‘பஞ்ச்’ பாலு
தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.
பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!
அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.
பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?
…………………..
மத்திய அரசை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே மேலோங்கியுள்ளது
-ஜெயலலிதா
மக்களுக்கு எண்ணம் வந்ததோ இல்லையோ, உங்களுக்கு வந்துருச்சுன்னு சொல்லுங்க. மத்திய அரசை ஆட்டிவைக்க வாய்ப்பு கிடைக்காமல் நீங்கள் ஏங்குவதும் மக்களுக்குப் புரிகிறது. அதுக்காகவெல்லாம் மாத்திடுவாங்கன்னு கனவு காணாதீங்க!
தே.மு.தி.க. இளைஞரணி மாநாட்டிற்கு ஆளும் கட்சியினரால் தொடர்ந்து தொல்லை ஏற்பட்டாலும், மழை இடையூறு ஏற்படுத்தும் என நல்ல உள்ளம் படைத்த மக்கள் அஞ்சுகின்றனர். ஆனால் எந்தத் தடையையும் சந்தித்து வெற்றிகொள்ளும் ஆற்றல் தே.மு.தி.க. தொண்டர்களுக்கு உண்டு. மழையால் மட்டுமல்ல எக்காரணத்தைக் கொண்டும் மாநாடு தள்ளி வைக்கப்படாது.
-விஜயகாந்த்
ஏதாவது காரணம் முன்னிட்டு, இந்த மாநாட்டுக்கு தடை ஏற்படாதா, அதை மக்களிடம் சொல்லி அனுதாபம் தேட முடியாதா, அரசியல் செய்ய முடியாதா, ஆளும் கட்சியின் பெயரை கெடுக்க முடியாதா என்ற உங்கள் ஆசைகள் வெளிப்படையாகத் தெரிகிறது. கவலைப்படாதீங்க… அப்படியெல்லாம் தடை விதிச்சு, உங்களை இன்னும் பெரிய ஆளாக்க கலைஞர் ஒண்ணும் அரசியல் கத்துக்குட்டி அல்ல. நீங்களா புலம்ப வேண்டியதுதான்.
இலங்கை இனி, சிங்கள நாடு. சிங்களர்களுக்கு அடிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தமிழர்களுக்கு இங்கு இடமில்லை.
-இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா கொக்கரிப்பு
ஆதிக்கச் சக்திகளுக்கு தமிழன் அடிபணிந்ததாக வரலாறு இல்லை. கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழர்கள் மீதான போரை உங்களால் தொடரத்தான் முடிகிறதே ஒழிய, முடிக்க முடிந்ததா? ஒருவேளை அது முடிந்தால் அது, தமிழர்களின் வெற்றிக்குப் பிறகு கிடைக்கும் முடிவாகத்தான் இருக்கும் என்பதை ஈழத்தமிழர்கள் நிரூபிப்பார்கள்.
சில ஆண்டுகளாக அரசியல்வாதிகளை கவனித்து வந்தேன். அவர்களின் எந்தச் செயலும் எனக்குப் பிடிக்கவில்லை. அவர்களால் தான் சமுதாயம் சீரழிகிறது. மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். யாரும் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளுக்கும் அரசியல்வாதிகள்தான் காரணம். அதனால் தான் குடியரசுத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தேன்.
-குடியரசுத் தலைவருக்கு இ மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட பொறியாளர் ஸ்ரீராம் வாக்குமூலம்
நீங்க சொல்றது எல்லாம் சரிதான்! அதுக்காக நாமும் அவர்களைப் போலவே தரம் தாழ்ந்து நடந்துகொள்ள வேண்டுமா என்ன? அல்லது நாம் எல்லோரும் ரமணா ஆகிவிட முடியுமா? என்னதான் குடியரசுத் தலைவர் அரசியல்வாதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் ஒரு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரிதான் என்பது உங்களுக்குத் தெரியாமல போனது துரதிருஷ்டம். நம்மகிட்டதான் ஓட்டு என்னும் சக்திமிக்க ஆயுதம் இருக்கே… அதைச் சரியாகப் பயன்படுத்தினால் நல்லவர்கள் மட்டுமே நம்மை ஆளும் சூழ்நிலையைக் கொண்டு வரமுடியாதா என்ன? பேட் லக் ஸ்ரீராம்!
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு கொண்டுவர முதல் கையெழுத்து போடுவோம்.
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ்
அப்ப இப்ப போலவே எப்பவும் தமிழன் தண்ணியடிச்சுட்டு, டான்ஸ் ஆடிட்டே இருக்கலாம்னு சொல்லாமல் சொல்றீங்களா?
புலிகள் மீதான தடையை நீக்கிவிட்டு, பிரபாகரனை ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கு உதவி செய்யச் சொன்னால், பாகிஸ்தானியர்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஒழியும்.
-சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே
தமிழனைத் துரத்தின இவருக்கு, தமிழனின் வீரம் பற்றி இப்பதான் புரிஞ்சது போலிருக்கு. அதுக்காக இப்படியெல்லாம் உளறக்கூடாது.
Punch Balu’s Old punches
Related Posts Title































