Sunday, 26 Oct 2008

Happy Diwali

happy-diwali.jpg

சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளி யுண்டாம் - பெண்ணே!
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச்சுடராம்-பெண்ணே!
உள்ளத்தழுக்கும உடலிற் குறைகளும்
ஓட்ட வருஞ் சுடராம் - பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம் _ பெண்ணே!
தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது
தோற்றமுறுஞ் சுடராம் _ பெண்ணே!
மூன்று வகைப்படும் கால நன்றென்பதை
முன்னரிடுஞ் சுடராம் - பெண்ணே!
பட்டினந் தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிர் சுடராம் - பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காண வொளிர் சுடராம் - பெண்ணே

- அமரகவி பாரதியார்

வாசகர்கள் இன்று தீபாவளியை மட்டும் கொண்டாடவும்.
செய்’தீ‘யை இன்று தேடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Related Posts Title


Leave a Reply