Friday, 19 Dec 2008
அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!
அவர் அப்படிப் பேசினது நியாயமில்லை.
அவர் அப்படி நடந்துகிட்டது நியாயமில்லை; என்று அடிக்கடி நாம் நீதிபதிகளாகித் தீர்ப்புக் கூறியபடி இருக்கிறோம்.
இப்படிச் சுயதீர்ப்பு எழுதிக் கொள்கிறவர்கள் தங்கள் மனசாட்சிகளைக் கால்களுக்குக் கீழே போட்டு மிதித்து விடுவதுடன், தங்களுக்குச் சாதகமாகப் பேசும் ஜால்ராக்களை மட்டுமே தேர்ந்தெடுத்து, ‘கேட்டீங்களா இந்த அநியாயத்தை’ என்றவாறு ஆரம்பித்து சுகமாகக் குளிர் காய்கிறார்கள்.
ஏன்? இவர்கள் கன்னத்தில் அறைகிற மாதிரி எதிராளியின் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லக்கூடிய ஆளாகத் தேடி வழக்குரைக்க வேண்டியதுதானே? மாட்டார்கள்! ஒரு கையில் ஓசை வராது. இரு கைகளின் மோதலில்தான் ஓசை வரும். ஒரு பக்கத் தவறு என்பதே உலகில் பெரும்பாலும் இல்லை. தவறுகளின் விகிதாசாரங்களில்தான் வேறுபாடே தவிர, குறைபாடு என்பது அடியோடு ஒரு பக்கமாகச் சாய்ந்திருப்பது இல்லை.
அவர் அப்படிப் பேசினார் என்றால், அவரை அப்படிப் பேச வைத்தவர்கள் நாம். அவர் அப்படி நடந்துகொண்டார் என்றால், அவரை அப்படி நடந்துகொள்ள வைத்தவர்கள் நாம்.
ஒரு சிறு தவறு ஒரு பெருந்தவறுக்குக் காரணமாக அமைவது சங்கிலி நிகழ்வுகள் என்கிற அடிப்படையில்தான்.
சமூகத்தின் நோக்கில், சட்ட நோக்கில் கைநீட்டி அடித்தவன்; தடித்த சொற்களைப் பேசியவன் அநியாயவாதியாகிறான். ஆனால், அவனை இந்த நிலைக்குத் தள்ளியவனை இந்தச் சமூகமோ சட்டமோ இரக்கத்துடன் பார்க்கிறது. இதுவே தனிமனிதக் குணமாகவும் ஆகிவிட்டது.
உங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டு உங்கள் செயலைப் பிறர் செய்திருந்தால் அவரை எப்படி விமர்சிப்பீர்கள்?
ஓர் அநியாயத்திற்குள் எதிரியின் கோணத்தில் நியாயம் தேடுங்கள்; குறைந்தபட்சம் மனதாவது சமாதானம் அடையும்.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்
2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!
2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?
2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!
2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!
2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!
2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?
2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!
2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!
2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?
2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!
2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்
2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!
2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!
2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!
2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!
2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!
2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!
2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?
2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!
2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!
2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?
2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!
2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?
2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?
2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

































December 19th, 2008 at 5:41 am
you have to change first before writing such articles….