 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
 |
 |
சி. கலியமூர்த்தி, தஞ்சை.
|
 |
ஷேர் ஆட்டோவில் பயணிப்பீர்களா?
|
 |
ஷேர் என்றாலே ஒதுங்கி விடுவேன்.
|
|
 |
 |
 |
 |
எம்.செந்தில், அம்பத்தூர்.
|
 |
பங்குச் சந்தையில் போடுவதை விட்டு மனைகளில் போடலாமா?
|
 |
நாளைக்கு ஒரு பைபாஸ், ஒரு மேம்பாலம், ஒரு சுரங்கப்பாதை, ஒரு மெட்ரோ ரயில், ஒரு அணு உலை, ஒரு ஐ.டி.பூங்கா என்று திடீர் என்று உருவாவதால் கவனம்!
|
|
 |
 |
 |
 |
ஆ. பார்த்திபன், செங்கல்பட்டு.
|
 |
சைவர்கள் இன்று அசைவர்களாய் மாறிவிட்டார்களே?
|
 |
காய்கறி விலைக்குக் கறி விலை பரவாயில்லையென்று மாறியிருப்பார்கள். எனக்குத் தெரிந்த சைவர்கள் சிலர் கறியைக் கையால் தொடாமல், ஸ்பூனால் சாப்பிட்டு, இதிலும் பத்தியத்தோடுதான் இருக்கிறார்கள்.
|
|
 |
 |
 |
 |
உ.நைனியப்பன், ஹைதராபாத்.
|
 |
தமிழக அரசியல்வாதிகளுள் பெட்ரோல், டீசல் விலையைக் குறையுங்கள் என்று குரல் கொடுத்த ஒரு மனிதர் சரத்குமார்தான். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
|
 |
இதில் அக்கறை இருக்கிறதே தவிர தர்க்கம் இல்லை! பெட்ரோல் நிறுவனங்கள் தாங்க முடியாத நஷ்டத்தில் இருக்கின்றன. என்றாவது தீர்வு வரும்; அரசு, மானியம் தரும் என்கிற நம்பிக்கையில் வண்டியை ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ரிலையன்ஸ் பாருங்கள். நஷ்டம் தாங்க முடியாமல் மூடியேவிட்டது. பெட்ரோல், டீசல் பீப்பாய்கள் விலை குறைந்தாலும் ஏற்கெனவே ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிக்கட்டும் வரை விலை குறையும் என எதிர்பார்ப்பது நியாயமல்ல. உண்மை நிலை தெரிந்தவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். சரத்குமாருக்கு ஏனோ குரல் கொடுக்கத் தோன்றியிருக்கிறது.
|
|
 |
 |
 |
 |
டி.ராஜன், குரோம்பேட்டை.
|
 |
எந்தக் கட்சி மாநாடு நடத்தினாலும் கூட்டம் சேர்ந்துவிடுகிறதே எப்படி?
|
 |
இலவசப் போக்குவரத்து, இலவச சாப்பாடு, தினப்படிகளில் மயங்காதவர்கள் கூட கடைசியில் டாஸ்மாக் என்றால், உடனே பாஸ்மார்க் போடுகிறார்கள். மாநாடுகளே இப்போது இந்த டாஸ்மாக்கால்தான் நடக்கின்றன. இது தெரியாமல், ‘மது விலக்கைக் கொண்டு வருவோம்’ என்றால் எப்படி?
|
|
 |
 |
 |
 |
சி.லாரன்ஸ், ஈரோடு.
|
 |
இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸின் துயரம் பெரிதா, தி.மு.க.வின் துயரம் பெரிதா?
|
 |
இந்த இருவரையும் உட்கார வைத்த நம்மோட துயரம்தான் பெரிது (பட்டிமன்றத்திற்கான என் தீர்ப்பு எப்படி?).
|
|
 |
 |
 |
 |
வி. முருகன், நொளம்பூர்.
|
 |
பெண்களுக்கு இருக்கிற மதிப்பு இன்று ஆண்களுக்கு இல்லையே ஏன்?
|
 |
பெண்கள் தலையை அடகு வைத்தாலாவது கம்மல், தோடு என்று தேறும். நமது தலையை அடகு வைத்தால் வெறும் களிமண்தான் தேறும். இப்படி ஒரு லாஜிக்கைச் சொல்கிறார், எனது பக்கத்து வீட்டுச் சேட்டு.
|
|
 |
 |
 |
 |
ஆர்.சீதாராமன், பாண்டிச்சேரி.
|
 |
தந்திகளை, தபால்களை அனுப்பச் சொல்லும் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?
|
 |
துவண்டுகிடக்கும் தபால் தந்தித் துறைகளைத் தட்டி எழுப்பும் இந்த முறையை நான் வரவேற்கிறேன். பிற போராட்டங்கள் என்றால், அரசுக்கு நட்டம். இந்தப் போராட்டத்தால் இலாபமல்லவா?
|
|
 |
 |
 |
 |
எம்.பழனிவேல், கள்ளச்குறிச்சி.
|
 |
கர்நாடக தமிழக நல்லுறவு மீண்டும் மலருமா?
|
 |
காவிரி விஷயத்தில் கர்நாடகமும் தமிழகமும் கைகோர்த்தால் திட்டங்களை உருவாக்கச் சாத்தியக் கூறுகள் உண்டு. இதைக் கர்நாடக அரசு உணர்ந்து கரம் நீட்டுகிறது. தமிழகம் இதற்கு முன் வரவேண்டும்.
|
|
 |
 |
ஜே. விக்கிரமன், மன்னார்குடி.
|
 |
வரும் தேர்தலில் எவையெவை இலவசமாகக் கிடைக்கும்?
|
 |
தி.மு.க. காரர்களுக்கான அட்சயப் பாத்திரங்கள் தி.மு.க.காரர்களுக்குதான் அத்துப்படி. ஒரு சுயேச்சையைக் கேட்டால் எப்படி?
|
|
 |
 |
 |
 |
எம்.பாஷா, சென்னை.
|
 |
தர்மம் என்றும் தலைகாக்குமா?
|
 |
ஹெல்மெட் ஐ.எஸ்.ஐ. ஆ என்பதைப் பொறுத்தது.
|
|
 |
 |
டி.துளசிராம், சென்னை-11.
|
 |
உங்களுக்கு எதிரிகள் இல்லையாமே?
|
 |
ஆமாம்! என்னிடம் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. அதனால் எதிரிகள் இல்லை. நல்ல எதிர்பார்ப்புகள்தாம் இன்று நல்ல எதிரிகள்.
|
|
 |
 |
 |
 |
எஸ்.பாலு, மூலக்கடை.
|
 |
பக்கத்து வீட்டுக்காரர்களோடு நாம் விரோதம் கொள்ளலாமா?
|
 |
அவர்கள் தாம் நமக்கு ஆம்புலன்சுகள் அதையும் பஞ்சராக்கிவிடாதீர்கள்.
|
|
 |
 |
 |
 |
நிர்மலா ராகவன், மதுரை-2.
|
 |
ஜனவரியில் தான் வாக்காளர் இறுதிப் பட்டியலாம். தேர்தல் ஆணையத்திற்கு இது தலைக்குனிவுதானே?
|
 |
இல்லை. அடையாள அட்டையில் இடம் பெற புகைப்படத்திற்கு கையைப் பிடித்து இழுக்காத குறையாய் நம்மவர்கள் நடந்து கொண்டது குறை. கணக்கெடுப்பின் போது சரியான தகவல்களைத் தராதது குறை. முகவரி மாற்றங்களைச் சரிவரத் தெரிவிக்காதது குறை. பாவம் தேர்தல் ஆணையம். இதுவே சாதனைதான்!
|
|
 |
 |
 |
 |
டி.வெங்கட், முசிறி.
|
 |
மரபணு மாற்றப் பயிர்களை கிரீன் பீஸ் இயக்கம் எதிர்ப்பது ஏன்?
|
 |
இந்தச் சோதனையில் எலிகளை உட்படுத்துவது போல் இந்தியர்களை உட்படுத்துவது முறையல்ல என்கிறது இந்த இயக்கம். ஆனால் உலகின் தேவைகளுக்கு ஏற்பப் புதிய தொழில்நுட்ப முறைகளை ஆராய்வது தவறல்ல. இந்த விஷயத்தில் பச்சை அமைதி அமைதியாக இருப்பது நல்லது.
|
|
 |
 |
 |
 |
எஸ்.அப்துல்ஹமீது, தஞ்சாவூர்.
|
 |
இன்று இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விலக வேண்டிய மூத்த ஆட்டக்காரர்கள் யார் யார்?
|
 |
கங்குலி, கும்பிளே கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள இராஜினாமாவை அறிவித்து விட்டார்கள். லக்ஷ்மண் நன்கு ஆடி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுவிட்டார். டெண்டுல்கர் இன்னும் ஓரிரு வருடங்கள் தாங்குவார். தடவிக் கொண்டிருப்பவர் டிராவிட்தான். கழுத்தில் கை வைக்கும் வரை புரிந்துகொள்ள மாட்டார் போல!
|
|
 |
 |
 |
 |
பா. திருமாமுருகன், கடலூர்.
|
 |
இருபது கோடி இலங்கைத் தமிழர் நிவாரண நிதி சாதனைதானே!
|
 |
ஆறு கோடித் தமிழர்கள் தலைக்கு மூன்று ரூபாய் மட்டும் கொடுத்திருப்பது போதாது. நிச்சயம் குறைவுதான்! இலங்கைத் தமிழர் ஆதரவு தமிழ்நாட்டவர்களிடம் போதுமான அளவு இல்லை என்பது உளவுத் துறையின் கண்டுபிடிப்பாம். ஏமாற்றமாக இல்லை?
|
|
 |
 |
 |
|
 |
 |
 |
|
 |
 |
 |
 |
ஆர். இருதயராஜ், தேவகோட்டை.
|
 |
கங்குலிக்கு விடை கொடுங்கள் பார்ப்போம்!
|
 |
இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைத் தேடித் தந்தவர் என்ற வகையில் இவர் நம் நன்றிக்குரியவர். இடக்கை ஆட்டக்காரர்கள் ஆடும் அழகே தனி. இந்த வகையிலும் நம்மை இன்புறுத்தியவர். தமக்குக் கீழே ஆடியவர்களைச் சிம்ம சொப்பனத்தில் வைத்திருந்தவர். சிறந்த பண்பாளர் என்று பெயர் எடுக்காதவர். திறமைசாலிகளிடம் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் பெருந்தன்மையுடன் விடைகொடுப்போம்.
|
|
 |
 |
 |
 |
எஸ்.பரக்கத் அலி, திருநெல்வேலி.
|
 |
ராஜீவ் காந்தியின் கொலையில் அமெரிக்காவுக்குத் தொடர்பு உள்ளது என்கிறாரே திருமாவளவன்?
|
 |
திருமாவளவன் ஒரு சீரியசான நபர் என்றுதான் இதுவரை எண்ணியிருந்தேன். நல்லாத் தமாஷும் பண்றாரே!
|
|
 |
 |
 |
 |
கே.எஸ்.லட்சுமி நாராயணன், வெங்கடேஸ்வரா நகர்.
|
 |
கஷ்டப்படுகிறவர்கள் எல்லாம் வெற்றி பெற்றதில்லையே?
|
 |
நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். நான் வேறு மாதிரிச் சொல்கிறேன். அதாவது வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கஷ்டப்பட்டவர்கள் என்று! இதிலும் ஒரு கஷ்டம் இருக்கிறது.
|
|
 |
|
|