 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
 |
 |
எம்.கார்த்திகேயன், திருவள்ளூர்.
|
 |
ஊழல் தடுப்புப் போலீசார் விழித்துக் கொண்டுவிட்டார்களே?
|
 |
இரண்டு மாதங்களாய் அவர்கள் வாங்குவதுதான் சம்பளம். அதற்கு முன்னால் பல மாதங்களாய் வாங்கியவையெல்லாம் வெறும் மானியத் தொகைகள்.
|
|
 |
 |
 |
 |
ஜே. கண்ணன், சென்னை.
|
 |
ம.தி.மு.க. பொருளாளர் கண்ணப்பனின் தனித் தமிழ்நாடு மலருமா?
|
 |
கண்ணப்பனின் பணம் கனவுப் பணம்! செலவிற்கு உதவாது.
|
|
 |
 |
டி. சத்தியமூர்த்தி, பழவந்தாங்கல்.
|
 |
சில கட்சியினர் வெளியிலிருந்து ஆதரவு தருகிறார்களே, ஏன்?
|
 |
ஆற்றுப்பெருக்கும், அரசு வாழ்வும் நீடிக்கா என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். சிறு செளகரியத்திற்காக பல நாள் மண்டியிட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவர்களின் எண்ணம் தவறில்லை.
|
|
 |
 |
 |
 |
பி. மணிகண்டன், சிவகாசி.
|
 |
ப.சிதம்பரத்திடமிருந்து நிதியமைச்சகம் பறிக்கப்பட்டது ஒருவகையில் பதவி இறக்கம்தானே?
|
 |
உள்துறை அமைச்சர் என்பது கிட்டத்தட்டத் துணைப் பிரதமர் பதவிக்குச் சமம். ராஜாஜிக்குப் பிறகு இப்பதவியைப் பெற்றிருக்கும் இரண்டாவது தமிழர் ப.சிதம்பரம். நிதியமைச்சகம் வேறு எவருக்கேனும் அளிக்கப்பட்டிருந்தால்கூட உங்கள் கோணத்தில் சிந்தித்திருக்கலாம். இதைத் தக்க வைத்துக் கொண்டவர் பிரதமர் என்கிறபோது, இதைப் பதவி இறக்கமாகக் கருத முடியவில்லை. வரிக் கட்ட நேர்வதால் வயிறு எரிந்து ப.சிதம்பரத்தை விமரிசிப்பவர்கள் உண்டு. ப.சிதம்பரம் கொண்டு வந்த நிதிச் சீர்திருத்தங்களை அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் வியந்து பேசுவதாகத்தான் எனக்குத் தகவல்.
|
|
 |
 |
 |
 |
எஸ்.பீட்டர், வாணியம்பாடி.
|
 |
இன்றைய ஓட்டல் விலைகள்?
|
 |
நமக்குப் பசியை மறக்கடிக்கும் அளவிற்கு இருக்கின்றன. வரவர இரு அரசுகளும் நம்மைத் தேவர்களாக்கிக் கொண்டிருக்கின்றன. தேவர்களுக்குப் பசியே எடுக்காதாம்.
|
|
 |
 |
 |
 |
பி. செந்தில், சென்னை.
|
 |
சங்கடம்-தர்மசங்கடம் விளக்கம் தேவை?
|
 |
கலைஞரை ஏதாவது கேட்காமலா என்று சோனியா நினைத்தால், அது சங்கடம்! சோனியா ஏதாவது கேட்டு விடுவாரோ என்று கலைஞர் நினைத்தால், அது தர்ம சங்கடம்! போதுமா (இந்த) டெபினிஷன்?
|
|
 |
 |
 |
 |
சே.கருணாகரன், வந்தவாசி.
|
 |
தே.மு.தி.க.,வின் இன்றையத் தேவை?
|
 |
இவர்களுக்கு உடனே தேவையானது அவ்வை சொன்ன ‘ங’வைப்போல் வளை’. ஆட்சியில் அமரும் வரை, ‘ங’ என்ற எழுத்தைப் போல் அனைவரையும் இவர்கள் அணைக்க வேண்டும். இல்லாவிடில் அடுத்த கட்சிக்காரர்களே இவர்களை அணைத்து விடுவார்கள் அணைத்து!
|
|
 |
 |
 |
|
 |
 |
 |
 |
வி.சந்தானம், தஞ்சை.
|
 |
இருபது சதவீத ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்யலாம் என அரசு ஆணையிட்டுள்ளதே?
|
 |
இந்த ஆணையால் விவசாயிகளின் நெஞ்சு குளிரும் அதே சமயம் இந்த இருபது சதவீதக் கொள்முதலுக்கு அதிகாரிகளிடம் எண்பது சதவீத ஈர மனது வேண்டும். இந்த ஆணையில் இது குறிப்பிடப்படவில்லை.
|
|
 |
 |
 |
|
 |
 |
 |
 |
ஏ. குணசீலன், பழவேற்காடு.
|
 |
டி.ஜி.பி. விஜயகுமார் போலீஸ் துறை பயிற்சி அகடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பது பற்றி…?
|
 |
ஒரு கேரளர் பெற்ற அதிகபட்ச உயரிய காவல்துறைப் பதவி என நினைக்கிறேன். ஹைதராபாத்தில் இருக்கும் இந்தப் பயிற்சியகத்தின் மூலம் இவர் தலைமையின் கீழ் மிகச் சிறந்த மிடுக்கான, வீரமான காவல்துறை அதிகாரிகள் நம் நாட்டிற்குக் கிடைப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்குக் கிடைத்து வந்த ஓர் அருமையான காவல்துறை அதிகாரியின் சேவை கிடைக்காமல் போகிறது என்ற வகையில் எனக்குச் சற்று ஏமாற்றமே ஏற்படுகிறது.
|
|
 |
 |
 |
 |
சி.பிரகாசம், உடுமலைப்பேட்டை.
|
 |
காடுவெட்டி குருவை விடுவித்ததன் பின்னணி என்ன?
|
 |
அதன் உள்காரணங்களுக்குள் போக விரும்பவில்லை என்று தங்கபாலு சொல்வதிலிருந்து ஏராளமான உள்காரணங்கள் இருக்கின்றன என்பது தெரிய வருகிறது. காடுவெட்டி குருவின் பேச்சினால் மானமே போய்விட்டது என்று குதித்த தி.மு.க. அந்த மானம் எப்படித் திரும்பி வந்தது என்று எப்படி நியாயப்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.
|
|
 |
 |
 |
 |
பி. சிவராஜ், சென்னை-50.
|
 |
பெட்ரோல் விலை நிர்ணய விஷயத்தில் மத்திய அரசின் கொள்கை பிடிபடவில்லையே!
|
 |
அமெரிக்க முறையைக் கொண்டு வர வேண்டும். இதற்கு எந்த ஆட்சிக்கும் துணிவு இல்லை. அமெரிக்காவில் உள்ள பெட்ரோல், டீசல் விலை எண்ணெய்ப் பீப்பாயின் விலையோடு நேரிடையாகச் சம்பந்தப்பட்டிருக்கும். பீப்பாய் விலை குறைந்தால் மக்களுக்கும் உடனே குறைக்கப்படும். உயர்ந்தால் உடனே உயர்த்தப்படும். இந்தியாவில் ‘ஓட்டு அரசியல்’ நடப்பதால் ஒருபோதும் இந்த முறை பின்பற்றப்படாது என எண்ணுகிறேன்.
|
|
 |
 |
 |
 |
ஆர்.திருஞானம், புதுச்சேரி.
|
 |
தி.மு.க.-பா.ம.க. மறுபடி கைகோர்க்கும் போலத் தெரிகிறதே?
|
 |
தி.மு.க.வும் பா.ம.க.வும் முரண்பாடு கொள்வதை சோனியா விரும்பவில்லை. சோனியாவின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளும் நிலையில் இன்று தி.மு.க. இல்லை. எனவே நாங்கள் எங்கே வெளியேற்றினோம் என்று கலைஞரே முரண்பட்டுப் பேசுகிறார். காடுவெட்டி குரு விதிவிலக்காகச் சிறப்பு முயற்சியில் விடுவிக்கப்படுகிறார். இவருக்காகச் சட்டம் வளைந்தாலும் பரவாயில்லை; பணிந்தே வருகிறது. ஆனால் விசுவாமித்திரர் பாணியில் திரும்பிக்கொண்டு போஸ் கொடுக்கிறது. பா.ம.க.தேர்தல் நெருங்க நெருங்கக் குலவினாலும் குலவுவார்கள். கூட்டணி வைத்துக் கொள்ளாமல் தனித்து நிற்குமளவு பா.ம.க. அப்படி ஒன்றும் பலமாக இல்லை. பலவீனப்படுத்த விஜயகாந்த் வேறு வேலை செய்கிறாரே!
|
|
 |
 |
 |
 |
எம்.முத்து, திருச்சி.
|
 |
தாஜ் ஓட்டல் போராட்டத்தில் வீர மரணம் அடைந்த மேலூர் உன்னி கிருஷ்ணனின் தந்தை தம்மைக் காண வந்த கேரள முதல்வரைத் திருப்பியனுப்பிய செயல் பற்றி…?
|
 |
ஜூனியர் உன்னி கிருஷ்ணன் தம் வீரமரணத்தால் உள்ளத்தில் உயர்ந்து நிற்கிறார். சீனியர் உன்னி கிருஷ்ணனோ தம் செயலால் பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கிறார். துக்கம் விசாரிக்க வந்தவர்களை அவமானப்படுத்துவது பொறுத்துக் கொள்ள முடியாத தவறு. எப்பேர்ப்பட்ட மகனுக்கு எப்படிப்பட்ட சராசரிக்கும் கீழான ஒரு தந்தை.
|
|
 |
|
|
December 12th, 2008 at 9:39 am
arumiyana kelvigal azagana pathilgal
December 12th, 2008 at 11:06 am
“எப்பேர்ப்பட்ட மகனுக்கு எப்படிப்பட்ட சராசரிக்கும் கீழான ஒரு தந்தை.” you will know the pain when you lose ur loved one…. you are also சராசரிக்கும் கீழான ஒரு மனிதன் for commenting one someone who would be suffering for his son’s death… ppl act without thinking when they lose someone they loved the most… SAME of you lena…. I thought you were great whenever i read ur oru pakka katturai… i am ashamed as ur fan…. You need to apologise to the dad in publlic to wash ur sins…
December 16th, 2008 at 12:37 am
angel statement is not bad. lena’s answer gives different meaning and creates unwanted thoughts.