன்கு அருந்திய பிறகு படுக்கைக்குச் செல்லுங்கள். வைட்டமின் பி6 (பைரிடாக்ஸின்) உள்ள உணவுகள் சிறுநீரகத்தைப் பாதுகாக்கும். சிறுநீரகக்கற்கள் உருவாகாமல் தடுக்கும் கைக்குத்தல் அரிசி, பார்லி, சோயா மொச்சை, தண்டுக்கீரை, உருளைக் கிழங்கு, வாழைப்பழம், கிசுமுசுப்பழம் முதலியவற்றில் இந்த வைட்டமின் தாராளமாக உள்ளது. எனவே, இவற்றையும் உணவில் சேர்த்து வாருங்கள்.
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

































December 21st, 2008 at 6:17 am
VERY USEFUL AND EXCELLENT TIPS ABOUT \THE WATER THERAPY\…