Friday, 7 Nov 2008
அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!
”மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படும்படி நடந்துகொள்ளமாட்டோம்” என்று தி.மு.க. அறிவித்ததன் பின்னணியைத் தராசுத் தட்டில் வைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
இலங்கையிலிருந்து நேற்று வரை வந்த செய்திகள், அங்குள்ள அப்பாவித் தமிழர்களுக்கான ஆபத்துகள் அடியோடு நீங்கி விட்டதாகத் தெரிவிக்கவில்லை.
அதேபோல் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் குறைந்துவிட்டதாகவும் நம்புவதற்கில்லை.
இந்த விஷயத்தில் இந்தியத் தலையீட்டை இலங்கை எந்த அளவிற்கு விரும்பியது என்பதும் இனி போகப் போகத்தான் தெரியும்.
மக்களைக் கொல்வது எங்கள் நோக்கமல்ல; ஆனால் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்று இலங்கை காட்டிய குறிப்பே இதற்கு நல்ல சான்று.
விடுதலைப் புலிகளின் தலைவரும் ஒரு மிகப் பெரிய கோரிக்கையை இந்தியாவுக்கென வைத்திருக்கிறார். இதைச் சாத்தியப்படுத்த முடியாது என்பதும் அவருக்கே தெரியும்.
”போரை நிறுத்துங்கள்; பேச்சு வார்த்தைக்கு வாருங்கள்” என்று விடுதலைப்புலிகளிடம் கோரிய பிரிவு, தரப்பு ஒன்றேனும் உண்டா? நார்வேக்கு மட்டுமே இந்தத் திராணி உள்ளது. ஆனால் நார்வே இதில் கையைக் கட்டிக்கொண்டல்லவா உட்கார்ந்திருக்கிறது!
8 இலட்சம் டன் உதவிப் பொருள்களும், தமிழக அரசு திரட்டும் நிதியும்தான் இன்றையப் பிரதானத் தேவைகள் என்று சொல்லிவிட முடியாது. உயிருக்கு உத்தரவாதம் தரும் இயல்பு வாழ்க்கை முறையே இலங்கைத் தமிழர்களின் முக்கிய வேண்டுதலாகும். போர் ஓயும்வரை இது சாத்தியமில்லை.
இப்படி எவருக்குமே முழு மகிழ்ச்சியை - நிம்மதியைத் தராத இலங்கை விவகாரத்தில் தி.மு.க. தலைமை மட்டும் எப்படித் திருப்தி அடைந்ததோ தெரியவில்லை.
மத்திய அரசின் நடவடிக்கை தமிழர்களைக் காப்பாற்றப் போதுமானது என்று கருணாநிதி எப்படி முடிவுக்கு வந்தார் என்பதே பிடிபடாத விஷயம்தான்.
இந்த விஷயத்தில் அங்குல முன்னேற்றத்தை மட்டும் காட்டிவிட்டு தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இராஜினாமாக் கடிதங்களைப் பரணில் தூக்கிப் போட்டுவிட்டன. சும்மா ஒரு போக்குக் காட்டத்தான் இந்த நடவடிக்கை என்பது இந்நேரம் தமிழக மக்களுக்கு நன்கு புரிந்திருக்கும்.
தமிழக காங்கிரசையும் மத்திய அரசையும் மிரட்டவும்தான் இலங்கைப் பிரச்னையை தி.மு.க. கையில் எடுத்துக் கொண்டதோ என்கிற ஐயப்பாட்டை அடியோடு புறக்கணிக்க முடியாத நிலையே இப்போதைக்கு நிலவுகிறது.
இதைப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்குத் தமிழக மக்கள் அப்படி ஒன்றும் ஏமாளிகளல்லர்!
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!
2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!
2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..
2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்
2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?
2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்
2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?
2008/09/05 இருபக்க இடைவெளிகள்!
2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!
2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்
2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!
2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?
































