 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
 |
|
 |
 |
 |
 |
ஜே. ரத்னா, குளித்தலை.
|
 |
அதிரடி அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமியின் மதுரை அலுவலகம் தாக்கப்பட்டது பற்றி?
|
 |
அதிரடிக்கே ஓர் அதிரடி! இது அவருக்குப் பேரிடி. சொல்லப் போனால், சொக்கநாதர் பூமியில் அடுத்தவர்(கள்) சொக்காயைப் பிடிப்பதே இன்று ஃபேஷன் என்றாகிவிட்டது.
|
|
 |
 |
 |
 |
ஜி. ராஜசேகரன், சிவகாசி.
|
 |
பயங்கரவாதம், தீவிரவாதம் இவற்றை ஒழிக்க வழியே இல்லையா?
|
 |
இரண்டுமே இரண்டு வகை கேன்சர்கள்! கேன்சர்களை முற்றிலும் ஒழிக்க எந்த லேசருமில்லை. எனவேதான் அண்டை நாட்டார் அதை நமக்குச் சாசரில் வைத்துக் கொடுக்கிறார்கள்.
|
|
 |
 |
 |
 |
எம்.சம்சுதீன், காஞ்சிபுரம்.
|
 |
பத்திரிகைச் செய்திகளுள் உங்கள் கவனத்தை ஈர்த்த செய்தி ஏதும்?
|
 |
உண்டு. பிரியமிகு நாய் இறந்தது என்று ஓர் இளைஞர் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதைக் சொல்லலாம். வளர்ப்பு மிருகங்கள், உயிரினங்கள் மீது அதிகப் பற்றோ பாசமோ நெருக்கமோ கூடாது. மனத்திற்கும் உடலுக்கும் இவை நன்மை செய்யா. ஒரு மனிதன் தம் வாழ்நாளில் ஐந்நூறு நாய்களையாவது (வளர்த்து) இழக்க நேரும். இவற்றிற்கெல்லாம் ஒரு துளிக் கண்ணீர் போதும். இதற்கென உயிரையா மாய்த்துக்கொள்வது? மிருகங்களை அப்படி நேசிக்கும் மேலைநாட்டவர்கள் கூடத் இத்தவறைச் செய்வது இல்லை!
|
|
 |
 |
 |
 |
கே. சந்திரன், சென்னை-22.
|
 |
உங்களுக்கு மெழுகுச் சிலை வைக்கலாம் என்பது எங்கள் ஆசை! உங்களின் ஆசை?
|
 |
சும்மா பூசி மெழுகக் கூடாது. காரியத்தில் இறங்க வேண்டும்.
|
|
 |
 |
 |
 |
எம். ஆறுமுகம், கிருஷ்ணகிரி.
|
 |
சென்னைப் பல்கலைக் கழகத்தில் மதிப்பெண்களைத் திருத்தி மோசடி நடந்துள்ளதே?
|
 |
பல்கலைக் கழக கம்ப்யூட்டர்களில் வைரஸ்கள் உண்டு தெரியும். பட்டியலைத் திருத்தும் வைரஸ்களும் நம் பல்கலைக் கழகத்தில் உள்ளது அதிர்வைத் தருகிறது.
|
|
 |
 |
 |
 |
அ. பூபதி, பூவிருந்தவல்லி.
|
 |
ராகுல் தனது சுற்றுப் பயணங்களில் மாணவர்களுக்குக் கதை சொல்லி அசத்துகிறாராமே?
|
 |
இன்னொரு அப்துல்கலாமோ? அதிருக்கட்டும். போகுமிடங்களில் எல்லாம் இவர் (வெறும்) கதை சொல்லிக் கொண்டிருந்தால், மக்கள் இவருக்கு வேறு ஒரு கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்களே?
|
|
 |
 |
 |
 |
ஜே.தினகரன், சென்னை.
|
 |
கெளதம் காம்பீர் மீது நடவடிக்கை எடுத்தது சரியா?
|
 |
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் காம்பிரின் அநாகரிக நடவடிக்கைக்கு (வாட்சன் மீது வேண்டுமென்றே மோதியது) ஆதரவு தெரிவித்து உலக கிரிக்கெட் சங்கத்திடம் விண்ணப்பித்தது மிக அநாகரிகமான செயல். இந்தியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் உடனே சரியோ தவறோ மேல் முறையீடு செய்வதென வைத்திருக்கிறது. குரங்கு என ஆஸ்திரேலிய சைமண்ட்ஸை ஹர்பஜன் சிங் திட்டியதற்கும் விண்ணப்பித்து மூக்கை உடைத்துக் கொண்டது போதாது என்று இது வேறு!
|
|
 |
 |
 |
 |
ஏ. பிரகாசம், கோட்டூர்புரம்.
|
 |
நெல்லை கண்ணன் கம்பராமயணத்தில் ஆயிரம் பாடல்களைப் பார்க்காமல் சொல்லும் திறன் படைத்தவராமே?
|
 |
இந்தப் பத்து சதவிகிதக் கம்பரை எனக்கு மிகப் பிடிக்கும். இந்த மனனத்திற்கே அவருக்குப் பட்டாபிஷேகம் செய்யலாம்!
|
|
 |
 |
 |
|
 |
 |
 |
 |
எஸ். கண்ணபிரான், திருச்சி.
|
 |
ஒரு கறுப்பான மனிதர் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக வந்ததன் மாயம் என்ன?
|
 |
திறமைசாலி என்கிற நல்லெண்ணம் முக்கியக் காரணம். புஷ்ஷின் ஆட்சியில் ஏற்பட்ட சலிப்பும் மக்கள் மாற்றம் விரும்பிய சூழலும் அடுத்த காரணம். எடுப்பான தோற்றம்; அளவான புன்னகை; கறுப்பாக இருந்தாலும் வசீகரம். இவருக்கு வெள்ளை அமெரிக்கத் தாய் என்பதும் மற்றொரு பலம். ஓபாமா வந்தது இந்தியர்களுக்கு நல்லது என்றும் அல்ல என்றும் இருவேறு கருத்துகள் உண்டு. இந்த அனுமார் பக்தர் என்ன செய்யக் காத்திருக்கிறார் என்று பார்ப்போம்!
|
|
 |
 |
 |
 |
ஆர். சுரேஷ், சென்னை-4.
|
 |
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் குழந்தைகள் இன்று அசத்துகிறார்களே?
|
 |
ஒன்றரை அடியில் எழுதுவதுதான் கடினம். எழுதியதை ஒன்றரை வருடத்தில் அசத்தலாமே? தினம் மூன்று குறள் என்று மனப்பாடம் செய்தாலும் ஒன்றரை வருடங்களில் விருத்தி பெறுமே?
|
|
 |
 |
எஸ்.பீட்டர், சென்னை-116.
|
 |
தி.மு.க. எம்.பி.க்கள் இராஜினாமா நிறுத்தி வைப்பு ஏன்?
|
 |
இதனால் சிலருக்குக் காய்ச்சலும், திடீர் வயிற்றுவலியும் வந்தனவாம். இதைக் காரணங்காட்டி, சிலர் அரசியல் பள்ளிக் கூடம் போகாமல் இருந்தார்களாம்!
|
|
 |
 |
 |
 |
ஜே. குமார், அம்பத்தூர்.
|
 |
இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கருணாநிதி திருப்தியாகப் புரிந்து கொள்கிறார் என்று பிரணாப் முகர்ஜி சான்றிதழ் தருகிறாரே?
|
 |
இதுவொரு புரிந்துணர்வு ஒப்பந்தம்! இந்த ஒப்பந்தம் உங்களுக்கும் எனக்குப் புரியாது. இது மாதிரி ஒப்பந்தங்கள் நிறையக் கண்டவர் கலைஞர்!
|
|
 |
 |
 |
 |
வி. சம்பந்தம், திருவாரூர்.
|
 |
திரையுலகினரின் ஒவ்வொரு பிரிவினரும் இலங்கைப் பிரச்னையில் தங்களது அக்கறையைக் காட்டுவது எதைக் காட்டுகிறது?
|
 |
தமிழர் பாசத்தை, இந்திய இரசிகர்களுக்கு அடுத்தபடியாக திரையுலகை மிகவும் நேசிப்பவர்கள் உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தமிழர்கள். அவர்கள்மீது நன்றியும் விசுவாசமும் காட்டப்படாவிட்டால் தான் நமக்கு ஏமாற்றம்!
|
|
 |
 |
 |
 |
பா. முரளி, கோவை.
|
 |
ஷேர் விஷயத்தில் ஏதும் இழந்தீர்களா, தப்பித்தீர்களா?
|
 |
சாரி, ஐ கேனாட் ஷேர்!
|
|
 |
|
|