Kerala CM not ready to ask apologies
சந்தீப் வீட்டுப் பக்கம் நாய்கூட வராது:
மன்னிப்பு கேட்க அச்சுதானந்தன் மறுப்பு!

திருவனந்தபுரம்: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் வீர மரணமடைந்த கமாண்டர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் குடும்பத்தாரைத் திட்டியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்தார்.
ஹைதராபாத் செல்லும் வழியில் செவ்வாய்க்கிழனை பெங்களூரு வந்த அவரிடம், சர்ச்சசைக்குரிய அவருடையப் பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், ”சந்தீப் குடும்பத்தினருக்கு எதிரான எனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கமாட்டேன்” என்று கூறியபடியே சென்றுவிட்டார்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலைத் தடுக்கச் சென்ற கமாண்டர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் வீர மரணம் அடைந்தார்.
அச்சுதானந்தன் தனது அமைச்சர் சகாக்களோடு 3 நாட்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள சந்தீப்பின் இல்லத்துக்குச் சென்றார். அவர்களை சந்திக்க மறுத்த சந்தீப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன், ”உடனே வீட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் அமைச்சரைப் பார்த்து சத்தம் போட்டார். இதையடுத்து அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறினார் அச்சுதானந்தன்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அச்சுதானந்தன், ”சந்தீப் வீடு உள்ளதால்தான் இங்கு வரவேண்டியுள்ளது. இல்லையெனில் ஒரு நாய்கூட இந்தப் பக்கம் வராது” என்று கடுமையாகக் கூறினார்.
அச்சுதானந்தனின் கடுமையான வார்த்தைகள் சந்தீப் குடும்பத்தாரையும், அங்கு கூடியிருந்த செய்தியாளர்களையும் மனம் வருத்தமடைய செய்தது. தற்போது இந்த விஷயம் நாடு முழுவதும் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அவருடையப் பேச்சுக்கு கேரளா மற்றும் இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள காங்கிரசார் இந்த சர்ச்சைக்குரிய பேச்சை விடுவதாக இல்லை. பாரதிய ஜனதாவும் இதில் கைகோர்த்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தின் முன் இளைஞர் காங்கிரசார் திரண்டு பேரணி நடத்தினர். அச்சுதானந்தன் சந்தீப் குடும்பம் குறித்து கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் பேரணியின்போது அச்சுதானந்தனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
”சந்தீப் குடும்பத்தார் குறித்து அச்சுதானந்தன் கூறியகருத்து கேரள மக்களை கோபமூட்டியுள்ளது. சந்தீப் குடும்பத்தாரிடம் அச்சுதானந்தன் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறினார்.
Related Posts Title
Tags: Commander Sandeep Unnikrishnan, Kerala CM, Mumbai attack, VS Achuthanandan, அச்சுதானந்தன், கேரள முதல்வர், மும்பை தாக்குதல்