Happy New Year 2009

Posted on Wednesday 31 December 2008

New Year 2009 image

தமிழ்வாணன் வாசகர்களுக்கு

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

2008 - எங்கள் அனுபவம்…

             போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸைவிட வேகமாக வருவது பீட்ஸா

2009 - எங்கள் இலட்சியம்…

             அந்தப் பீட்ஸாவைவிட வேகமாக உங்களுக்குச் செய்திகளைத் தருவது

இலட்சியம் அடைவது நிச்சயம்!

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி இன்று விடுமுறை என்பதால் செய்திகளுக்கும் இன்று விடுமுறை.

வெள்ளிக்கிழமை சந்திப்போம்.

admin @ 11:30 am
Filed under: Uncategorized
Kumari Pennin Ullathile Movie Gallery

Posted on Wednesday 31 December 2008

kumari pennin ullathile movie

Artist: ,
Direction: S
Music:

admin @ 6:18 am
Filed under: movie
Rettaisuzhi Movie Gallery

Posted on Wednesday 31 December 2008

rettaisuzhi.jpg

rettaisuzhi1.jpg

rettaisuzhi2.jpg

rettaisuzhi3.jpg

Artist: , , , , ,
Direction:
Production:
Banner:
Music:

admin @ 6:15 am
Filed under: movie
Panchamirtham trailer

Posted on Wednesday 31 December 2008

panchamirtham.jpg

Artist: , , , and
Direction:
Music:

admin @ 5:04 am
Filed under: trailer
Not yet decided, Pranab says about Lanka visit

Posted on Wednesday 31 December 2008

இல‌ங்கை பயண‌ம்: இ‌ன்னு‌ம் முடிவெடு‌க்கவி‌ல்லையாம் ‌பிரணா‌ப் 
 
pranab_mukherjee.jpg

புதுதில்லி: இல‌ங்கை‌க்கு‌ப் பயண‌ம் மே‌ற்கொ‌ள்வது கு‌‌றி‌த்து இ‌ன்னு‌ம் முடிவு செ‌ய்ய‌வி‌ல்லை எ‌ன்று வெளியுறவுத் துறை அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

‌இல‌ங்கை பயண‌ம் எ‌ப்போது எ‌ன்பது கு‌றி‌த்து‌ச் செ‌‌ய்‌தியா‌ள‌ர்க‌ள் எழு‌ப்‌பிய கே‌ள்‌வி‌க்கு‌ப் ப‌தில‌ளி‌த்த ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி,

”இல‌ங்கை‌ இன‌ப் ‌பிர‌ச்னை‌க்கு அ‌திகார‌ப் ப‌கி‌ர்வு‌த் ‌தி‌ட்ட‌த்தை நடைமுறை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ‌சில மாகாண‌ங்க‌ளி‌ல் தே‌ர்த‌ல் நட‌ப்பதா‌ல் அது நடைமுறை‌‌க்கு வரவி‌ல்லை. ‌விரை‌வி‌ல் அது நடைமுறை‌ப்படு‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்னை‌க்கு இராணுவ ‌ரீ‌தியாக‌‌த் ‌தீ‌ர்வு காண இயலாது. 1987ஆ‌ம் ஆ‌ண்டு உருவா‌க்க‌ப்ப‌ட்ட இ‌ந்‌தியா- இல‌ங்கை ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன் படிதா‌ன் ‌தீ‌ர்வு காண முடியு‌ம். இல‌ங்கை‌க்கான பயண‌ம் கு‌றி‌த்து இதுவரை இறு‌தி முடிவெடு‌க்க‌வி‌ல்லை” எ‌ன்றா‌ர்.
 

admin @ 2:27 am
Filed under: srilanka news
Police arrested 52 ADMK partymen including R Samy MLA

Posted on Wednesday 31 December 2008

எம்.எல்.ஏ., சாமி  உள்பட 52 அ.தி.மு.க.வினர்மீது கொலை முயற்சி வழக்கு

மதுரை: கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட மேலூர் எம்.எல்.ஏ. சாமி உள்பட 52 அ.தி.மு.க.வினர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஜனவரி 13வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திருமங்கலம் இடைத் தேர்தலில் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மூன்று கார்களில் திரும்பிக் கொண்டிருந்த  மாநில பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும அ.தி.மு.க. வினர் அருப்புகோட்டை சாலையில் எலியார் பத்தி அருகே வந்தபோது கார்களின் மீது சிலர் கல்வீசி தாக்கிவிட்டு தப்பி ஓடினர். 

அப்போது  ரோந்துவந்த ஆய்வாளர் சத்யப்ரபா மற்றும் காவல்துறையினர் விசாரித்தனர். அவனியாபுரம் ஆய்வாளர் ராமகிருஷ்ணனும் அங்கு வந்தார்.

காவல்துறையினரை சூழ்ந்துகொண்ட அ.தி.மு.க.வினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலூர் எம்.எல்.ஏ. சாமி, ‘நாங்கள் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறீ்ர்கள். எம்.எல்.ஏ. வாக இருக்கும் எங்களுக்கு பாதுகாப்பில்லையா?’ என்று வாதிட்டார்.

அப்போது உடன் வந்தவர்களில் சிலர் காவல்துறையினரின் வாகனங்கள்மீது கல் வீசித் தாக்கினர்.

இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. சாமி உள்ளிட்ட 52 அ.தி.மு.க.வினரை கைது செய்து மதுரை ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து வந்தனர்.

ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலர் செங்கோட்டையன், தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன், தேனி மாவட்ட செயலர் தங்க தமிழ்ச்செல்வன், சாமி எம்.எல்.ஏ., உள்பட பலர் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறி தாக்குதலில் இறங்கியதாக கூடக்கோவில் காவல்நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

தேர்தல் முடியும்வரை 52 அ.தி.மு.க.வினரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

admin @ 2:07 am
Filed under: news
Tirumangalam: Jaya condemns TN police

Posted on Wednesday 31 December 2008

காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை உறுதி!: ஜெ., எச்சரிக்கை

சென்னை: தி.மு.க.வினரின் மக்கள் விரோதச் செயல்களுக்குத் துணையாக இருந்துவரும் காவல்துறை அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘மிசா பாண்டியன், அட்டாக் பாண்டி, எஸ்ஸார் கோபி உள்ளிட்டோர் தலைமையில் ரெளடி கும்பல்கள் திருமங்கலம் தொகுதியில் தங்கியிருந்து, அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னணி நிர்வாகிகளையும், உடன்பிறப்புகளையும், தோழமைக் கட்சிகளின் முன்னணி தலைவர்களையும், தொண்டர்களையும் தாக்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி வ.ஜெயராமன் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன், தேனி மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன், ஆர்.சாமி உள்பட 52 பேர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளதாகவும்;

ஆர்.சாமி மற்றும் அவருடன் இருந்த கழக உடன்பிறப்புகளை மதுரை மாவட்ட எஸ்.பி., எம்.மனோகர் தாக்கியதாகவும், இதன் காரணமாக அவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.

தி.மு.க.வினரின் மக்கள் விரோதச் செயல்களுக்குத் துணையாக இருந்து வரும் காவல்துறை அதிகாரிகள் அதற்கான தண்டனையை அனுபவிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை அவர்களுக்கு எச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

காவல்துறையின் கட்டுப்பாட்டில் திருமங்கலம் தொகுதி தற்போது இல்லை. வன்முறையாளர்களின் கட்டுப்பாட்டில் தான் திருமங்கலம் தொகுதி இருக்கிறது. வன்முறையாளர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் தலையாட்டி பொம்மைகளாக காவல் துறையினர் செயல்படுகின்றனர். பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலை தற்போது திருமங்கலம் தொகுதியில் நிலவுகிறது.

காஷ்மீர் மாநிலத்தை விட மிக மோசமான சூழ்நிலை தற்போது திருமங்கலம் தொகுதியில் நிலவுகிறது.

ஜனநாயகரீதியில் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டிய கடமை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் தேர்தல் ஆணையத்திற்கு பிரத்யேக அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மதுரை மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் எம்.மனோகர், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஷாஜகான் ஆகியோரை அவரவர் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்க இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமங்கலம் தொகுதியை துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் நேரடிக் கட்டுப்பாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

admin @ 1:36 am
Filed under: news
Karthi injured badly in Paiyaa shooting?

Posted on Tuesday 30 December 2008

‘பையா’ படப்பிடிப்பில் பலத்த காயம்?: நடிகர் கார்த்தி மறுப்பு

karthi-in-paiyaa-movie.jpg

‘பையா’ படப்பிடிப்பின்போது நடிகர் கார்த்தி்க்கு பலத்த காயம் ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வதந்தி பரவியது.

லிங்குசாமியின் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் பையா திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது. சண்டைக் காட்சி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டபோது அதில் நடித்த கதாநாயகன் கார்த்திக்கு பலத்த அடிபட்டதாகவும், அவர் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் பரவின.

தன்னைப் பற்றிய இந்தச் செய்தியை உடனடியாக மறுத்திருக்கிறார் நடிகர் கார்த்தி. குறிப்பிட்ட சண்டைக்காட்சியின்போது தனக்கு சிறிய அளவிலான காயம்தான் ஏற்பட்டது என்றும், தான் நன்றாக இருப்பதாகவும், படப்பிடிப்பும் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் கார்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குநர் லிங்குசாமியும் கார்த்தி காயம் பற்றிய செய்தியை மறுத்ததோடு, தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

கார்த்தி ஜோடியாக தமன்னா நடிக்கும பையா திரைப்படத்தில் இந்தி நடிகர் மிலிந்த் சோமன் வில்லனாக நடிக்கிறார்.

admin @ 11:49 pm
Filed under: kollywood
Tamil cinema - 2008

Posted on Tuesday 30 December 2008

தமிழ் சினிமா -2008  பகுதி 2

மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படங்கள்:

cinema-2008.jpg

தசாவதாரம்
சுப்ரமணியபுரம்
யாரடி நீ மோகினி
காதலில் விழுந்தேன்

மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியைக் கண்ட திரைப்படங்கள்:

ரஜினியின் குசேலன்
விக்ரமின் பீமா
விஷாலின் சத்யம்
வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன்
பரத்தின் சேவல்

காலர் ட்யூனாக அதிகம் பதிவு செய்யப்பட்ட பாடல்கள்:

கண்கள் இரண்டால் (சுப்ரமணியபுரம்)
முகுந்தா முகுந்தா (தசாவதாரம்)
தோழியா என் காதலியா (காதலில் விழுந்தேன்)
அன்பே அன்பே (தாம்தூம்)
டாக்ஸி டாக்ஸி (சக்கரகட்டி)

மரணம்:

பிரபல தமிழ் எழுத்தாளரும், சினிமா கதை, வசனகர்த்தாவுமான சுஜாதா மறைந்தார் (பிப்ரவரி 27)

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற நடிகர் ரகுவரன் காலமானார் (மார்ச் 19)

இளைய நாயகன் குணால் தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் (பிப்ரவரி 7).

நாடகமேடையிலும் திரையுலகிலும் ஒருசேர சாதித்த பூர்ணம் விஸ்வநாதன் மறைந்தார் (அக். 1)

தமிழ்த் திரையுலகில் புதுப்புது சாதனைகள் புரிந்து வெற்றிகரமான இயக்குநராகத் திகழ்ந்த சி.வி. ஸ்ரீதர் காலமானார் (அக்.20)

தமிழ் சினிமா உலகம் மறக்க முடியாத ஒரேஒரு வில்லன், சொந்த வாழ்க்கையில் நாயகன் எம்.என். நம்பியார் மரணமடைந்தார் (நவ. 19)

இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா, ரஷ்யாவில் நடந்த தாம்தூம் படப்பிடிப்பின்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இசையமைப்பாளரும் வயலின் மேதையுமான குன்னக்குடி வைத்தியநாதன் மரணம்.

மேலும் தெலுங்கு நடிகர் சோபன்பாபு, பழம்பெரும் நடிகை டி.பி. முத்துலட்சுமி, குணச்சித்திர நடிகை தேனி குஞ்சரம்மாள், ஒளிப்பதிவாளர் சி.ஜே.ரவி, ஏ.வி.எம். செட்டியாரின் மனைவி ராஜேஸ்வரி அம்மாள், தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள், நடிக ர்பிரபுதேவாவின் மகன் விஷால் ஆகியோர் மரணமடைந்தனர்

லடாய்

அமெரிக்கா போலி விசா வழக்கில் நடிகை ஃப்ளோரா கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானார்.

கஜினி படப் புகழ் இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் கொடுத்த புகார் தயவால் நள்ளிரவு (சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்த சென்றபோது) கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீடு சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது. தன்னுடைய வீட்டை தாக்கியது விஜயகாந்த ஏற்பாடு செய்த அவருடைய  ஆட்கள்தான் என்று புகார் கூறினார் வடிவேலு. இந்தக் காமெடி கொஞ்ச நாட்களுக்கு தமிழகத்தை சிரிக்க வைத்தது.

பிரிவு

இயக்குநர் கெளதம் வாசுதேவன், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் ஜோடி பிரிந்தது.

இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஜோடி பிரிந்தது.

நடிகை மீரா வாசுதேவன் தனது கணவர் விஷால் அகர்வாலிடம் இருந்து பிரிந்தார்.

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனது மனைவி சுஜாயாவைப் பிரிந்தார்.

நடிகை ஊர்வசி நடிகர் மனோஜ் கே. ஜெயன் ஜோடி பிரிந்தது.

திரையுலகப் போராட்டங்கள்

இலங்கைத் தமிழர்களுக்காக அக்டோபர் 19ஆம் தேதி, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் சார்பில் ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய பேரணியும்  பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்த்திரையுலம் திரண்டு உண்ணாவிரதம் இருந்தது. நவம்பர் 1ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

நவம்பர் 5ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தனர்.

பொதுக் கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்தனர்.

பெரியார் தி.க. சார்பில் நடைபெற்ற கூட்டமொன்றில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக இயக்குநர் சீமான் மீண்டும் சிறையில் தள்ளப்பட்டார்.அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

admin @ 10:56 pm
Filed under: kollywood
How Jan.1 celebrate as New year!

Posted on Tuesday 30 December 2008

புத்தாண்டின் பிறப்பு!

happy-new-year.bmp

மிழ்ப் புத்தாண்டு போலவே ஆங்கிலப் புத்தாண்டுக்கும் ஆரம்பத்தில் குழப்பம் இருந்தது. சித்திரை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்த தமிழர்களுக்கு, தை 1ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுவதில் உள்ள குழப்பமான மனநிலை அன்றைய மேற்கத்தைய மக்களுக்கும் இருந்தது.

முட்டாள்கள் தினம் என்று நாம் ஏகபோகமாகக் கொண்டாடிவரும் ஏப்ரல் 1ஆம் தேதிதான் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் துவக்கம்.

16ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை கொண்டாட்டமாக இருக்கும். இதில் எட்டாம் நாளான ஏப்ரல் 1ஆம் தேதி வருடப் பிறப்பாகக் கருதப்பட்டு, புத்தாண்டுக் கொண்டாடப்பட்டது. அதுவரை உலகின் நடைமுறையில் இருந்ததை ‘ஜூலியன் ஆண்டு’ என்கிறார்கள்.

அப்போது போப் ஆண்டவராக இருந்த கிரோகோரி ஏப்ரல் 1-யை மாற்றி ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவித்தார். அதுதான் அவரது பெயரையும் சேர்த்து அழைக்கப்படும் ‘கிரோகிரியன் காலண்டர்’ ஆனது.

அதுவரை ஏப்ரல் 1-யை புத்தாண்டாகக் கொண்டாடி வந்த மக்கள், ஜனவரி 1-யை புத்தாண்டாகக் கொண்டாட தடுமாறினர். நிறைய குழப்பங்கள் நேர்ந்தன. பல்வேறு தடுமாற்றங்களுக்குப் பின்னர். புத்தாண்டை ஒவ்வொரு நாடாக அங்கீகரித்தன.

ஸ்காட்லாந்து 1660-லும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் 1700-லும், இங்கிலாந்து 1752-லும், பிரான்ஸ் 1852-லும் ஜனவரி 1-யை புத்தாண்டு தினமாக அங்கீகரித்தன.

ஆனால் மக்கள் லேசுபட்டவர்களா என்ன? அரசாங்கம் சொல்லியும் கேட்காமல், ஏப்ரல் 1-யையே புத்தாண்டாகக் கொண்டாடி வந்தனர். பார்த்தன அரசாங்கங்கள். மக்களை திசை திருப்ப (ஜனவரி 1 பக்கம்), ஏப்ரல் 1ஆம் தேதியை முட்டாள்கள் தினமாக அறிவித்தன எனக் கூறப்படுகிறது.

அதுமுதல் மக்கள் ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாகவும், ஏப்ரல் 1ஆம் தேதியை முட்டாள்கள் தினமாகவும் கொண்டாடி வருகின்றனர்.

இதுதாங்க புத்தாண்டு பிறந்த கதை. இது ஏதோ ஏப்ரல் 1ஆம் தேதி அன்று வரவேண்டிய செய்தி என்று நினைத்து விடாதீர்கள்.
 

admin @ 10:25 pm
Filed under: news