» Lena blames govt for Mumbai attack .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 19 Dec 2008

Lena blames govt for Mumbai attack

advani.jpgநட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

உள்ளாட்சித் துறை அமைச்சர் ப.சிதம்பரம் தம் துறையில் உள்ள ஓட்டைகளையும் நடந்துள்ள குறைகளையும் ஒப்புக் கொண்டது மிகப் பெருந்தன்மையான விஷயம் என்று படுகிறது.

மும்பையில் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த 60 மணி நேரப் பேராட்டமும், வெடித்த கிரானைட்டுகளும், உறுமிய துப்பாக்கிகளும் உலகையே நம்மை நோக்கிப் பார்க்க வைத்துவிட்டன.

யார் இந்தத் தீவிரவாதிகள்? இவர்களுக்கு இந்த மண் என்ன கெடுதலைச் செய்தது? ஏன் அப்பாவி மக்களைக் கொல்ல வேண்டும்? ஒரு பாவமும் அறியாத வெளிநாட்டவர்களை ஏன் சாகடிக்க வேண்டும்? விடைகாண முடியாத வினாக்களாக அனைவர் மனத்திலும் தொக்கி நிற்கின்றன.

எவ்வளவோ நாள்களாக திட்டமிட்டுத் தனிப் படகு அமைத்துக் கொண்டு மும்பைக் பக்கம் வந்திறங்கி நாள்படத் தங்கி அனைத்திற்கும் அழகுறத் திட்டமிட்டு தங்கள் பக்கம் குறைவான சேதத்தையும் எதிராளிக்குப் பலத்த சேதத்தையும் விளைவித்துவிட்ட வெற்றிக் களிப்பில் இருக்கும் இவர்களை எண்ணினால் நமக்கு ஏற்படுபவை அவமானமும் தலைக்குனிவுமே!

இரகசிய உளவுத் துறைகள் என்னதான் செய்து கொண்டிருந்தன?

முன்னேற்பாடுகளை இப்போது முடுக்கிவிட்டிருக்கிற மத்திய அரசு, கடற்படை இப்படி நடக்கலாம் என்று எச்சரித்தபோது ஏன் மெத்தனமாக இருந்துவிட்டது?

மும்பையில் படித்த இரத்தக்கறை வெளிநாட்டவர் மனத்திலிருந்து மறைய இன்னும் எத்தனைக் காலம் ஆகுமோ தெரியவில்லை.

இந்தியாவில் மென்பொருள் துறை அபாரமாக வளர்ந்து வருகிறது. அங்கு போய் நம் நிறுவனத்திற்கு வேண்டியவற்றை முடித்துக் கொள்ளலாம் என்று சராசரியாக வந்திறங்கிய வெளிநாட்டவர்கள் இனி என்ன முடிவுக்கு வருவார்கள்? வெளிநாடுகளுக்குச் சென்று நம்மவர்கள் வேலை பார்த்த கதைகள் போக, வெளிநாட்டவர்கள் இங்கு வந்து வேலை பார்க்கும் இனிய புதிய சூழல் உருவானதே இனி இது என்ன ஆகும்?

எல்லையோரப் பகுதிகளைத் தவிர பிற பகுதிகளில் பாதுகாப்பானவை என்று எண்ணிக் கொண்டிருந்த இந்தியா வரவிரும்பும் சுற்றுலாப் பயணிகள் இனி என்ன முடிவிற்கு வருவார்கள்?

இக்கேள்விகளுக்கான சாதகமான ஆறுதலான பதில்களை நமக்கு எவரேனும் தருவார்களா? எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கடுமையாக சில கேள்விகள் கேட்டார். அமெரிக்காவிலும் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்தது. அதற்குப் பிறகு அங்கு ஒரு தாக்குதலாவது உண்டா? இத்தனைக்கும் இந்தத் தீவிரவாதத்தின் தலையாய கோபம் அமெரிக்காதானே? அமெரிக்கா அதன் பிறகு சற்றேனும் தீவிரவாதிகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்ததா? அவர்கள் மட்டும் எப்படித் தீவிரவாதம் ஒன்றுகூட நடக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள்? அவர்களுடன் நட்புப் பாராட்டும் மத்திய அரசு அவர்களிடமிருந்து இதையெல்லாம் கற்றுக் கொண்டிருக்க வேண்டாமா? இன்னும் எத்தனை நாள்களுக்கு இத்தகைய தாக்குதல் நிகழத் திரும்பத் திரும்ப இடம் தந்து கொண்டிருப்பீர்கள் என்றெல்லாம் கேட்டுப் பொரிந்து தள்ளிவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காக இவரது கேள்விகளை ப.சிதம்பரம் போன்றவர்கள் புறக்கணிக்கவோ அலட்சியப்படுத்தாமலோ இருந்தால், அது புத்திசாலித்தனம்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Related Posts Title


Leave a Reply