 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
 |
 |
எஸ்.செந்தில், திருவேற்காடு.
|
 |
இலங்கையில் போர் நிறுத்தாவிட்டால் பதவி துறக்கவும் தயார் என்கிறாரே கலைஞர்?
|
 |
அதுவும் நடக்கப் போவதில்லை. இதுவும் நடக்கப் போவதில்லை. இது குறித்து நாம் தான் நமது நினைவுகளைத் துறக்க வேண்டும்.
|
|
 |
 |
 |
|
 |
 |
 |
 |
ஜி.ரவி, பொள்ளாச்சி.
|
 |
சட்டசபைக்குப் போகாமல் படப்பிடிப்புக்குப் போன விஜயகாந்த் பற்றி?
|
 |
முதலமைச்சர் ஆவதற்கு எது முக்கியமோ அதில் பங்கெடுத்திருக்கிறார். இதைப் போய் ஒரு பங்காளிப் பேச்சாய்ப் பேசிக்கிட்டு?
|
|
 |
 |
 |
 |
ஆர்.கண்ணபிரான், திருச்சி.
|
 |
யுவராஜ் சிங் எப்படி?
|
 |
ருத்ர தாண்டவம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதை கிரிக்கெட் களத்தில் இப்போதுதான் பார்க்கிறேன். இங்கிலாந்துப் பந்து வீச்சாளர்கள் எப்படிப் பந்து வீசுவது என்றறியாது கைபிசைந்து நின்றதையும் இப்போதுதான் பார்க்கிறேன். கிரிக்கெட்டில் இதுவரை பார்த்திராத ஷாட்டுகளையும் காண முடிகிறது. யார்க்கர் போட்டால் சிக்ஸர் விளாச முடிகிறது என்று நிரூபித்த முதல் வீரர். இடுப்புக் கடுக்கிறது என்று கறுப்பு பெல்ட் கட்டிக் கொண்டாலும் அருமையான செஞ்சுரி பிரசவங்கள்.
|
|
 |
 |
 |
 |
எஸ்.ஞானசேகரன், சென்னை.
|
 |
சென்னையை அடுத்த படூரிலும் மாணவர்கள் மோதிக் கொண்டு இருக்கிறார்களே?
|
 |
(படிக்கப்) போன இடத்தில் கல்வியைத் தேடாமல், சிக்கனைத் தேடியிருக்கிறார்கள். சிக்கன் குழம்பில் சிக்கன் இல்லையாம். ஒரு சில சிக்கன் துண்டுகளுக்கு வட இந்திய, தென் இந்திய மோதல்!
|
|
 |
 |
 |
 |
ஆர்.சுஜாதா, மதுரை.
|
 |
கேரளாவில் காய்கறிகளின் விலை தமிழகத்தை விட அதிகமாமே?
|
 |
உணவுப் பொருள் விஷயங்களில் தமிழகத்தை எதிர்பார்ப்பதில் கேரளா இன்னொரு இரண்டாவது அந்தமான்! நமது லாரிகள்தான் அடுப்பையே அங்கு பற்ற வைக்கின்றன.
|
|
 |
 |
 |
 |
பி.செளந்தர், சென்னை.
|
 |
ஆந்திராவில் சிரஞ்சீவி ஆட்சிக்கு வந்தால் குடிநீர்க் குழாய்களில் மினரல் வாட்டர் வருமாமே?
|
 |
கனவுப் பேச்சிற்கு உதாரணம் கேட்டுக் கொண்டிருந்த என் மகனுக்கு சிரஞ்சீவி கை கொடுத்திருக்கிறார். ஆந்திராவுக்கு ஒரு சிரஞ்சீவி போதும். இன்னொருவர் வேண்டாம்!
|
|
 |
 |
 |
 |
எம். கற்பகம், திருவண்ணாமலை.
|
 |
டாக்டர் சொல்படி அப்படியே கேட்பீர்களா, இல்லை உங்கள் இஷ்டத்திற்கு?
|
 |
டாக்டர் சொல்படி நிறைய நடக்கிறேன். வியாதி இல்லாமலேயே வியாதியஸ்தன் போல நடப்பவன் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன்!
|
|
 |
 |
 |
|
 |
 |
 |
 |
கே.சாமி, சேலம்.
|
 |
மத்தியில் காங்கிரசுக்கு இன்னொரு முறை வாய்ப்பு கிடைக்குமா?
|
 |
உங்களுக்குத் தெரியாது. எங்கள் காலங்களில் டூரிங் டாக்கீஸ்களில் ‘இப்படம் இன்றே கடைசி’ என்று தேதி போடாமல் அச்சடித்து வைத்திருப்பார்கள். படம் ஓடாவிட்டால் உடனே அதை ஒட்டுவார்கள். அது மாதிரி காங்கிரசாரும் அச்சடித்து வைத்திருக்கிறார்கள். அதை ஒட்ட வேண்டியதுதான் பாக்கி!
|
|
 |
 |
 |
 |
எஸ்.சங்கர், பனப்பாக்கம்.
|
 |
வாழக்கையில் பிழைக்கத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் யார்?
|
 |
முதுகில் உட்காருபவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள். முதுகைக் காட்டுபவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள். இதற்கு தி.மு.க. காங்கிரசை சொன்னால்தான் புரியுமா?
|
|
 |
 |
 |
 |
ஏ. கணேஷ், கோட்டூர்புரம்.
|
 |
ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?
|
 |
உங்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லலாமா? அத்வானி, ரஜினியைப் பார்த்ததன் மூலம் நான் மேலும் குழம்பிப் போயிருக்கிறேன்.
|
|
 |
 |
 |
 |
ஏ.ஜோசப்விஜய், புதுக்கோட்டை.
|
 |
தொலைக்காட்சியின் எதிரியா நீங்கள்?
|
 |
இல்லை. இதன் விரைவு, வேகம் நவீனம் ஆகியவற்றை வியப்பவன் நான். எவ்வளவோ இந்தப் பெட்டியின் மூலம் கிடைக்கின்றன. ஆனால் நாம்தான் அழுமூஞ்சித் தொடர்களையும் உருப்படாத திரைப்படங்களையும் விரயமாக்கிக் கொள்கிறோம். தொலைக்காட்சியின் மகிமை நம் விரல் நுனியிலும் இரசனையிலும் அடங்கியிருக்கிறது.
|
|
 |
 |
 |
 |
எஸ்.வெங்கட்ராமன், சென்னை.
|
 |
நிகழ்காலமே புரியாத நிலையில் எதிர்காலத்தைப் பற்றி கனவு காணச் சொல்வது சரியா?
|
 |
காலம் என்பது பரீட்சை பேப்பர் மாதிரி! பரீட்சையில் என்ன செய்கிறோம்? ஒரு கேள்வி புரியாவிட்டால், அடுத்த கேள்விக்குப் போய்விடுகிறோம். அதுமாதிரி தான் இதுவும்! நிகழ்காலம் புரியவில்லை என்றால் எதிர்காலத்திற்குப் போவது எப்படித் தவறாகும்?
|
|
 |
 |
 |
 |
ஏ. கோவிந்தன், வேலூர்.
|
 |
சென்னை புழல் சிறையைப் பற்றி?
|
 |
போட்ட முதலீட்டுக்குக் கஷ்டமில்லை. அசலை விட, வட்டியின் வரவு அதிகம் என்கிறார்கள்.
|
|
 |
 |
 |
 |
ஆர். விஜயகுமார், குன்றத்தூர்.
|
 |
கண்கள், இதயம், கல்லீரல் சிறுநீரகம் மாதிரி எலும்புகளையும் தானம் பண்ணலாமாமே?
|
 |
பண்ணலாம். இதற்கும் எலும்பு வங்கிகள் இருக்கு. ஆனால் இதற்கு உரியவர்களின் முதுகெலும்புகள்தாம் இன்னும் பலமாகவில்லை.
|
|
 |
 |
எம்.சிக்கந்தர், தஞ்சாவூர்.
|
 |
தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்ததாகச் சொல்லப்படும் ‘ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தில் உண்மை நிலை என்ன?
|
 |
முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்பது அரசு ஒதுக்கீடுகளுக்குப் பொருந்தாது. ஸ்பெக்ட்ராம் விஷயத்தில் தவறு நடக்கவில்லை என்பது உண்மையானதால், அதை இரத்து செய்து நிரூபிப்பதே முறை. யாரோ சிலரைக் காப்பாற்ற மத்திய அரசு மெளனம் சாதிக்கிறது. நாட்டில் முதன்மை வகித்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனக்குத் தானே குழி தோண்டிக் கொண்டு இரண்டாம் இடத்திற்குக் கீழே போய்விட்டது எவ்வளவு பெரிய இழப்பு!
|
|
 |
 |
 |
 |
ரஜினிமுருகன், திருவேற்காடு.
|
 |
ரஜினியால் சத்தியநராயணா ஓரங்கட்டப்பட்டு சுதாகர் முன்னிலைப்படுத்தப்படுவதன் பின்னணி என்ன?
|
 |
உள்ளுக்குள் நடப்பது என்ன என்பது தெரியாது. ஆனால் சத்தியநாராயணா ரஜினியின் இரசிகர்களை மதிப்பதில்லை என்பதை நானே கண்கூடாகக் கண்டிருக்கிறேன். ரஜினியின் பண்புப் பிரதிபலிப்புகள் சத்தியநாராயணாவிடம் இல்லை. சுதாகரிடம் இதை எதிரிபார்க்கலாம். ஒரு தளபதி தலைவனுக்குப் பெருமை சேர்க்க வேண்டுமே தவிர, சிறுமை அல்ல!
|
|
 |
 |
 |
 |
என்.ஸ்ரீகாந்த், புதுவை.
|
 |
கணிப்பொறி இன்று?
|
 |
எலிப்பொறி மாதிரி ஆகிவிட்டது. வீட்டு வீட்டுக்கும் வைத்திருக்கிறார்கள். என்ன எலிப்பொறிக்கு மசால்வடை தேவை. கணிப்பொறிக்கு மண்டையில் மசாலா தேவை.
|
|
 |
 |
 |
 |
எஸ்.எல்.என்.விஜயா, சென்னை-118.
|
 |
விலைவாசி பிரச்னையைப் பற்றி தி.மு.க.வினர் பேசுவதே இல்லையே?
|
 |
அவர்கள் இப்போது மேம்பாலங்களில் போய்க் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தரைப்பாலங்களில் நடப்பது பற்றி இவர்களுக்குக் கவலையில்லை.
|
|
 |
|
|