வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி
விரைந்து நலம்பெற…
மின்னிஸோட்டாவின் நார்த் பீல்டில் உள்ளது செயிண்ட் ஓலப் கல்லூரி. ஒரு நோயாளி விரைந்து குணமாக அவரது குடும்ப உறுப்பினர்கள். நண்பர்கள் முதலானோரிடம் அவரைப்பற்றிய அபிப்பிராயங்களை, இனிமையான குணங்களை மட்டும் பேசச்செய்து ஒலி பரப்பியது. இதைக்கேட்ட ஒரு நோயாளியின் இதயம் சீராகியது. உடல்ரீதியாக நலம் பெற உறுதி பெற்றார். பிறகு விரைந்து குணமாகிவிட்டார். இது 1999இல் நிரூபிக்கப்பட்ட உண்மை.
வாழ்க்கைக்கு அர்த்தமூட்டும், நம்பிக்கை அளிக்கும் பழைய வாழ்க்கைக் கதைகளைக் கேட்டால், நோயாளியின் உடல் சீக்கிரம் குணமடைகிறது. பத்தாயிரம் பேர்களிடம் ஆக்கப்பூர்வச் சிந்தனையைத் தூண்டும் வாழ்க்கைக் கதைகளை, மகிழ்ச்சியான சம்பவங்களைச் சொன்னார்கள். பிறகு அவர்களிடம் அவர்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சிகரமான, நம்பிக்கை தந்த சம்பவங்களைச் சொல்லச் சொன்னார்கள். நான்காண்டுகள் ஆராய்ந்ததில் இவர்கள் உடல் நலம் - 18 வயதிலிருந்து எல்லா வயதினருக்கும் - சிறப்பாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அர்த்தமில்லாத வாழ்க்கைக் கதைகளால் எந்த ஒரு நன்மையும் இல்லை.
இந்த உலகில் கவலையும், கவனிக்காதத் தன்மையும் அதிகம் உள்ளன. உங்கள் அன்பையும், சிந்தனையையும் புதுப்பிக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கைக் கதைகள் நிறைய உள்ளன. அவற்றைக் கேட்டால் உடல் நலம் மீண்டும் புத்துணர்வு பெறும்.
குழந்தைகள் மட்டுமல்ல, வயதானப் பெற்றோரும் விரைந்து நலம்பெற, அவர்கள் சம்பந்தப்பட்ட நல்ல சம்பவங்களையோ, விலங்குகளின் நன்றி உணர்வையோ சொல்லி உற்சாகப்படுத்தினால் விரைந்து நலம் பெறுவார்களாம்.
ஹாவார்ட் தோர்ஷி, ப்ரூஸ் ராபர்ட் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் நோயாளிகளும், ஊக்கமில்லாதவர்களும் முறையே குணமாகவும், எழுச்சி பெறவும் ‘மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அனுபவங்களையே அடிக்கடி பேசுங்கள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை தங்கள் அனுபவத்தால் எழுதியுள்ளார்கள்.
இந்த ஆய்வுக்குழு டாக்டர்கள் ஆய்வு, புத்தகம் எழுதுதல் என்பதுடன் நிற்காமல் படுத்த படுக்கையாக உள்ள நோயாளிகளை முதியோர் இல்லத்தில் சந்தித்து கதைகள் சொல்லி அவர்கள் விரைந்து நலம் பெறவும் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
Related Posts Title































