Tamilvanan » 2008 » November

Archive for November, 2008

Punch Balu

Friday, November 28th, 2008

punch-balu‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

தமிழகத்தில் பா.ம.க. தான் மூன்றாவது பெரிய கட்சி. பா.ம.க. தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
-மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சு
ஐயா அன்புமணி அவர்களே,  தி.மு.க. வுடன் பனிப்போரை முடித்துக்கொண்ட தெம்புல பேசாதீங்க. நீங்க இல்லாமல்தான தி.மு.க. ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். உங்களுக்கு மட்டும் எப்படி தெரியாம போச்சு? அது சரி, நீங்க தான் மூன்றாவது  பெரிய கட்சின்னா, புதிய அணி காங்கிரஸ் தலைமையில் வரணும்னு ஏன் புலம்பிக்கிட்டு இருந்தீங்க?

தேர்தலில் நான் ஓட்டளித்து 10 ஆண்டுகள் மேலாகிவிட்டன.
-விமானப் படை தளபதி பாலி மேஜர் பேட்டி
இதை வெட்கப்பட்டுக்கிட்டு சொல்றீங்களா, வெறுத்துப் போய் சொல்றீங்களா? எப்படியோ…கடந்த 10 வருடமாக சம்பளம் மற்ற சலுகைகளை மட்டும் வாங்கிகிட்டிருக்கீங்கன்னு சொல்லுங்க. மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி இருந்தா எப்படி?

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுவிட்டன. இனி வாக்கு சேகரிக்க வரும்போது மக்கள் எதையும் கேட்க முடியாது.
- உயர்கல்வி அமைச்சர் பொன்முடி
சொன்ன வாக்குகளைக் காப்பாற்றினீர்களோ இல்லையோ காப்பாற்றுவது மட்டும்தான் ஆட்சியைப் பிடித்தவர்களின் கடமை என்று நின்று  விடப் போகிறீர்களா அமைச்சரே? நீங்கள் சொல்லாமல் வந்த இக்கட்டுகளான மின்வெட்டு, கல்லூரி மற்றும் சாதி கலாட்டாக்களை,  சட்டம் ஒழுங்கு சீர்குலைவை மக்கள் தட்டிகேட்க மாட்டார்கள் என்றும் அதை வாக்களிப்பின்போது மறந்து விடுவார்கள் என்றும் நீங்கள் நம்பினால் அது அரசியல்வாதிக்கு அழகல்லவே!

வைகோ, இங்கிலாந்து செல்ல இரண்டு வாரங்களுக்கு முன்பே விசா வாங்கிவிட்டோம். விசா மறுக்கப்பட்டது என்ற  தவறான செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். இதற்குக் காரணம் உளவுத் துறைதான். இந்த குறைந்தபட்ச தகவலைக்கூட அவர்களால் தெரிந்துகொள்ள இயலவில்லை. இவர்கள் எப்படிதான் நாட்டை பாதுகாக்கப் போகிறார்களோ? ராஜபக்சேவையும் இங்குள்ள இலங்கைத் தூதர் அம்சாவையும் திருப்பதிப்படுத்த இப்படிப்பட்ட பொய்ச் செய்திகைளை வேண்டுமென்றே பரப்புகின்றனர்.
-மதிமு க மல்லை சத்யா
நீங்க சொல்றத பார்க்கறச்ச, ‘விசா பெற சிலர் சதி செய்தார்கள். சில நல்ல உள்ளங்கள் செய்த உதவியால் விசா கிடைத்தது. அதனால்தான் அதை சஸ்பென்சாக வைத்திருந்து லண்டன் பறக்கிறேன்’ என்று  வைகோ சொன்னது  பொய்யா? ஏற்கனவே  விசா தயார் என்றால் அதை முன்கூட்டியே சொல்லி பரபரப்பை கிளறிவிடாமல் இருந்திருக்கலாமே. அது சரி, உளவுத் துறையினர் சிலரை திருப்திப்படுத்த பொய்ச் செய்திகள் பரப்புகிறார்கள் என்றால், வைகோ யாரை திருப்திப்படுத்த லண்டன் சென்றார்?

தமிழகத்தில் ரஜினியின் பணிகள் முடிந்துவிட்டன. இனி, அவர் மகாராஷ்டிரா வந்து மராத்தியர்களுக்காகப் போராட வேண்டும்.
- சிவசேனா பால்தாக்கரே.
தாராளமாகக் கூட்டிப் போங்க. குழப்பத்தில் இருந்து தமிழ்நாடு தப்பிக்கும். ஆனால் மகாராஷ்டிராவில் இருக்கற குழப்பம் போதாதுன்னு  இன்னும் அதிகமாகவே மக்கள் தலையைப் பிய்ச்சிப்பாங்க, பரவாயில்லையா?

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கோஷ்டி எதுவும் கிடையாது.
- தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு
அதை ஏன் இப்படி தனியா நின்னுக்கிட்டுச் சொல்றீங்க?

Punch Balu’s Old punches

2008/11/21 Punch Balu

2008/11/14 Punch Balu

2008/11/07 Punch Balu

2008/10/31 Punch Balu

2008/10/24 Punch Balu

2008/10/17 Punch Balu

2008/10/10 Punch Balu

2008/10/03 Punch Balu

2008/09/26 Punch Balu

2008/09/19 Punch Balu

Color dresses

Friday, November 28th, 2008

color-dresses.jpgவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி

நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

நமது வயது, தோற்றம் முதலியவற்றிற்கு ஏற்ப உடை அணிகிறோம். சிலர் ராசி, எண் கணிதம், முதலியவற்றிற்கு ஏற்ப உடையணிகிறார்கள்.

ஆனால், புதிதாக எழுந்துள்ள ஒரு வாதமே நோய்களுக்கு ஏற்ப உடையணிந்தால், ஆரோக்கியம் நீடிக்கும் என்பதுதான். நோய்கள் குணமாகும். பிரச்னைகள் தீர்ந்து எழுச்சி பெற்று உழைத்து வருமானத்தையும் அதிகரிக்க முடியும். இதனால்தான் வண்ண சிகிச்சை முறையும், கிரிஸ்டல் சிகிச்சை முறையும் பலரது நோய்களைக் குணப்படுத்தி வருகின்றன.

நவரத்தினக் கற்கள் உள்ள மோதிரங்கள் அணிவது, இந்த நிறங்கள் உடலில் செல்ல எளிதாக இருக்கிறது என்பதால்தான்.

இதேபோல சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், செம்மஞ்சள், பச்சை, டர்க்யூஸ் () நீலம், கருநீலம், வைலட் (செந்நீலம்), பர்ப்பிள் (கருஞ்சிவப்பு), ஸ்கார்லெட் (இளஞ்சிவப்பு) இந்த நிறங்களில் உங்களுக்குரிய நிறத்தில் உடைகளைத் தேர்வு செய்து அணியலாம்.

வயலட் நிறம் உள்ள அறையில் ஒருவர் இருந்தால், அவரது இதயம் சீராகத் துடிக்கும். இதய நோயாளிகளின் இதயத் துடிப்பு வேகவேகமாக இருந்தால் இதைச் சரி செய்யும். இந்த நிறச்சட்டை அணிந்தால், உடலில் இந்த ஒலி அலைகள் படுவதால், இதயம் சீராக இயங்கும். ஒவ்வோர் வண்ணத்திற்கும் ஒலி அதிர்வுகள் உள்ளன. இவை உடலில் மாறுபாட்டை உண்டாக்குகின்றன.

ஆண்களுக்கு இளம்பெண்களைப் பார்த்ததும் நாடித்துடிப்பு அதிகம் துடிக்கிறது என்கிறார்கள். உண்மையில் சிவப்பு நிறத்தைப் பார்த்ததும்தான் இதயம் வேகமாகத் துடிக்கிறதாம். டாக்டர் ஜாய்ஸ் நெல்சன் என்ற ஸான்டைகோவின் பெண் டாக்டர் வண்ண மருத்துவம் மற்றும் கிரிஸ்டல் மருத்துவம் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார்.

சிவப்பு நிற உடைகள் நரம்புகளுக்கும், சிந்திக்கும் சக்திக்கும் வலுவூட்டும். இரத்த ஓட்டத்தைச் சரியாகக் கவனித்துக்கொள்ளும், தொற்று நோய் உள்ளவர்கள், எக்ஸ்ரே அடிக்கடி எடுப்பவர்கள், உடல் எரிச்சலால் கொப்புளங்கள் உள்ளவர்கள் இந்த உடையை அணியலாம். சுறுசுறுப்பாக விரைந்து வேலை செய்யச் சிவப்பு நிற உடை நல்லது.

ஆரஞ்சு நிற உடைகள் நுரையீரல்களையும், மூச்சுக் குழாய்களையும் வலுப்படுத்தும். கழுத்தில் உள்ள தைராய்டு சுரப்பி, வயிறு முதலியன சீராகச் செயல்படவும், சுளுக்கு, தசைபிடிப்பு போன்றவை அகலவும் எலும்புகள் பலமுடன் இருக்கவும் உதவும்.

பச்சை நிறம் நோய் நுண்மக்கொல்லி மருந்து போல் செயல்படுகிறது. இந்த நிற உடையணிந்தால் உடற்பயிற்சி செய்தால் கிடைக்கக்கூடிய நன்மைகள் கிடைக்கும். பெருமூளையை உடல் நலனுக்கு ஏற்பச் சமன் செய்து வைத்திருக்கும். பிட்யூட்டரி சுரப்பி சிறப்பாக இயங்க இந்தப் பச்சை நிறம் உதவும். அறிவுத் தெளிவு உண்டாகும்.

காய்ச்சலைக் குறைப்பதில் நீல நிற உடை வேகமாகச் செயல்படும். எரிச்சல், கோபம், உடலில் சொறி, சிரங்கு, நமைச்சல் உள்ளவர்களுக்கும் இந்த நிறம் உதவும். ஞாபக சக்தியை அதகரிக்கும். ஒற்றுமையை அதிகரிக்கும். மருந்தைப் போல மனதிற்கும் உடலுக்கும் அமைதியும் நலமும் தரும் நிறம் இது.

தசைவலி, காய்ச்சல் முதலியவை குறையவும், முதுகுத் தண்டும், வெள்ளை இரத்த அணுக்கள் செயல் துடிப்புடன் இயங்கவும் வயலட் (செந்நீலம்) நிற உடை உதவும். கடும் காய்ச்சல், முதுகு வலி முதலியவை குணமாக இந்த நிற உடை நல்லது.

இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தவும், இதயம் சீராக இயங்கவும், சிறு நீரகம் மற்றும் நுரையீரல் கோளாறுகள் விரைந்து குணமாகவும் கருஞ்சிவப்பு (Purple) நிற உடைகள் உதவும். தியானம் செய்பவர்கள் இந்த நிறத்தை மனதில் கற்பனை செய்து கொண்டால், வேறு எந்த ஒரு எண்ணமும் குறுக்கிடாது.

கோபத்தை மிகச் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தம் உயராமல் இருக்கவும், அடரீனல் சுரப்பி, சிறு நீரகங்கள், உயிரணுக்களின் உற்பத்தி முதலியவை சிறப்பாக இயங்கவும் இளஞ்சிவப்பு நிறத்தைச் சேர்ந்த உடைகள் நல்லது. குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் குழந்தை பிறக்கும் வரை, மற்ற சிகிச்சை முறைகளுடன் மேற்கண்ட இளஞ்சிவப்பு ரோஸ் நிற உடைகள் சீருடைபோல் தினமும் அணிய நல்ல பலனைத் தரும்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

Banana fry

Friday, November 28th, 2008

banana.jpgவாழைக்காய் கூட்டு - அலமேலு ரங்கநாதன்

தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
தட்டைப்பயிறு - 50 கிராம்
தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மல்லிப் பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
துவரம் பருப்பு - வேக வைத்து மசித்தது (சிறிது)

செய்முறை:

வாழைக்காயைச் சின்னத் துண்டுகளாக நறுக்கித் தண்ணீரில் போடவும். தட்டைப்பயிறை வாசனை வரும்வரை வறுத்து வேக வைத்து வடிகட்டவும். புளியை 1-1/2 கப் தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து, உப்பு, மஞ்சள் தூள், வாழைக்காய் மூன்றையும் சேர்த்து வேக வைக்கவும். மல்லிப் பொடி, மிளகாயப் பொடி, வெல்லம் கலந்து, கொதி வந்ததும் வேக வைத்த தட்டைப்பயிறு, வேக வைத்த துவரம் பருப்பு போட்டுக் கெட்டியாகக் கொதிக்க வைக்கவும். எண்ணெயில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலை போட்டுப் பரிமாறவும். கத்தரிக்காய், வாழைக்காய் இரண்டும் ரொம்பவும் கொஞ்சமாக இருந்தால் இரண்டையும் சேர்த்துக் கூட்டு செய்யலாம். வெண்டைக்காய், கத்திரிக்காய், சேர்த்தும் கூட்டு செய்யலாம். இந்தக் கூட்டுகளுக்கு தட்டைப்பயிறு போட வேண்டாம். தாளிக்கும்போது கடலைப்பருப்பைச் சேர்த்தால் போதும்.

பின்குறிப்பு : கூட்டுப்பொடி செய்யும் முறை :
மிளகாய் வற்றல் 6, உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி, கடலைப் பருப்பு 1-1/2 தேக்கரண்டி, மல்லி விதை 4 தேக்கரண்டி எல்லாவற்றையும் 1/2 தேக்கரண்டி எண்ணெய்விட்டு வறுத்து, ஆற வைத்து மிக்சியில் நைசாகப் பொடி செய்யவும்.

Chettinadu Samayal

2008/11/21 பொன்னாங்கண்ணி கீரை கறி

 2008/11/14 பரங்கிக்காய்த் தூவல்

2008/11/07 பாகற்காய் கறி - முதல் வகை

2008/10/31 புடலங்காய் கறி

2008/10/24 முட்டைக்கோஸ் கறி

2008/10/17 கருணைக்கிழங்கு புட்டுக் கறி

2008/10/10 சேனைக்கிழங்கு கறி

2008/10/03 சேப்பங்கிழங்கு கறி

2008/09/26 பருப்பு உசிலி - முதல் வகை

2008/09/19 பூரி உருளைக்கிழங்கு

2008/09/12 உருளைக்கிழங்கு பொடி மாஸ்

2008/09/05 உருளைக்கிழங்கு கறி

2008/08/29 காரட் கறி

2008/08/22 கட்டு சாதக் கறி

2008/08/15 பொடி போட்ட வெண்டைக் கறி

2008/08/08 வெண்டைக்காய் கறி

2008/08/01 சுட்ட கத்தரிக்காய் துவரம்

2008/07/25 கத்தரிக்காய் காரக்கறி

2008/07/18 கத்தரிக்காய் வதக்கல்

2008/07/11 கத்தரிக்காய் கறி

2008/07/04 மசாலா வாழைக்காய்

2008/06/27 வாழைக்காய் பொடி

2008/06/20 வாழைக்காய் பொடிமாஸ்

2008/06/13 வாழைத்தண்டு கறி - இரண்டாவது வகை

2008/06/06 வாழைத்தண்டு (புளிக்கறி) முதல் வகை

2008/05/30 வாழைக்காய் வதக்கல்

2008/05/23 வாழைக்காய் கறி

2008/05/16 மிளகுப் பொடி

2008/05/09 கறிவேப்பிலைப் பொடி

2008/05/02 இட்லிப் பொடி

2008/04/25 மீல் மேக்கர் குழம்பு

2008/04/18 கத்தரிக்காய் - கடலைப் பருப்புக் குழம்பு

2008/04/11 கறிவேப்பிலைக் குழம்பு

2008/04/04 பருப்புக் கோளா உருண்டைக் குழம்பு

2008/03/28 கொண்டைக் கடலைக் குழம்பு

2008/04/21 பிரிஞ்சி சாதம்

Girls & boys in concert

Friday, November 28th, 2008

sun-yat-sen.jpgதைவான் சென்று வந்தேன்

மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

தைவான் தேசியப் பல்கலைக்கழகத்தினுள் நான் நுழைந்தபோது இருட்டிவிட்டது. இப்பல்கலைக்கழகம் தைப்பே நகரின் மையத்தில் அழகுற அமைந்துள்ளது.

நுழைந்ததுமே பல அசத்தல்கள். என்னவென்றால் கடுமையான காவல் கட்டுப்பாடுகள்தாம் என்னை முதலில் ஈர்த்தன. இந்த இடத்தில் இதைக் குறிப்பிடுகையில் ஐயோ! வெளியே இருந்து காவல்துறையை அனுமதிக்காத சென்னைச் சட்டக் கல்லூரி நிர்வாகம் இப்படி உள்ளேயாவது தனியார் காவல் பிரிவை அமர்த்தியிருந்தால் ஓரளவாவது சேதங்களைத் தவிர்த்திருக்கலாமே என்று தோன்றியது.

பல்கலைக்கழக நுழைவாயில் மிக அகலமாக மிகப் பெரியதாக இருந்தது. இவ்வளவு பெரிய நுழைவாயிலுக்கு எப்படி வாயிற்கதவு போடுவார்கள்? ஒருவேளை உள்ளுக்குள் ஓடிவிடும் தள்ளுக்கதவாக இருக்கமாக்கும் என்று பார்த்தால் கதவுகளே இல்லை. இது எனக்குச் சற்றே வியப்பைத் தந்தது.

பாதுகாவலர்கள் இடுப்பில் ஒரு லத்திக்கம்பையும் ஒரு துப்பாக்கியையும் சொருகியிருந்தார்கள். துப்பாக்கி வைத்துக்கொள்ளுமளவிற்கா இங்கு நிலமைகள் மோசம்? கேட்க விரும்பினேன்; கேட்கவில்லை.

பாக்கெட்டில் எதற்கும் இருக்கட்டும் என்று பாஸ்போர்ட்டின் நகலினை வைத்திருந்தேன்.

அடுத்த அசத்தல் தரையில் நட்சத்திரங்களைப் பதித்ததைப் போல பளீர் பளீர் என்று ஒளியின் வெட்டுகள். தரையைப் பார்த்தால் தரையில் உள்ள கற்களில் வெள்ளித் துகள்களைப் பதித்ததுபோல் இருந்தது. ஒரு நிமிடம் வெட்கப்படாமல் முட்டி போட்டு அமர்ந்து தரைப்பகுதியைத் தடவிப் பார்த்தேன். அட! அது செயற்கையான விஷயமல்ல அந்தக் கல்லே அப்படி!

எத்துணையோ ஆயிரம் சதுரஅடிப் பரப்பளவிற்கு இந்தத் தரைக்கற்களைப் பதித்து சுற்றிலும் சக்தி வாய்ந்த விளக்குகளை வேறு பதிந்திருப்பதால் தகதகவென்று வெள்ளித் துகள்களைத் தரையில் வீசிவிட்டதைப் போல் ஜொலிக்கிறது.

அப்படியே மனம் இலயித்து நின்றுவிட்டேன். நகரவோ அந்தத் தரையை மிதித்துக் கடக்கவோ மனமே வரவில்லை.

இந்த வட்டத்தரையைச் சுற்றிலும் பூங்காவின் பாணியில் சில இருக்கைகள்; புல்வெளிகள்; சில புதுவகைத் தாவரங்கள். ஒரு பல்கலைக்கழக நுழைவாயிலா அது? உலக நாடுகளெல்லாம் உறுப்பினர் நாடுகளாக உள்ள ஒரு நிறுவனத்தின் நுழைவாயில் போலல்லவா இருக்கிறது.

இருவர் அங்குள்ள ஒரு கல்லில் அமர்ந்து கழுத்தில் கை போட்டபடி நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்க, இருவரும் நண்பர்களாக்கும் என்று பார்த்தால், ஒருவர் ஆண்; ஒருவர் பெண். கிட்டத்தட்ட இருவரும் ஒரே வகையான ஆடைகளை அணிந்திருந்ததால் முதலில் ஆண்கள் என்றே நினைத்தேன்.

மாலை ஆறு ஆனால் உள்ளடங்கிவிடும் பெண்களின் விடுதிபோல் இல்லாமல் இருட்டி வெகுநேரம் ஆகியும் சல்லாபம் செய்யும் இந்த நெருக்கம் இங்கே ஏன்? இங்கே ஆண் பெண் பழகுவதில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை என்பதை கட்டியங் கூறிய ஜோடி இது என்பதை என்னால் பின்னரே உணர முடிந்தது.

முதலில் கழிவறைக்குச் சென்றேன். ‘பக்’கென்றது. ஒரு மாணவர் எந்தவிதமான துண்டுத் துணிகூட உடம்பில் இன்றிக் கண்ணெதிரே குளித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் திரும்பிக் கொள்வாராக்கும் என்று பார்த்தால் சூடு சுரணையே இல்லாமல் என்னை அலட்சியமாகப் பார்த்தபடி அவர்பாடு குளித்துக்கொண்டே இருந்தார்.

நாம்தான் முகத்தைக் திரும்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

கழிவறை சுத்தமாக இருந்ததே தவிர, மானம் காப்பாற்ற உதவுவதாக இல்லை. கதவுகள் அரைக்கதவுகளாக இருந்தன. இடுப்புப் பகுதி மட்டுமே மறைக்கப்படும். மற்றவை திறந்தவெளிதான்.

வெளியில் வந்தபிறகு மாணவ-மாணவிகளைக் கலந்தே காணப்பெற்றேன்.

உள்ளே திரிந்த சல மாணவிகளைப் பார்த்தபோது மாடல் அழகிகள் கெட்டார்கள் போங்கள்!

சுரேஷ்குமாரின் அறையைக் கேட்டு விசாரித்து நடந்தபோது இது எவ்வளவு பெரிய பல்கலையாக இருக்கிறது என வியந்தேன்.

சீனாவில் கண்டதைப் போலவே விளையாட்டுக் கூடங்களில் ஏகப்பட்ட கூட்டங்கள்.

உதை பந்திற்கும் கூடைப்பந்திற்கும் அதிகமான கிராக்கி இருந்தது. இரவு வெகுநேரம் வரை இந்த விளையாட்டுத் திடல்கள் பெருங்கூட்டத்துடன் இருக்குமாம்.

பார்க்கிறவர்களிடமெல்லாம் உதிரி உதிரியாகத் தகவல்களைத் திரட்டினேன். இந்த வளாகத்திற்குள்தான் எவரை என்ன கேட்டாலும் சரியாக ஆங்கிலத்தில் பதில் வருகிறது.

ஒளிவிளக்குகள் ஒலியை உமிழ திறந்தவெளி விளையாட்டு அரங்குகள் அனைத்தும் ஜே ஜே என்று கூட்டமாக இருந்தன.

விளையாட்டு அரங்குகளின் ஓரங்களில் உள்ள திண்ணைகளில் புல்வெளிகளில் பர்சுகள், கைக்கடிகாரங்கள், செல்பேசிகள் அப்படி அப்படியே கிடக்கின்றன. கேட்பார் இல்லை; சீண்டுவார் இல்லை.

பல்கலைக்கழகம் முழுக்க நான் கண்ட ஜீரணிக்க முடியாத ஒற்றுமை வகுப்பறை நேரம் முடிந்ததும் வெகுநேரம் வரை மாணவ - மாணவிகள் ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருந்தும் ஒன்றாக விளையாடியதும்தாம்.

இவர்களிடையே இருந்த நெருக்கங்கள் மிக அநியாயம்.

தைவான் இந்த விஷயத்தில் கிட்டத்தட்ட ஒரு மேலைநாடுதான். கட்டுப்பாடுகள்; இடைவெளிகள்; கண்ணியங்கள் இல்லை. எல்லாம் காற்றில் பறக்கிற சங்கதிகள்.

உள் விளையாட்டரங்குகளைப் பார்ப்பது என முடிவு செய்து அங்கெல்லாம் சுற்றினேன்.

இவற்றுள் ஓர் அரங்கில் மட்டும் நடனப் பயிற்சி நடந்துகொண்டிருந்தது.

காட்டுக் கூச்சலாக இரைச்சல். சுமார் 20 மாணவ - மாணவிகள் ஒரே நேரத்தில் இரு நடனப் பயிற்சியாளர்களால் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

நான் ஒரு நாற்காலியைத் தேர்ந்தெடுத்து ஓரமாக அமர்ந்துகொண்டேன்.

நான் தைவான் தேசியப் பல்கலைக்கழகத்திற்கு வந்தது சுரேஷ்குமாரையும், சில தமிழ் மாணவர்களையும் சந்திக்க, இதைச் செயல்படுத்தாமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் கேள்வியா?

நீங்கள் கேட்பது சரி. நான் ஒரு முன்ஜாக்கிரதை முத்தண்ணா என்ற வகையில் பயண நேரத்தைக் கேட்டு அறிந்துகொண்டு அதைவிடக் கூடுதலாக அரைமணி நேரத்தை நிர்ணயித்து என் அறையிலிருந்து புறப்பட்டேன். ஆனால் எதிர்பார்த்ததைவிடப் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்ததால் சீக்கிரமே போய்விட்டேன்.

வெகு முன்னதாக நுழைந்து தமிழ் நண்பர்களுக்கு, தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பிவில்லை. எனவேதான் இந்த முன்வலம்.

நடனப்பயிற்சியில் ஆசிரியர் மாணவர் நல்லுறவு அருமை. வெகு நட்புணர்வோடு சொல்லித் தருகிறார்கள்.

ஒரு மாணவர் மாணவி இணைந்து ஆடியபோது உங்களுக்குள் நெருக்கும் போதாது; இன்னும் இறுகக் கட்டியணைக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்ததோடு, தன் மாணவியை இறுக்கி அணைத்தும் காட்டினார். அந்த மாணவி இதற்கெல்லாம் வெட்கப்பட்டதாகவே தெரியவில்லை. நெளிந்தவன் நான்தான்.

திரையுலகில் தொழில் ரீதியான நடனக் கலைஞர்கள் மத்தியில் இந்த நெருக்கம் காணப்பட்டால் அது வியப்பில்லை. ஆனால் மாணவன் மாணவி என்கிற பருவத்தில் ஓர் எல்லைக்கோடு வேண்டுமல்லவா? இதைப்பற்றியெல்லாம் இங்கு எவரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

நடனப் பாணி மிக நன்றாக இருந்தது. சிறு இசைத் துண்டை மட்டும் திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டி அதில் தெளிவு வந்ததும் அடுத்த இசைத் துண்டுக்குப் போகிறார்கள். வெகுநேரம் இங்கு இருந்து இரசிப்பது மிகக் கடினம். புறப்பட்டேன்.

கடிகாரத்தைப் பார்த்தேன். சுரேஷ்குமாரின் விடுதி அறையை நோக்கி நடந்தேன்.

அப்போதுதான் ஓர் இந்திய மாணவரும் ஒரு தைவான் மாணவியும் கிட்டத்தட்ட காதலர்களைப்போல் நெருக்கம் காட்டி நடந்ததைக் கவனித்தேன்.

இவர்களை மடக்கி எப்படியாவது பேட்டி காணவேண்டும் என்று தோன்றியது. இதுவரை நான் பார்த்ததெல்லாம் தைவானிய ஜோடிகள்தாம். இதுமட்டும்தான் வித்தியாசமான ஜோடி.

இவர்களை மடக்கி நிறுத்துவது நாகரிகமாகாது. சரி. சுரேஷ்குமார் உதவியுடன் இவர்களைப் பேட்டி காணலாம் என்றால், நான் சுரேஷ்குமாரைப் பார்த்து அழைத்து வருவதற்குள் இந்த ஜோடி தப்பித்துவிடும்.

என்னதான் செய்யலாம்?

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Law college aggression

Friday, November 28th, 2008

law-college-fightதடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

உடன்பயிலும், நண்பர்களை உடன்பிறந்தவர்களுக்கும் மேலாக நேசிப்பதுதான் உலகம் எங்கும் வழக்கமாக இருக்கிறது.

ஆனால், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள், சகமாணவர்களை, மரக்கட்டைகளால் அடித்துத் துவைத்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டபோது மனம் பதைக்காதவர்கள் குறைவு.

அதுவும், இந்தக் காட்சிகளை வடஇந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்பக் காட்டியபோது தமிழகத்தின் மானமே காற்றில் பறப்பது போன்ற உணர்ச்சியே ஏற்பட்டது.

காவல்துறை இந்த விஷயத்தில் கையாலாகாத துறையாகச் செயல்பட்டதைப் பற்றிய விவகாரத்திற்குள் நான் நுழைய விரும்பவில்லை. நான் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்கிற கோணமே வேறு.

மீண்டும் ‘சட்டக் கல்லூரி திறக்கப்படும்போது பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் பாதிப்பை ஏற்படுத்திய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் ”என்ன மச்சி! எப்படி இருக்கே?” என்று பேசிக் கொள்கிற அளவுக்கு நேசம் காட்டாவிட்டாலும் நீறு பூத்த நெருப்பாக வெறுப்பை உள்ளுக்குள் வைத்துக் கொள்ளாதிருக்க என்ன செய்யப்பட வேண்டும் என்பதில்தான் என் அக்கறை நீள்கிறது.

ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இன்னமும் கூட இவர்களது கைத்தொலைபேசி வழியே மிரட்டலான குறுஞ்செய்திகள் வருகின்றன என்பதுதான் சற்றுக் கலக்கம் தரும் செய்தியாக இருக்கிறது. அடித்தவர்கள்மீது நடவடிக்கை; அடித்தவர்களைப் பார்த்துக்கொண்டு கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள் மீது நடவடிக்கை என்பவையெல்லாம் சட்டச் சம்பிரதாயங்கள்.

ஆனால், இனிச் சட்டக் கல்லூரி வளாகத்தில் நல்லுணர்வும், புரிந்துணர்வும், இனிய சூழலும் ஏற்படுத்த சட்டக் கல்லூரி நிர்வாகமும், சமூக அக்கறை கொண்ட அமைப்புகளும், சமூகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், அரசும் கூட்டாக இணைந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய, செயல்பட வேண்டிய அத்தியாவசியத் தேவை இருக்கிறது.

நல்லவேளையாக, பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் இந்த விஷயத்தில் வெளிப்படையாக மாணவச் சமுதாயத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செயலை இக்கணம் வரை மேற்கொள்ளவில்லை.

ஒரு வேளை இது நீறுபூத்த நெருப்பாக நடக்கிறதா என்பதைப் புலனாய்வு செய்ய வேண்டிய அவசியமும் காவல்துறைக்கு இருக்கிறது.

சட்டக் கல்லூரி திறக்கப்படும் முன் இரு சமூகத்தவரிடையே சமூகச் சூழலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதன் வீரியத்தையும் ஆழத்தையும் உணராமல் சட்டக் கல்லூரி நடந்துகொண்டால் இதன் தொடர்விளைவுகள் பிற தமிழகக் கல்லூரிகளிலும், ஏன் கல்லூரிக்கு வெளியேயும்கூட நிகழந்துவிடலாம்.

இத்தகைய கலவர வெடிப்புகளைத் தாங்கிக்கொள்ளும் சக்தி இன்று தமிழகத்திற்கு இல்லை.

தமிழக அரசு இந்த விஷயத்தில் இனியும் மெத்தனம் காட்டுவது கூடாது!

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Talking rubbish

Friday, November 28th, 2008

tamilvanan.jpgகண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னதான் உணர்வோ தெரியவில்லை. கண் திறந்ததும் வாயைத் திறக்க ஆரம்பித்தால் கண்ணயரும் வரை பேசிக்கொணடே இருப்பவர்கள் இவர்கள்.

பேசுவதற்கு எவரும் கிடைக்காவிட்டால், தெருவில் வருகிறவர்கள் போகிறவர்களிடமும் வாழைப்பழக்காரர்களிடமும், கீரைக்காரம்மாக்களிடமும் பேச்சுக்கொடுத்து வார்த்தைகளை வளர்ப்பார்கள்.

அதிகம் பேசும் சாதனையாளர்களை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. வேறு வகையில் சொல்வது என்றால் தொணத்தொண மனிதர்கள் வெற்றியாளர்களாகப் பரிணமிப்பதே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்வது என்றால் செயல் இயலாமைகளே வார்த்தைகளின் வம்பளப்புகளாக வெளிப்படுகின்றன.

இவர்களை இரண்டு இரகத்திற்குள் அடக்கலாம். முதல் பிரிவினர், ஊர் அக்கப்போர்களைப் பேசுவார்களே தவிர, வம்பு இல்லாதவர்கள்.

அடுத்த இரகத்தினரோ, விவகாரமான மனிதர்கள். புறம் பேசுவது; அவதூறு வளர்ப்பது; வதந்திகளைப் பரப்புவது இவர்களது வாய் எனும் வானொலியின் வேலை. ஒரு பயணி, தான் பயணித்த பேருந்தின் ஓட்டுநருடன் பேச்சுக் கொடுக்க, அவரும் தூக்கம் வராமலிருக்க இவரது உரையாடலை ஊக்கப்படுத்த, வம்பளப்பு வெகுநேரம் நீண்டது.

இந்த வம்பளப்பின் ஒரு பகுதியில் அந்தப் பயணி தாம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பற்றிக் கன்னாபின்னாவென்று விமரிசிக்க, ஓட்டுநரின் மைத்துனரோ, அந்நிறுவன முதலாளிக்கு மிக வேண்டியவராகப் போக, பயணியின் வேலை பறிபோயேவிட்டது.

இவரிடம் பேசுவது எங்கே முதலாளியின் காதை எட்டப்போகிறது என்கிற அலட்சியம் இப்பயணிக்கு.

உரியவர்களிடமா பேசினேன் என்பது அறியாமையின் வாதம். உரியவர்களிடம் பேசினால்கூடப் பாதிப்புக் குறைவுதான்!

ஒரு பத்திரப் பதிவு முடியும் தறுவாயில் விற்பவரைப் பற்றி வாங்குபவர் மனக்குறை ஒன்றை வெளியிட, அது உரியவர் காதை எட்ட, பதிவே பறிபோய்விட்டது. பதிவு முடிந்தபின் பேசியிருக்கலாமே!

வாய் அசைந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிறவர்கள் இனி, பொட்டுக்கடலை தின்னட்டும். உடலுக்காவது நல்லது.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

Junior Kelvi Pathil

Friday, November 28th, 2008
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்
Karunandhi

எஸ்.செந்தில், திருவேற்காடு.

இலங்கையில் போர் நிறுத்தாவிட்டால் பதவி துறக்கவும் தயார் என்கிறாரே கலைஞர்?

அதுவும் நடக்கப் போவதில்லை. இதுவும் நடக்கப் போவதில்லை. இது குறித்து நாம் தான் நமது நினைவுகளைத் துறக்க வேண்டும்.

Moon-Impact-Probe

பி. சுதாகர், பெங்களூர்.

இந்திய தேசியக் கொடி நிலவில் பறப்பது பற்றி?

அமெரிக்கர்களின் மூக்குகளைத் தேய்க்கவிட்ட நமது விஞ்ஞானிகளைத் ‘தம்’ பிடித்துப் பாராட்ட வேண்டும். அமெரிக்கர்களின் மூக்குகளில் முன்பைபிட இப்போது அதிகமாக வியர்க்கிறதாம். போய் வந்தவர்கள் சொன்னார்கள்.

Vijaykanth

ஜி.ரவி, பொள்ளாச்சி.

சட்டசபைக்குப் போகாமல் படப்பிடிப்புக்குப் போன விஜயகாந்த் பற்றி?

முதலமைச்சர் ஆவதற்கு எது முக்கியமோ அதில் பங்கெடுத்திருக்கிறார். இதைப் போய் ஒரு பங்காளிப் பேச்சாய்ப் பேசிக்கிட்டு?

yuvraj

ஆர்.கண்ணபிரான், திருச்சி.

யுவராஜ் சிங் எப்படி?

ருத்ர தாண்டவம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதை கிரிக்கெட் களத்தில் இப்போதுதான் பார்க்கிறேன். இங்கிலாந்துப் பந்து வீச்சாளர்கள் எப்படிப் பந்து வீசுவது என்றறியாது கைபிசைந்து நின்றதையும் இப்போதுதான் பார்க்கிறேன். கிரிக்கெட்டில் இதுவரை பார்த்திராத ஷாட்டுகளையும் காண முடிகிறது. யார்க்கர் போட்டால் சிக்ஸர் விளாச முடிகிறது என்று நிரூபித்த முதல் வீரர். இடுப்புக் கடுக்கிறது என்று கறுப்பு பெல்ட் கட்டிக் கொண்டாலும் அருமையான செஞ்சுரி பிரசவங்கள்.

school-fight

எஸ்.ஞானசேகரன், சென்னை.

சென்னையை அடுத்த படூரிலும் மாணவர்கள் மோதிக் கொண்டு இருக்கிறார்களே?

(படிக்கப்) போன இடத்தில் கல்வியைத் தேடாமல், சிக்கனைத் தேடியிருக்கிறார்கள். சிக்கன் குழம்பில் சிக்கன் இல்லையாம். ஒரு சில சிக்கன் துண்டுகளுக்கு வட இந்திய, தென் இந்திய மோதல்!

vegetables

ஆர்.சுஜாதா, மதுரை.

கேரளாவில் காய்கறிகளின் விலை தமிழகத்தை விட அதிகமாமே?

உணவுப் பொருள் விஷயங்களில் தமிழகத்தை எதிர்பார்ப்பதில் கேரளா இன்னொரு இரண்டாவது அந்தமான்! நமது லாரிகள்தான் அடுப்பையே அங்கு பற்ற வைக்கின்றன.

chiranjeevi

பி.செளந்தர், சென்னை.

ஆந்திராவில் சிரஞ்சீவி ஆட்சிக்கு வந்தால் குடிநீர்க் குழாய்களில் மினரல் வாட்டர் வருமாமே?

கனவுப் பேச்சிற்கு உதாரணம் கேட்டுக் கொண்டிருந்த என் மகனுக்கு சிரஞ்சீவி கை கொடுத்திருக்கிறார். ஆந்திராவுக்கு ஒரு சிரஞ்சீவி போதும். இன்னொருவர் வேண்டாம்!

patient-walking

எம். கற்பகம், திருவண்ணாமலை.

டாக்டர் சொல்படி அப்படியே கேட்பீர்களா, இல்லை உங்கள் இஷ்டத்திற்கு?

டாக்டர் சொல்படி நிறைய நடக்கிறேன். வியாதி இல்லாமலேயே வியாதியஸ்தன் போல நடப்பவன் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன்!

planting

ஏ.சேக்முகமது, சிங்காநல்லூர்.

காய்கறி விலையை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

சொந்தமாக இருக்கும் வெற்றிடங்களை விளை நிலங்களாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டேன். நீங்களும் மலைக்காதீர்கள். விதைப் பாக்கெட்டுகளை வாங்கி வாருங்கள். களை நீக்க வேண்டாம். நிலத்தைப் பயன்படுத்த வேண்டாம். உரம், எரு இடவேண்டாம். தோட்டத்தில் சும்மா தூவுங்கள். சில வாரங்களில் சில செடிகள்; சில காய்கள். அவ்வளவுதான். சுவாரசியம் வந்துவிடும். நீங்களே மண்வெட்டியை எடுத்துக் கொண்டுவிடுவீர்கள்.

film-last-today

கே.சாமி, சேலம்.

மத்தியில் காங்கிரசுக்கு இன்னொரு முறை வாய்ப்பு கிடைக்குமா?

உங்களுக்குத் தெரியாது. எங்கள் காலங்களில் டூரிங் டாக்கீஸ்களில் ‘இப்படம் இன்றே கடைசி’ என்று தேதி போடாமல் அச்சடித்து வைத்திருப்பார்கள். படம் ஓடாவிட்டால் உடனே அதை ஒட்டுவார்கள். அது மாதிரி காங்கிரசாரும் அச்சடித்து வைத்திருக்கிறார்கள். அதை ஒட்ட வேண்டியதுதான் பாக்கி!

man-carrying-man

எஸ்.சங்கர், பனப்பாக்கம்.

வாழக்கையில் பிழைக்கத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் யார்?

முதுகில் உட்காருபவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள். முதுகைக் காட்டுபவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள். இதற்கு தி.மு.க. காங்கிரசை சொன்னால்தான் புரியுமா?

Rajini

ஏ. கணேஷ், கோட்டூர்புரம்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?

உங்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லலாமா? அத்வானி, ரஜினியைப் பார்த்ததன் மூலம் நான் மேலும் குழம்பிப் போயிருக்கிறேன்.

tv

ஏ.ஜோசப்விஜய், புதுக்கோட்டை.

தொலைக்காட்சியின் எதிரியா நீங்கள்?

இல்லை. இதன் விரைவு, வேகம் நவீனம் ஆகியவற்றை வியப்பவன் நான். எவ்வளவோ இந்தப் பெட்டியின் மூலம் கிடைக்கின்றன. ஆனால் நாம்தான் அழுமூஞ்சித் தொடர்களையும் உருப்படாத திரைப்படங்களையும் விரயமாக்கிக் கொள்கிறோம். தொலைக்காட்சியின் மகிமை நம் விரல் நுனியிலும் இரசனையிலும் அடங்கியிருக்கிறது.

exam

எஸ்.வெங்கட்ராமன், சென்னை.

நிகழ்காலமே புரியாத நிலையில் எதிர்காலத்தைப் பற்றி கனவு காணச் சொல்வது சரியா?

காலம் என்பது பரீட்சை பேப்பர் மாதிரி! பரீட்சையில் என்ன செய்கிறோம்? ஒரு கேள்வி புரியாவிட்டால், அடுத்த கேள்விக்குப் போய்விடுகிறோம். அதுமாதிரி தான் இதுவும்! நிகழ்காலம் புரியவில்லை என்றால் எதிர்காலத்திற்குப் போவது எப்படித் தவறாகும்?

chennai-jail

ஏ. கோவிந்தன், வேலூர்.

சென்னை புழல் சிறையைப் பற்றி?

போட்ட முதலீட்டுக்குக் கஷ்டமில்லை. அசலை விட, வட்டியின் வரவு அதிகம் என்கிறார்கள்.

skull

ஆர். விஜயகுமார், குன்றத்தூர்.

கண்கள், இதயம், கல்லீரல் சிறுநீரகம் மாதிரி எலும்புகளையும் தானம் பண்ணலாமாமே?

பண்ணலாம். இதற்கும் எலும்பு வங்கிகள் இருக்கு. ஆனால் இதற்கு உரியவர்களின் முதுகெலும்புகள்தாம் இன்னும் பலமாகவில்லை.


எம்.சிக்கந்தர், தஞ்சாவூர்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்ததாகச் சொல்லப்படும் ‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தில் உண்மை நிலை என்ன?

முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்பது அரசு ஒதுக்கீடுகளுக்குப் பொருந்தாது. ஸ்பெக்ட்ராம் விஷயத்தில் தவறு நடக்கவில்லை என்பது உண்மையானதால், அதை இரத்து செய்து நிரூபிப்பதே முறை. யாரோ சிலரைக் காப்பாற்ற மத்திய அரசு மெளனம் சாதிக்கிறது. நாட்டில் முதன்மை வகித்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனக்குத் தானே குழி தோண்டிக் கொண்டு இரண்டாம் இடத்திற்குக் கீழே போய்விட்டது எவ்வளவு பெரிய இழப்பு!

Sathya-Narayanan

ரஜினிமுருகன், திருவேற்காடு.

ரஜினியால் சத்தியநராயணா ஓரங்கட்டப்பட்டு சுதாகர் முன்னிலைப்படுத்தப்படுவதன் பின்னணி என்ன?

உள்ளுக்குள் நடப்பது என்ன என்பது தெரியாது. ஆனால் சத்தியநாராயணா ரஜினியின் இரசிகர்களை மதிப்பதில்லை என்பதை நானே கண்கூடாகக் கண்டிருக்கிறேன். ரஜினியின் பண்புப் பிரதிபலிப்புகள் சத்தியநாராயணாவிடம் இல்லை. சுதாகரிடம் இதை எதிரிபார்க்கலாம். ஒரு தளபதி தலைவனுக்குப் பெருமை சேர்க்க வேண்டுமே தவிர, சிறுமை அல்ல!

computer

என்.ஸ்ரீகாந்த், புதுவை.

கணிப்பொறி இன்று?

எலிப்பொறி மாதிரி ஆகிவிட்டது. வீட்டு வீட்டுக்கும் வைத்திருக்கிறார்கள். என்ன எலிப்பொறிக்கு மசால்வடை தேவை. கணிப்பொறிக்கு மண்டையில் மசாலா தேவை.

guindy-bridge

எஸ்.எல்.என்.விஜயா, சென்னை-118.

விலைவாசி பிரச்னையைப் பற்றி தி.மு.க.வினர் பேசுவதே இல்லையே?

அவர்கள் இப்போது மேம்பாலங்களில் போய்க் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தரைப்பாலங்களில் நடப்பது பற்றி இவர்களுக்குக் கவலையில்லை.

21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Cricket: England team cancells ODI’s, due to Mumbai attacks

Friday, November 28th, 2008

மும்பை கொடூரம்: அலறும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

மும்பை: மும்பையில் தீவிரவாதிகள் ஆடிவரும் வெறியாட்டம் விளையாட்டையும் பாதித்துவிட்டது. இந்திய அணியுடன் 7 ஒருநாள் போட்டிகளிலும், 2 டெஸ்ட்டுகளிலும் விளையாட இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மும்பை கலாட்டாவைத் தொடர்ந்து கிரிக்கெட் பயணத்தை கைவிட்டு சொந்த மண்ணுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளது.

வீரர்களின் பாதுகாப்புக் கருதி மீதியுள்ள 2 ஒருநாள் போட்டிகளை இங்கிலாந்து அணி ரத்து செய்துவிட்டது. டெஸ்ட் தொடரில் ஆட இங்கிலாந்து அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.

இவ்விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பேசி வருகிறது.
 
இதுகுறித்து பி.சி.சி.ஐ. செயலர் சீனிவாசன் கூறுகையில், ”இங்கிலாந்து போர்டின் விருப்பத்துக்கு ஏற்ப ஒருநாள் தொடரை ரத்து செய்துள்ளோம். கவுகாத்தி மற்றும் டெல்லி போட்டிகள் நடக்காது. மும்பையில் நடக்கவிருந்த இரண்டாவது டெஸ்டில் ஆட இங்கிலாந்து அச்சம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து அவர்களுடன் பேசி வருகிறோம்” என்றார்.

இங்கிலாந்து  போர்டின் நிர்வாக இயக்குநர் ஹக் மோரிஸ் கூறுகையில், ”எங்களுக்கு இங்கிலாந்து வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம். மும்பை தீவிரவாத சம்பவத்தைத் தொடர்ந்து, வீரர்களின் பாதுகாப்பை மறுஆய்வு செய்யவிருக்கிறோம்” என்றார்.

இங்கிலாந்து - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடர் தொங்கலில் உள்ள நிலையில், டிசம்பர் 3 முதல் 10 வரை மும்பை மற்றும் சென்னையில் நடப்பதாக இருந்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

A aa e ee Movie Gallery

Thursday, November 27th, 2008

 a-aa-e-ee

Artist: , , , ,
Direction:
Production: ,
Music : Vijay Antony

Perumal Trailer

Thursday, November 27th, 2008

perumal-trailer

Artist: , ,
Direction: