Mittai in shooting time
கதாநாயகி துப்பிய தண்ணீரை தன் வாயில் பிடித்த கதாநாயகன்!

பெண் ஒருத்தி, இரண்டு கணவர்களுடன் மணக்கோலத்தில் நடந்து வருவது போன்ற மிட்டாய் திரைப்பட போஸ்டர்கள் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.
இதே மிட்டாய் திரைப்படத்தில் அடுத்த சர்ச்சைக்குரியக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்பட நாயகி மாயா உண்ணி தன் வாயில் தண்ணீரை நிரப்பி, செடிக்கு தண்ணீர் விடுவது போல துப்ப, அதை கதாநாயகன் பிரபா தன் வாயில் பிடிப்பதுபோல காட்சி எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்தப் படப்பிடிப்பு நடைபெற்றது. நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு அந்தக் காட்சி படமாக ஆரம்பித்தது.
கதாநாயகி மாயா உண்ணி வாயில் தண்ணீரை நிரப்பிக் கொண்டார். காட்சியில் நடிக்க தான் தயார் என்பதுபோல், அவர் தனது கட்டை விரலை உயர்த்தினார். இந்த சமிக்கையை புரிந்துகொண்ட இயக்குநர் அன்பு ஷாட் ரெடி என்றார்.
ஒளிப்பதிவாளர் காமிராவை சுழற்ற ஆரம்பித்தார்.ஆனால், மாயா உண்ணியோ தண்ணீரை துப்புவதற்கு பதில் ஒரு பெரிய தும்மல் போட்டார். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட மாயா உண்ணி, அடுத்த டேக்குக்குத் தயாரானார்.
இந்த டேக்கில் மாயா உண்ணி துப்பிய தண்ணீர் கதாநாயகன் பிரபாவின் வாயில் விழுவதற்கு பதிலாக, அவருடைய சட்டையை நனைத்தது. இப்படியே இந்தக் காட்சியை எடுப்பதற்குள் 20 டேக்குகள் ஓடிவிட்டது.
20 ஆவது டேக்கில் மாயா உண்ணி துப்பிய தண்ணீரை மிகச் சரியாக தன் வாயினால் கேட்ச் பிடித்தார் பிரபா. அப்போது நேரம் மாலை 5.15.
ஆக, இந்த அற்புதமான காட்சியை, உன்மத்தமாக எடுக்க 3 மணி நேரம் ஆயிற்று. என்ன ஒரு டெடிகேஷன் எல்லாருக்கும்!
துப்புவதற்கும், அதை காட்ச் பிடிப்பதற்கும் கடல் நீர் தான் என்று சொல்லியிருந்தால் ஒரே டேக்கில் காட்சி ஓ.கே. ஆகியிருக்காதா?
Related Posts Title
Tags: Maya Vunni, Mittai movie, Prabha, பிரபா, மாயா உண்ணி, மிட்டாய்