 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
 |
 |
 |
ஜே.ஆண்டனி, விழுப்புரம்.
|
 |
திரையரங்குகளில் கூட்டம் குறையத் தொடங்கியிருப்பது குறித்து?
|
 |
அக்கூட்டம்தான் இப்போது எல்லா மொட்டைமாடிகளிலும் நாம் பார்க்கிற டிஷ் ஆன்ட்டெனாக்கள்!
|
|
 |
 |
 |
|
 |
 |
 |
 |
எஸ்.அன்பு, கிருஷ்ணகிரி.
|
 |
மதுரை நகரம் கலைஞரின் கையை விட்டு போய்விட்டது என்கிறாரே ஜெயலலிதா?
|
 |
எந்தக் குதிரையும் சாட்டையின் நிழலைக் கண்டாலே ஓட ஆட ஆரம்பிக்கும். ஆனால் இங்கு ஒரு குதிரை சாட்டையையே கல்விக் கொண்டு ஓடுகிறது.
|
|
 |
 |
 |
 |
டி.பிரபாகரன், செங்குன்றம்.
|
 |
விஜயகாந்த் என்ன நினைக்கிறார்?
|
 |
அ.தி.மு.க. வரக்கூடாது என்று தி.மு.க. நினைக்கிறது. தி.மு.க. வரக்கூடாது என்று அ.தி.மு.க. நினைக்கிறது. இந்த இருவரின் ஆசைகளையும் மக்கள் நிறைவேற்றினால் போதும்! தம் ஆசைதானாக நிறைவேறிவிடும் என நினைக்கிறார்.
|
|
 |
 |
 |
 |
ஏ.ராஜேந்திரன், திருவாரூர்.
|
 |
புகையிலைக்கு எதிராக அன்புமணி ஏன் தீவிரம் காட்டுகிறார்?
|
 |
அடிப்படையில் அவர் ஒரு மருத்துவர். புன்னகைக்குக் கொடுக்கப்பட்ட உதடுகளைப் புகைச்சுருட்டுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறார். அவரது கனைப்பும், நினைப்பும் சரிதான்.
|
|
 |
 |
 |
 |
எஸ்.பவுன்குமார், மாதவரம்.
|
 |
உங்களுக்கு நடிகைகளில் யாரைப் பிடிக்கிறது?
|
 |
விவாகரத்து செய்துவிட்டு உடனே மறுமணம் செய்து கொள்கிறவர்களை!
|
|
 |
 |
 |
 |
பி.ராஜ்குமார், செஞ்சி.
|
 |
வாரத்தில் நீங்கள் எந்த நாளைப் போற்றுகிறீர்கள்?
|
 |
நானும் அந்த இளங்கோவடிகளைப் போரத்தான் ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்தான்! ஓய்வு நாள் என்று மகிழ்கிறேன் என நினைக்கிறார்களா? அதுதான் இல்லை. என் உழைப்பு ஞாயிறு அன்றுதான் அதிகம். அதுவும் மனித சஞ்சாரம் இல்லாத இடத்தில்!
|
|
 |
 |
 |
 |
எம்.மோகன், கடம்பத்தூர்.
|
 |
உங்களுக்கு சுதேசிப் பொருட்களைப் பிடிக்குமா, வெளிநாட்டுப் பொருட்களைப் பிடிக்குமா?
|
 |
எனக்கா சுதேசியிலேயே செய்கிற வெளிநாட்டுப் பொருட்களைப் பிடிக்கும்.
|
|
 |
 |
ஜி.சேஷகிரி, சென்னை.
|
 |
கர்நாடகம், தமிழகம் முன் உள்ள பிரச்னைகள்?
|
 |
எல்லாமே ஒவ்வொரு பிரசவம்! ஆனால் ஒவ்வொரு பிரவத்திலேயும் தாய் மட்டும் நன்றாக இருக்கிறாள். சேய் மட்டும் செத்தே பிறக்கிறது.
|
|
 |
 |
 |
 |
ஜி.லோகு, அம்பத்தூர்.
|
 |
மிஸ்ரா நன்கு பந்து வீசுவதால் கும்ப்ளேவை வீட்டுக்கு அனுப்பிவிடலாமா?
|
 |
மிஸ்ராவுக்கு முதல் டெஸ்ட் (7) விக்கெட்டுகள் அதிர்ஷ்டமா அல்லது திறமையின் பரிசா என்பது முதலில் உறுதியாகத் தெரியவேண்டும். ஆனால் கும்ப்ளேயின் கேப்டன் பதவிக்கும் சுழற்பந்து வீச்சாளர் என்கிற இடத்திற்கும் தோனியும் மிஸ்ராவும் வேட்டு வைத்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.
|
|
 |
 |
 |
 |
ஆர்.பாலாஜி, கோவிந்தபுரம்.
|
 |
மொகாலியில் ஆஸ்திரேலியர்களைப் பதம் பார்த்த விதம் எப்படி?
|
 |
இந்திய அணியில் அனைவரும் என்ன திறமைக்காக அவர்கள் அறியப்பட்டிருக்கிறார்களோ அவற்றை நன்கு வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து இது நடந்தால் ‘ரிக்கி’யை டிக்கியில் போட்டுப் பூட்டி விடலாம்.
|
|
 |
 |
 |
 |
ஆர்.பாபு, சென்னை.
|
 |
குழந்தைகள் எதிரில் பெற்றோர்கள் சண்டை போடலாமா?
|
 |
குழந்தைகள் எதிரே சண்டை போடுவதும், அக்குழந்தைகளை ஒரு ஆழ்துணைக் கிணற்றில் தள்ளுவதும் இரண்டும் ஒன்றுதான். வேண்டுமானால், இவர்களின் சண்டைக்கு ஒரு தனி நேரம், தனி அலைவரிசை, தனி ஸ்டுடியோ ஒதுக்கிக் கொள்ளலாம்.
|
|
 |
 |
 |
 |
ஆர்.ராமசாமி, கும்பகோணம்.
|
 |
மகிழ்ச்சியைச் சிலர் பணத்தால் வாங்க முடியும் என்று நம்புகிறார்களே?
|
 |
இதற்குக் கிரெடிட் கார்டு கிடையாது. டெபிட் கார்டுதான்! நமது கணக்கில் என்ன பேலன்ஸ் இருக்கிறதோ அதைத்தான் வாங்க முடியும். ஒவர் டிராப்ட் கிடையாது.
|
|
 |
 |
 |
 |
எஸ்.அப்துல்வஹாப், அண்ணாநகர்.
|
 |
தே.மு.தி.க.வின் இளைஞர் மாநாடு சென்னையை ஒரு கலக்குக் கலக்கிவிட்டதே?
|
 |
ஆமாம். அடியோடு கலங்கிவிட்டது. பல அரசியல் தலைவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டார் நம்ம விஜயகாந்த்!
|
|
 |
 |
 |
 |
ஆர்.சீனிவாசன், முகப்பேர்.
|
 |
தான் ஆட்சிக்கு வந்தால் ஊழலே இருக்காது என்கிறாரே விஜயகாந்த்?
|
 |
ஊழலற்ற அரசியல் ஜப்பானிலேயே கிடையாது என்கிறபோது தமிழகத்தில் எப்படிச் சாத்தியம். கேட்காதவர்களின் கையில் கூடத் திணிக்கிறவர்களாச்சே நம்மவர்கள்!
|
|
 |
 |
ஆர்.வினோத்குமார், காவேரிப்பாக்கம்.
|
 |
இங்கே எதற்காக இலவசங்களைத் தருகிறார்கள்?
|
 |
எல்லாம் கடுகைத் தந்து விட்டுக் கடலைக் கேட்பதற்காக; மடுவைத் திறந்துவிட்டு மலையைப் பார்ப்பதற்காக எந்த இலவசமும் இலவசம் அல்ல. கண்ணுக்குத் தெரியாத விலை ஒன்று அதில் இருக்கும்.
|
|
 |
 |
 |
 |
பி.இளங்கோவன், குளித்தலை.
|
 |
இன்றைய கம்யூனிஸ்டுகள்?
|
 |
குழப்பங்களின் நிகண்டு இந்த நிகண்டில் பல குழப்பங்கள் இருக்கும். (அதைப்) படிப்பவர்களின் பார்வைக்கேற்ப அதில் பொருள் இருக்கும்.
|
|
 |
 |
 |
 |
ஜி.புருஷோத்தமன், மணப்பாறை.
|
 |
அமெரிக்கப் பொருளாதாரம் எப்படியிருக்கு?
|
 |
அமெரிக்காவில் இப்போது ஒரு சந்தையும் சரியாயில்லை. அதற்கு நமது பேரன், பேத்திகளோட ‘பிக்கி பேங்க்’ (Piggy Bank)கே பரவாயில்லை என்று நினைக்கிறேன். பேசாமல் அவர்களோடு சமரசம் செய்து கொண்டு அதிலேயே சேர்த்து வைக்கலாம்.
|
|
 |
|
|
 |
 |
 |
 |
சி.முருகன், கூடுவாஞ்சேரி.
|
 |
பொய்யை நம்பி ஏமாறுகிறார்களே?
|
 |
இப்போதா ஏமாறுகிறார்கள்? இது நமது வழிச் சொத்து! பொய் மானை நம்பி இராமன் போகலையா? பொய்யை நம்பி ஏமாறுவது நமக்குப் புதிதல்ல.
|
|
 |
 |
 |
 |
கே.எஸ்.எஸ். கீழ்க்கட்டளை.
|
 |
இயக்குநர் ஸ்ரீதருடன் உங்களுக்கு ஏதும் மலரும் நினைவுகள் உண்டா?
|
 |
நான் தி.நகர்வாசியாக இருந்த நாள்களில் எங்கள் தெருவுக்கு மிக அருகில்தான் ஸ்ரீதரின் வீடு. தெருப்பெயர் கூட மறக்கவில்லை. வெங்கட்ராமன் தெரு. ஸ்ரீதரின் மச்சான் பரணி எங்களுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர். இவர் ஸ்ரீதரின் மனைவி தேவசேனாவின் தம்பி. ஸ்ரீதரின் மிடுக்கான தோற்றம், எப்போதும் வெள்ளை உடை, மிடுக்கான சிகரெட் பிடிப்பு, அவரே ஒரு நாயகர். தோல் தொழிற்சாலை நண்பர் ஒருவர் என் தொழில் சார்ந்த ‘நண்பர் ஒருவரைப் பார்க்க நீலாங்கரை போகிறேன்?’ வருகிறீர்களா என்றார். ‘ஊம்’ என்றேன். பார்த்தால் இயக்குநர் ஸ்ரீதர். ஸ்ரீதர் திரைத்துறைக்குப் பிறகு தோல் துறையில் இருந்தார் என்பது பலர் அறியாத செய்தி. அறிமுகம் ஆனபோது அவர்கள் தொழில் பற்றிப் பேசினார்கள். என்னிடம், “தமிழ்வாணன் என் நல்ல நண்பர்” என்று மட்டும் ஸ்ரீதர் பேசினார். திரையுலகில் மசாலாக்களிலிருந்து மாறுபட்ட கதைகளைத் தந்து உள்ளம் தொட்ட உன்னத இயக்குநர்.
|
|
 |
 |
 |
 |
எஸ்.ஞானசேகரன், சேலம்.
|
 |
விழாக் காலங்களில் இரயில்வே ரிசர்வேஷன் உடனே முடிந்து போகிறதே?
|
 |
ஏதோ அரசியல் விழாக்கள் மாதிரி அடையாளத்திற்கு ஒரேயொரு டிக்கெட் தருகிறார்கள். உடனே தீர்ந்து போச்சு என்கிறார்கள். ஒரு வேளை இரயில்வேக்கும் டிராவல்ஸ் நிறவனங்களுக்கும் உள்ளங்கை அரிப்பாக இருக்குமோ?
|
|
 |
|
|