» Maveeran Maruthanayagam:Manimekalai Prasuram .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Wednesday, 17 Dec 2008

Maveeran Maruthanayagam:Manimekalai Prasuram

மாவீரன் மருதநாயகம்: மணிமேகலைப் பிரசுரத்தின் புதிய வெளியீடு

marudhanayagam.jpg

ருதநாயகம் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சமில்லை. நாயகன் கமல் பட பாணியில் கேட்க வேண்டுமானால், மருதநாயகம் நல்லவரா கெட்டவரா என்ற கேள்வி எழும்.

இந்தக் கேள்விக்கு இடமில்லை என்கிறார் மாவீரன் மருதநாயகம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து, அதை நூலாக்கிய ஆசிரியர் எல்.டி.ஏ. பீட்டர் ராயன். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் வித்தே மருதநாயகம் தான் என்கிறார் ஆணித்தரமாக.

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் 34ஆண்டுகள் பணியாற்றி அரசு துணைச் செயலாளராக பணி ஓய்வு பெற்றவர் பீட்டர் ராயன்.

இலக்கியம் மற்றும் சரித்திர துறைகளில் ஆர்வமிக்க இவர், மாவீரன் மருதநாயகத்தை மிக அருமையாகப் படைத்திருக்கிறார்.

எதிரியிடமே பயிற்சி பெற்று அந்த எதிரியையே அழிக்கத் துணிந்த மாவீரன் என்கிறார் மருதநாயகத்தை. இவருடைய ஆதாரப்பூர்வமான செய்திகள் மருதநாயகத்தின் மீதான சந்தேகத்தை தள்ளிவைக்க வைக்கிறது.

எளிமையான நடையில் சம்பவங்களை சுவைபட கூறுவதுடன் அவற்றை ஒழுங்குக் குலையாமல் நமக்குத் தந்திருக்கிறார் பீட்டர் ராயன்.

மணிமேகலைப் பிரசுரத்தின் நல்ல நூல் வெளியிட்டாளர் என்கிற பெருமைக்கு இன்னொரு சான்று தான் மாவீரன் மருதநாயகம்.

நாம் பெற்ற மாவீரன் பற்றி அனைவரும் படித்தறிய வேண்டிய நூல் இது.

மேற்கொண்டு விவரங்களுக்கு மணிமேகலைப் பிரசுரத்தை அணுகவும்.

தொலைபேசி எண்கள்: 044-24342926, 044-24346082
மின்னஞ்சல்: manimekalai1@dataone.in

Most Commented Posts


One Response to “Maveeran Maruthanayagam:Manimekalai Prasuram”

  1. m.sola siva rajan

    maruthanayagam pillai first freedom fighters … siva sholavandan. madurai

Leave a Reply