Friday, 24 Oct 2008
தீபாவளி ரிலீஸ்…
அஜீத், பரத் திரைப்படங்கள் போட்டி
இந்த தீபாவளிக்கு 6 திரைப்படங்கள் வெளியாகின்றன.
அஜீத்தின் ஏகன், பரத் நடிக்கும் சேவல் ஆகியவை வெளியாகின்றன. இவற்றுடன் அஜந்தா, தீயவன், மேகம் சாமிடா என்ற திரைப்படங்களும் வெளியாகின்றன. பிரகாஷ்ராஜ், த்ரிஷா அப்பா மகளாக நடித்திருக்கும் ‘அபியும் நானும்’ கடைசி நேரத்தில் வெளியாகலாம்.
அஜீத்தின் ஏகன் திரைப்படத்தை பிரபல நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் இயக்கியுள்ளார். இவர் இயக்கும் முதல் திரைப்படமும் இதுவே. இசை யுவன் சங்கர் ராஜா. சுமார் ரூ.18 கோடி செலவில் ஏகன் தயாராகியுள்ளது.
இந்தியில் வெற்றி பெற்ற ‘மெயின் ஹூன் நா’ என்ற திரைப்படமே ஏகனாக தமிழில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். அஜீத்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். நவதீப் - பியா எனும் இளம் காதல் ஜோடி ஒன்றும் படத்தில் உண்டு.
ஏகன் என்றால் எல்லாம் தெரிந்தவன் என்று பொருளாம். இதில் அஜீத் அதிரடி ஆசாமியாக நடித்திருக்கிறார்.
பிரபலப் புள்ளி ஒருவரின் மகளைக் கடத்த தீவிரவாதக் கும்பல் முயற்சி செய்கிறது. காவல்துறை அதிகாரியான அஜீத், அந்தப் பெண் பயிலும் கல்லூரியில மாணவனாகச் சேர்ந்து, அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவதுதான் கதை.
பரத் நடிக்கும் சேவல் திரைப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். ஜீ.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பரத் ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்துள்ளார். சிம்ரன் முக்கிய வேடத்தில் வருகிறார். பரத் அடிதடி நாயகனாக நடித்திருக்கிறார். விதவை மறுமணத்தை வலியுறுத்தும் திரைப்படம் இது. விதவையான பூனம் பாஜ்வாவை மணக்கும் பரத், சமூகத்தின் எதிர்ப்புகளை சமாளிப்பதுதான் கதை.
மேகம் திரைப்படம் ஒரு சைக்கோ மருத்துவர் பற்றிய கதை. அந்த மருத்துவரால், மனைவியை இழக்கும் இளைஞன் மாறுவேடத்தில் வந்து மருத்துவரை பழி தீர்க்கிறான். ஜீவரத்னம் என்ற புதியவர் இயக்கி உள்ளார்.
அஜந்தா திரைப்படத்தை ராஜ்பா ரவிசங்கர் இயக்கியுள்ளார். கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படம் இது.
Link for Aegan
Link for Seval
Link for Abhiyum Naanum
































