தைவான் சென்று வந்தேன்
அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
அந்த இந்திய தைவானிய ஜோடியைப் பார்த்துக் கொண்டே இருக்க, அந்த ஜோடி ஒரு நூலகத்திற்குள் நுழைந்துவிட்டது.
நானும் நூலகத்திற்குள் நுழையப்போக, திடீரென்று ஓர் ஐயம். பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் தான் இந்த நூலகத்திற்குள் நுழையலாம் என்று விதி ஏதும் இருக்குமோ?
நாம் நுழைந்தால் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிட்டால்? சேச்சே! அப்படியெல்லாம் செய்யமாட்டார்கள்.
உள்ளே போன ஜோடி ஏதும் நூல்களைத் தேடிப் படிக்கப் போகிறதாகும் என்று பார்த்தால், உள்ளே போய் அதிகாரி போல் இருந்த ஒருவரிடம் உள்ளேன் ஐயா சொல்லிவிட்டு, கையெழுத்து ஒன்றைப் போட்டுவிட்டுப் புத்தகங்களை எடுத்து அடுக்க ஆரம்பித்துவிட்டது.
என்னது இது! நூலகத்தில் நுழைந்தால் படிப்பார்கள். குறிப்பு எடுப்பார்கள். இவர்கள் என்ன நூல்களை எடுத்து அடுக்குகிறார்கள்?
இதுபற்றி நாம் சந்திக்க இருக்கும் சுரேஷ்குமாரிடம் கேட்கவேண்டும்.
இருந்தாலும் என் ஊகத்தை இப்போதே சொல்லிவிடுகிறேன். இவர்கள் தங்கள் சம்பாத்தியத்திற்காக இந்த நூலகத்தில் பகுதி நேர ஊழியர்களாக வேலை பார்க்கிறார்கள்.
விடுதியில் நுழைந்து சுரேஷ்குமாரைச் சந்தித்தேன். மிகுந்த மகிழ்வைத் தந்த சந்திப்பு இது.
சுரேஷ்குமாரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் தந்துவிடுகிறேன்.
கோவை தமிழர். எம்.எஸ்ஸி. படித்து முடித்துவிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். ஆனால் கல்வித் தாகம் தொடர்ந்து இருந்த காரணத்தால், இணைய தளத்தின் மூலம் மேற்படிப்பிற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டே இருந்தார். முதலில் பிரான்சில் ஒரு பல்கலைக்கழக வாய்ப்பு. ஆனால் ஓராண்டு காத்திருங்கள் என்றது அப்பல்கலைக்கழகம். தாங்காது இந்தக் கால விரயம் என்று புறந்தள்ளிவிட்டார். பிறகு போர்க்சுக்கல் பல்கலைக்கழகம் விசா சாமானியத்தில் வருவேனா என்றது. அதற்குள் கல்லூரி வகுப்புகள் பல ஓடிவிட்டன. இறுதியாக தைவான் பல்கலைக்கழகம். இன்று இதில் பி.எச்.டி. செய்யும் ஆய்வு மாணவர்.
தைவான் தேசியப் பல்கலைக்கழகத்தில் சுமார் 10,000 பேர் படிக்கிறார்கள். இவர்களுள் 800 பேர் முழு நேர மாணவர்கள். சுமார் 2000 பேர் மாலை நேர வகுப்புகளுக்கு வருகிறவர்கள். இவர்கள் பெரும்பாலும் பெரிய பதவிகளில் இருப்பவர்கள். நல்ல சம்பாத்தியக்காரர்கள். தங்களது பதவி உயர்விற்காகவும், நல்ல வேலைகளுக்கு மாறும் நோக்கத்திலும் உயர்படிப்புப் படிக்கிறவர்கள்.
மாணவர்கள் - மாணவிகள் என்று பிரித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட சமமான அளவினர்தாம்.
ஏழைக் குடும்பங்களில் பிறந்த ஆண்கள் - பெண்கள் கூட நீங்கள் தருவதைத் தாருங்கள் மீதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிற மனநிலையில் இருக்கிறார்கள்.
பெற்றோர் தங்கள் வசதிக்கு ஏற்பப் பணம் கொடுக்க, மீதத் தொகையைப் பகுதி நேர வேலைக்குச் செல்வதன் மூலம் சமாளிக்கிறார்கள்.
குடும்ப வறுமையைக் காரணமாகச் சொல்லிக் கொண்டு படிக்காமல் இருப்பதோ, படிப்பைவிட்டு விலகுவதோ தைவானிய மாணவர்களிடம் இல்லை.
என்னை என் அப்பா படிக்க வைக்கவில்லை என்கிற போர்வையில் ஒளிந்துகொண்டு, சுட்டுவிரல் காட்ட ஆள் கிடைத்துவிட்டது என்று படிப்பிலிருந்து விலகி நிற்கும் குணம் தைவானிய மாணவர்களிடம் இல்லை. இதுவே இந்த மாணவர்களிடம் எனக்கு மிகப் பிடித்த அணுகுமுறையாகப் பட்டது.
தைவானில் ஒருவன் வறுமையைக் தேடிக் கொண்டால் அதற்கு முழுக்க முழுக்க அவனே காரணம் என்கிற முடிவிற்குச் சமூகம் வந்துவிடும். பாவம் அவன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன்; அவனை அவனது பெற்றோர் படிக்க வைக்கவில்லை. இதற்கு அவன் என்ன செய்வான் என்று பேச மாட்டார்கள்.
அவனவனது கல்விக்கு அவனவனே பொறுப்பு என்கிற சமூகப் பார்வையைத்தான் தைவானியச் சமூகம் கொண்டுள்ளது.
இந்தச் சமூகப் பார்வையே பல மாணவர்களைச் சுயமுயற்சியில் ஈடுபட வைத்து நல்ல படிப்பாளிகளாக ஆக்க வைத்துள்ளது. மேல் நாடுகளைப் போலவே பெரும்பாலான மாணவர்கள் பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்கின்றனர்.
கல்வியும் வேலையும் இங்கே இரு கண்கள். வீட்டினர் உதவினால் அது கூடுதல் வருமானமே தவிர, இதை நம்பி இருப்பது இல்லை.
தைவான் ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதாரச் சக்திகளுள் மூன்றாவதாக விளங்கக் காரணம் கல்விதான் என்கிறார்கள்.
இங்கு நிலவும் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 96.1 சதவிகிதம். இதனால் இந்த நாட்டில் துடிப்புமிக்க பொருளாதாரம் நிலவுகிறது.
கல்வியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இந்த நாட்டை அந்நியச் செலாவணியை அதிகம் கொண்ட நாடுகளுள் மூன்றாவது இடத்தில் வைத்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அண்மையில் கிடைத்த தகவலின்படி தைவானின் அந்நியச் செலவாணிக் கையிருப்பு 175 பில்லியன் டாலர்களாம்.
உலகமெல்லாம் சீனா தன் பொருள்களைக் கொண்டு போய்க் கொட்டுகிறது. ஆனால் தைவான் என்ன செய்கிறது தெரியுமா? தன் உற்பத்தியில் 75 சதவிகிதத்தை சீனாவுக்குள் தள்ளிவிட்டு விடுகிறது.
தைவானியப் பெண்களின் கல்வி அவர்களை வெகுவாக உயர்த்தியுள்ளது. 45 சதவிகிதப் பெண்கள் வெளிநிறுவனங்களுக்குச் சென்று வேலை பார்க்கின்றனர். வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் பெண்களைப் பற்றிய விபரம் கிடைக்கவில்லையே தவிர, இதுவும் ஏராளம் என்கிறார்கள்.
1976 வரை தைவானை ஆண்டவர்கள் பெண்களைக் கீழ்மட்ட நிலையிலேயே வைத்திருந்தார்களாம்.
ஒரு கட்டத்தில் தைவானியப் பெண்கள் பெருமளவில் திரண்டு பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறார்கள்.
சம உரிமை பாதுகாப்பு, தங்கள் திருமணம் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் உரிமை ஆகியவற்றிற்காகப் போரிட்டு இவற்றில் வெற்றியும் பெற்றார்கள். வெகு சமீபம் வரை தைவானில் விபசாரம் பெருமளவில் இருந்திருக்கிறது.
போராட்டம் நடத்திய பெண்கள் இவர்களுக்காகவும் சேர்ந்து போராடி, கல்வி கற்க வழிவகை செய்து வீணாகப் போக இருந்த ஒரு பெரிய சமூகத்தை மீட்டு எடுத்திருக்கிறார்கள்.
இத் தொழிலை விட்டு இவர்களது தலைமுறை வெளிவர வேண்டும் என்கிற நீண்டகாலத் திட்டம் வகுக்கப்பட்டு, விலைப் பெண்களுக்குக்கூட தொழிலாளர் நலச் சட்டத்தின்படி மருத்துவ வசதிகளும், பிற உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
விபசாரப் பிரச்னையை அழகிய முறையில் வென்றெடுத்த நாடு என தைவான் தாராளமாக மார்தட்டிக் கொள்ளலாம்.
பள்ளிப்படிப்பின் தரம் இங்கே மிக உயர்வான ஒன்றாம். அனைவருக்கும் வீட்டுப் பாடம், கடுமையான பயிற்சிகள் என்று படுத்தி எடுத்து விடுவார்களாம் பள்ளிகளில்.
இதற்குத் தைவானியக் கல்வித் துறை சொல்லும் காரணம் மிக வித்தியாசமானது.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































